பாமினியிலிருந்து தமிழ் 99 நோக்கி

2008 ல் செய்ய வேண்டிய வேலைகளுள் ஒன்றாக, பாமினி முறையில் இருந்து தமிழ் 99 முறைக்கு மாறுவது என்று முடிவு செய்தேன்.

 மாற நினைத்ததற்கு முதல் காரணம், அனைத்திற்கும் தமிழில் ஒரு நியமமான முறை இருக்க வேண்டும் என்று நினைத்ததுதான். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு, இல்லாவிட்டால் வீழ்வுதான். அதைவிட தமிழைத்த தமிழாய் தட்டச்சிட வேண்டும் என்பதும்தான். இம் முயற்சியில் ஈடுபட ரவியின் பல கட்டுரைகளும், தமிழ்99.org என்ற தளமும் உந்துதலாக இருந்தன. 

ஆரம்பத்தில் தமிங்கிலீஸ் முறையில் இருந்து பாமினி முறைக்கு மாறியதால் இந்த முறையும் மாறுவது அவ்வளவு கடினமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் மாற முயற்சித்த போதுதான் நினைத்தளவிற்கு இலகுவான காரியமல்ல என்று புரிந்தது. நான் கடந்து வந்த போது ஏற்பட்ட தடங்கல்களையும் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டேன் என்பதையும் எழுதி வைத்தால் மற்றவர்களுக்கும் பயன்படும் என்று முடிவு செய்தேன்.

  

ஆரம்பத்தில் பாமினி, தமிழ் 99 ஆகிய இரண்டு முறைகளிலும் தட்டச்சிட்டேன். ஆனால் இதில் நடந்தது என்வென்றால் பெரும்பாலான நேரங்களில் பாமினியிலேயே தட்டச்சிட்டேன். இந்தக்கட்டத்தில் பாமினியை ஒரேயடியாக விடாவிட்டால் தமிழ் 99 பழக முடியாது என்று உணர்ந்து கொண்டேன்.

 

இக்கால கட்டத்தில் NHM Writer, மூலம் தமிழ் 99 முறையிலும் இ-கலப்பை மூலம் பாமினி முறையிலும் தட்டச்சிட்டுக் கொண்டிருந்தேன். அதிரடியாக NHM writer நீக்கி விட்டு தமழ் 99 இ-கலப்பையை கணனியில் பதிந்து கோண்டேன். இப்போது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ் 99 ல்தான் தட்டச்சிட்ட வேண்டும்.

 

NHM writer பாவிப்பதில் இரண்டு பிரைச்சனைகள் இருந்தன.

 1. இதில் பல தட்டச்சு முறைகள் இருப்பதால், மனக்கட்டப்பாடு இல்லாமல் பழைய முறையில் தட்டச்சிடுவீர்கள். காரணம் முன்பு பாமினியில் நிமிடத்திற்கு 40 சொற்களுக்கு மேல் தட்டச்சிடுவேன். இப்போது நிமிடத்திற்கு 4-8 வரை தட்டச்சிடும் போது கடுப்பேறி பழைய முறைக்கு மாறத்துடிப்பீர்கள்.

  

 1. NHM writer ல் ஒரு எழுத்தை எழுதினால் எழுதினதுதான். மாற்ற முழு எழுத்தையும் மாற்ற வேண்டும்.

 

உ+ம்: த + இ = தி

 

இங்கே நீங்கள் தவறுதலாக க்குப் பதிலாக யை அமுக்கி விட்டால் தீ கிடைத்துவிடும். மீண்டும் தி யாக மாற்ற முழு எழுத்தையும் அழிக்க வேண்டும். பின்பு முதலில் இருந்து + என்று தட்டச்சிட வேண்டும். ஆனால் இ-கலப்பையில் தீ இருக்கும் போது Backspace ஐத் தட்டினால் மீண்டும் கிடைக்கும். பின்னர் யைத்தட்ட தி கிடைக்கும்.

 முறை மாறுபவர்கள் கடும் வெறுப்படன் புதிய முறையில் தட்டச்சிட்டுக் கொண்டிருப்பார்கள். இ-கலப்பை அவர்கள் மர விரக்தியைக்குறைக்க உதவும். NHM கடுமையாக கடுப்பேற்றும். புதிய முறையில் பரீச்சயமான பின்பு NHM Writer க்கு மாறலாம் என்பது என் தாழ்மையான பரிந்துரை. 

தமிழ் 99 ல் தட்டச்சிடும் போது On-Screen விசைப்பலகை ஒன்று இருந்தால் நல்லம் என்று தேடிய போது யாகூ widget கிடைத்தது. ஏற்கனவே ஆங்கல தட்டச்சு தெரியும் என்பதால் இதில் பார்த்துக் கொண்டு 3 வாரங்கள் வரை தட்டச்சிட்டேன். அதன் பின்னர் எழுத்துக்கள் மனதில் பதிந்த பின்னர் இதன் தேவை அகன்று விட்டது. ஆரம்ப பயனர்களுக்கு இரு ஒரு அருமையான கருவி.

 

பாமினி பயனர்களுக்கு இதற்கு மாறுவதால் முன்பு இருந்ததை விட அதிக வேகம் எடுத்தாலும் ஒப்பீட்டளவில் பெரிய வித்தியாம் இருக்கப் போவதில்லை. ஆனால் தமிங்கல முறையில் இருந்து மாறுபவர்களுக்கு கடும் வித்தியாசம் தெரியும்.

  

சரி இப்போ தமிழ் 99 க்கு மாறி விட்டேன் என்னால் பாமினியில் தட்டச்சிட முடியுமா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. அடித்துச் சொல்கின்றேன் சத்தியமாக முடியாது. எந்த விசைக்கு எந்த எழுத்து என்பதை மறந்தே விட்டேன். இனிமேல் விரும்பினாலும் அதற்கு மாற முடியாது. அதையிட்டு கவலையும் இல்லை.

 

இதற்கான காரணம், தமிங்கல முறையில் ஆங்கிலத்தில் யோசித்து தமிழைத் தட்டச்சிடுகின்றோம். ஆனால் தமிழ் 99, பாமினி முறைகளில் தமிழாகவே தட்டச்சிடுகின்றோம். எனவே பாமினி, தமிழ் 99 இரண்டிலும் ஒருவர் தட்டச்சிடுவது சாத்தியம் இல்லை.

 

மாறியதால் மாற்றங்கள் என்ன என்று கேட்கின்றீர்களா?

 1. இப்போது நானும் வினைத்திறனாக குறைந்த விசை அமுக்கத்துடன் அதிகளவு எழுத்துக்களைத் தட்டச்சிடுகின்றேன்.
 2. தமிழை ஒரு நியமத்திற்கு கொண்டுவருவதில் என்னாலான ஒரு சிறிய பங்களிப்பு.
 3. பொங்குதமிழ் எழுதிக்குப் பதிலாக, தமிழ99.org எழுதியைப் பயன்படுத்துகின்றேன்.
 4. சாதித்த பெருமை 😉

 

இப்படிப்பல….!!! பாமினி, தங்கிலீஸ் பயனர்களே… தமிழை தமிழாகத் தட்டச்சிட வாருங்கள். நினைத்தால் முடியாத்து எதுவும் இல்லை. 2 மாதங்களில் பழைய வேகத்தை அடையலாம். தமிழுக்காக 2 மாதங்கள் கஷ்டப்பட முடியாதா என்ன?

 

தமிழ் 99 உடன்,

மயூரேசன் 

இக்கட்டுரை தமிழ் 99 ஊக்குவிக்க எழுத்தப்பட்டுள்ளதால் இதன் உள்ளடக்கத்தை மாற்றாமல் எங்கு வேண்டுமானாலும் என் அனுமதியில்லாமல் பாவிக்கலாம்.

 

27 thoughts on “பாமினியிலிருந்து தமிழ் 99 நோக்கி”

 1. //NHM writer பாவிப்பதில் இரண்டு பிரைச்சனைகள் இருந்தன.

  இதில் பல தட்டச்சு முறைகள் இருப்பதால், மனக்கட்டப்பாடு இல்லாமல் பழைய முறையில் தட்டச்சிடுவீர்கள்//

  ?? are you sure e-kalappai has only one way to input?

  //பொங்குதமிழ் எழுதிக்குப் பதிலாக, தமிழ99.org எழுதியைப் பயன்படுத்துகின்றேன். //

  Personally, until anti-eelam Indians and their bootlicking eelam and tamilnadu tamil bloggers stop controlling tamil and stop braggarding that they are the pioneers in each and every tamil related issue, I want and wish tamils to use e-kalappai, murasu-anjal and Baamini. Have you ever seen INFITT people reach out Baamini using Tamils, even though some of the INFITT people are very pro-eelam? Now INFITT is being little by little swallowed anti-eelam tamil personalities. Once the digestion is got done, we can see the reWake up buddy

  Of course, I can not expect this mentality from some eelam tamils who damn care more about why Abdul kalam’s speech is not on TV rather than condemning anti-eelam tamil ranting Jeyalalitha Jeyaram.

 2. மயூ, தலைப்பை மாத்துங்க 🙂 பாமினி, வெறுப்புன்னு இலங்கை எதிர் பிற நாடுகள் பிரச்சினையாகிடப் போகுது 🙂

  நீங்கள் சொன்னது போல் பாமினியில் இருந்து தமிழ்99க்கு மாறுவது கடினம் என்பதால் நான் அதைப் பெரிதாக எதிர்ப்பார்ப்பதில்லை. தமிங்கிலக் காரர்கள் மாறினால் போதும்.

  ஆனால், பாமினியில் இருந்து தமிழ்99க்கு மாறிய பிறகு அவ்வளவு வேகம் கூடுதல் இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. ஏனெனில் 2 மாதம் முயன்று வேகம் இல்லையென்றால் மாறுவது பயனுள்ளதா என்று யோசனை வரும். ஒரு வேளை இன்னும் சில நாள் தமிழ்99 பயின்றால் வேகம் கூடுமோ? ஒரு சில மாதங்கள் கழித்து இந்த இடுகையில் உங்கள் தட்டச்சு வேகம் குறித்து இற்றைப்படுத்துங்கள்.

 3. மயூரன்,

  நீங்கள் பாமினி முறையில்தான் தட்டச்சி வந்தீர்களா?
  கூகிள் எழுத்துரு மாற்றி வசதியை விளம்பரப்படுத்தியதை வைத்து நீங்கள் தமிங்கல முறையாளர் என்று நினைத்திருந்தேன். (அப்படிக் கருதியே வேறோர் இடுகையில் பின்னூட்டமும் இட்டிருந்தேன்)

  நிற்க,
  தமிழர்களுக்கு நியம விசைமுறையொன்று தேவை என்றளவில் ‘தமிழ்நெற் 99’ முயற்சிக்கலாம். ஆனால் தமிழ்ச்சிந்தனையில் தட்டச்சுதல் என்றளவில் பாமினியும் சரியானதே.

  //அதைவிட தமிழைத்த தமிழாய் தட்டச்சிட வேண்டும் என்பதும்தான். //
  பாமினியிலிருந்து தமிழ்நெற்றுக்கு மாற இந்தக் காரணம் தேவையில்லை.

  //எனவே பாமினி, தமிழ் 99 இரண்டிலும் ஒருவர் தட்டச்சிடுவது சாத்தியம் இல்லை.//
  ஓரளவு தவறான முடிபு.
  நான் தட்டச்சியிருக்கிறேன்.
  பால்ஸ் கணினி அகராதி பயன்பாட்டுக்கு வந்த தொடக்கத்தில் அதைப் பயன்படுத்துவதற்காகவே தமிழ்நெற் 99 முறையிலும் தட்டச்சிப் பழகினேன். பாமினியில் மிகச்சரளமாகத் தட்டச்சத் தொடங்கி நீண்டநாட்களின் பின்தான் தமிழ்நெற் 99 பழகினேன். ஒப்பீட்டளவில் பாமினியைவிட அதிகநாட்கள் எடுத்துக்கொண்டது உண்மைதான். (விசைப்பலகை பார்க்காமல் பாமினி முறையில் தட்டச்சிப்பழக வெறும் 3 நாட்கள் மட்டுமே போதுமானதாக இருந்தன. அதுவும் ஆங்கிலத்தில் தட்டச்சத் தெரியாமலேயே.)
  விசைப்பலகை பார்க்காமலேயே தமிழ்நெற் 99 முறையிலும் நான் தட்டச்சினேன். பயன்பாடு குறைவாக இருந்ததால் (பெரும்பாலும் பால்ஸ் அகராதிக்காக மட்டும்) ஒப்பீட்டளவில் பாமினியை விட வேகம் குறைவாக இருந்திருக்கும்.
  இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் இரண்டுமே தமிழ்விசைகளைக் கற்பனை பண்ணி தட்டச்சும் முறைகள். எனவே சடுதியாக ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது கடினம். தமிழ்நெற் 99 முறையில் தட்டச்சிக்கொண்டிருந்துவிட்டு உடனடியாக அடுத்த பந்தியை பாமினியில் தட்டச்சத் தொடங்கினால் சிக்கல்தான். முதல் ஐம்பது சொற்களை முழுக் கவனமுடன் மெதுவாகத் தட்டச்ச வேண்டி வரலாம். பின்னர் தன்பாட்டுக்கு மனம் பாமினி முறையில் எடுத்துக்கூட்டிக்கொண்டிருக்கும்.
  இப்போது பாமினி முறையைவிட சற்று வேகக்குறைவுடன் – ஆனால் சராசரியான வேகத்துடன் தமிங்கல முறையிலும் என்னால் தட்டச்ச முடியும். தமிங்கல முறை எழுத்துரு மாற்ற வசதிகொண்ட இ-கலப்பை நிறுவப்பட்டிருக்கும் நண்பனின் கணினியையும் அடிக்கடி பயன்படுத்துவதால் அந்த முறையிலும் இடையிடையே தட்டச்ச வேண்டிய தேவை வந்துவிடுகிறது. ;-(
  இப்போது என்னால் தமிழ்நெற் 99 முறையில் தட்டச்ச முடியாது. காரணம் கடந்த மூன்று வருடங்களாக நான் அந்த முறையில் தட்டச்சியதே இல்லை. விசைகள் மறந்துவிட்டன. ஆனால் மீளப்பழக அதிகநாட்கள் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.
  நான் சொல்ல வருவது: பாமினி முறையிலும் தமிழ்நெற் முறையிலும் ஒருவர் தட்டச்ச முடியும் என்பதையே. ஆனால் ஏதோவொன்றில் அதிக தேர்ச்சியுடன் இருப்பார்.
  அதிகளவிலும் வேகமாகவும் எழுத ஏதோவொரு முறையைத் தெரிவு செய்திருப்பார்.
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  ** நீங்கள் செய்ததுபோல் பாமினியில் தட்டச்சும் வசதியை முற்றாக நிறுத்திவிட்டு புதிய எழுத்துருவைப் பழகியது மிகநல்ல முறை.
  **ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சப் பழகுபவர்கள் தொடக்கத்திலேயே பத்து விரல்களையும் பயன்படுத்தி சரியான முறையில் பழகுவதுதான் சிறந்த வழி. ஒவ்வொரு விசையையும் அதற்குரிய சரியான விரல்களால் அழுத்திப் பழகுவது – தொடக்கத்திலேயே அந்தமுறையில் பழகுவது சாலச் சிறந்தது. விசைப்பலகையைப் பார்க்காமலேயே தட்டச்சுவது என்றால் கட்டாயம் இம்முறையில் மட்டுமே பழக வேண்டும்.
  ** தமிங்கில முறையிலிருந்து பாமினி அல்லது தமிழ்நெற் முறைக்கு மாறுவது, இலக்கணப் பிழைகளைக் குறைக்க உதவும். முக்கியமாக ஒற்றுப்பிழைகளைக் குறைக்க உதவும். கையால் எழுதும்போது சரியானமுறையில் ஒற்று மிக எழுதும் ஒருவரே தமிங்கல முறையில் தட்டச்சும்போது ஒற்றுமிகாமல் எழுத நேரும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

 4. ஆமாம் ரவி, வேகம் அவளவாகக் கூட வில்லை என்பது வருத்தம்தான்.

  பிரைச்சனை ஆக்க நினைப்பவர்கள் அதைப்பிரைச்சனை ஆக்கியே தீர்வார்கள். அதைப்பற்றி அக்கறைப்படுபவர் நான் அல்ல!!! 😆

  நிச்சயமாக இயற்படுத்துகின்றேன்!!!

 5. மயூரேசன்
  புலம்பெயர்நாட்டிலே ஈழக்கூட்டம் ஒன்றிலே போனேன் என்று ஒரு பதிவினை எழுதிவிட்டால், சிலருக்குப் பிரச்சனை தீர்ந்துவிடும் 🙂 அதாவது, கணிமொழிக்கு வழிபோட்டவர் என்ற பட்டம் அவர்களுக்கு ஒட்டிக்கொண்டால் போதுமானது 🙂 ஆனால், நூற்றாண்டு காலமாக மொழியினைக் கைவசப்படுத்தும் காப்பதும் மூன்னேற்றுவதும் தம் குழுமத்தினதே என்ற இரும்புப்பிடியினைக் கொண்டு செல்லச் செயற்படும் சிலரின் அரசியலின் பின்னணிகளைப் பற்றி இந்த அய்யாக்களுக்கும் சாமிகளுக்கும் அக்கறையில்லை. நீங்களும் அக்கறைப்படாமலிருக்கலாம். தமிழ் என்று சொன்னால், பாரதியும் கல்கியும் சுராவும் ஜெமோவும் சாருவும் சிவாஜியும் ரஜனியுமேதான் என்று தொங்கிக்கொண்டேயிருங்கள். ஆதீனமும் பகீரதனும் கிவாஜவும் ஜெமோவும் நாவலருக்கும் சம்பந்தனுக்கும் தளையசிங்கத்துக்கும் போனால் போகிதேன்று அங்கீகாரம் தந்ததுபோல வயிறு ஒட்டின நாய்க்கு உரொட்டித்துண்டு தூக்கிப்போட்டதுபோல தூக்கிப்போடுவார்கள். வாங்கிக்கொண்டு வரலாம். go and have a look how Project Madurai, INFITT and e-suvadai have changed and filled by certain tribe in the past few years; get a lesson. Stay on your own feet. Do NOT jump on anything that is promoted by some people even though they are marketed in very attractive way. Some people have to learn with their own bitter experience 🙂

  நிற்க; பிரச்சனை என்பதையே பிரைச்சனை என்று எழுதிக்கொண்டிருக்கின்றவர்களுக்கு எத்தட்டச்சு முறையினைப் பயன்படுத்தினாலும் தமிழ்ப்பிரச்சனை தீரப்போவதில்லை ;-)பெருந்தெருப்பள்ளிக்கூடத்துக்கு இப்படியும் ஒரு விதி 🙁

 6. வசந்தன் சொல்வது போல் தமிழைத் தமிழாக நினைத்து எழுத பாமினியும் உதவும். அந்தக் காரணத்துக்காக தமிழ்99க்கு மாறத் தேவை இல்லை.

  தேவை ஏற்படுகிற நேரத்தில் பாமினிக்கோ தமிங்கிலத்துக்கோ மாறுவது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு முறையில் தான் வேகம் மிகுந்து இருக்கும். அது எந்த முறையை நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்துக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து.

  என்னைப் பொறுத்த வரை தேவை ஏற்பட்டாலும் கூட தமிங்கில முறைக்குத் தாவுவதில்லை. திரும்ப என் சொந்தக் கணினிக்கு வந்து தமிழ்99ல் எழுதுவதே பரவாயில்லை என்றிருக்கிறது. இன்னொன்று நான் பத்து விரல்களையும் பயன்படுத்தப் பழக வேண்டும் 🙁 இப்போது 4, 5 விரல்களை வைத்து தான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

  அப்புறம், தமிங்கிலக் காரர்களுக்கு தமிழ்99 கூட உதவும் என்பதை தடித்த எழுத்துக்களில் போட்டு விடுங்கள் 🙂

  முதல் மற்றும் ஐந்தாம் மறுமொழிகளைத் தந்திருப்பவருக்கு – ஒருவர் பாமினியில் இருந்து தமிழ்99 மாற முயல்வதை ஈழ எதிர்ப்பு நடவடிக்கையாக நீங்கள் ஏன் புரிந்து கொள்கிறீர்கள்? மயூரேசன் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக மாறிப் பார்த்திருக்கிறார். அவ்வளவு தான். பொதுவாக, தமிங்கிலக் காரர்களைத் தான் தமிழ்99க்கு மாறச் சொல்கிறோமே தவிர, பாமினி போன்ற பிற தட்டச்சு முறைகளில் இருந்து மாறச் சொல்லிக் கேட்டுக் கொள்வதில்லை.

  மதுரைத் திட்டம், உத்தமம் எல்லாம் ஒரு சிலரின் கைகளில் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள், உங்கள் நண்பர்களும் இணைந்து இந்தத் திட்டங்களில் மாறுதலைக் கொண்டு வரப் பார்க்கலாம். அல்லது, நீங்களே புதிதாகவும் திட்டங்களைக் கொண்டு வரலாம். வேறு ஏதும் ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இருக்கப் போவதில்லை.

 7. முதலாம், ஐந்தாம் பின்னூட்டங்கள்…..

  ம். ஒருநேரத்தில் தமிழ்நெற் 99 முறையை எதிர்த்துக்கூட நாம் எழுதவேண்டி வருமோ? 😉 நாங்கள் பாமினியை இன்னும் விட்டுக்கொடாமல் இருப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் அவ்வப்போது அருளியவையும் காரணம்.

  எதற்கும் வலைத்தமிழ் வரலாறு எழுதத் தகுதியுடைய நீங்கள் விரிவாகச் சொன்னால் நன்று. பாலா ‘நான் கடவுள்’ படமெடுக்கிறதைப் போலத்தான் வலைத்தமிழ் வரலாறும்.

 8. வசந்தன் வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் நன்றி!

  பாமினி, தமிழ் 99 இரண்டு முறையிலும் தட்டச்சிடலாம் என்று நீங்க செல்றது எனக்கு சரி வரேல என்னால அப்படி தட்டச்சிட முடியேல.! முதலே சொன்னபடி அதைப்பற்றிக் கவலையும் இல்லை! 😆

  அனானி நண்பர் சொன்னதை ஒரு கருத்துச்சுகந்திரம் அடிப்படையில் பதிந்தேனே ஒழிய, அவருக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை!!! அனானிகளுக்கு பதில் சொல்ல நமக்கு நேரம் இல்லீங்கோ!!!

  தமிங்கில முறை நான் பாவித்துப்பல வருடங்களாகின்றது, அதனால் அதைப்பற்றி அக்கறை இல்லை!

 9. /மதுரைத் திட்டம், உத்தமம் எல்லாம் ஒரு சிலரின் கைகளில் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள், உங்கள் நண்பர்களும் இணைந்து இந்தத் திட்டங்களில் மாறுதலைக் கொண்டு வரப் பார்க்கலாம். /

  Ravishankar,
  I always try to evade you as I do not want my blood pressure go up for a self-claimed new age bloGuru. 😉 Overrating yourself is not my problem, but underrating others is my problem and if you continue in this tone, it will be forced on you as your problem too for an “extended play time.” 🙂

  This is the nth time you are trying to give a lecture to people on something in what they contributed in one or other way even before you have heard about them. Save your energy for somebodyelse for some other day 🙂

  BTW, can you tell me what you have done for Project Madurai to this date? 🙂

  mayurasan,
  it is fine not responding me. As a matter of fact, I do not expect you to respond.

  You may be naive about the politics behind the digital tamil tech. If not, my apologies.

  What mainly bothered me with this post (and in few posts that Da Holliness Ravishankar and a post TBCD posted in the past) is the choices of words. “Bamini veRukkum”, negative tone on “thamizmaNam” and negative tone on “e-kalappai.” What you people intend may be differnet, but when a new blog reader sees these lines (s)he goes with the negative tone.

  BTW, if you hadn’t noticed, I have commneted with the way I do ./- and also gave my e-mail ID in my previous comment (and this one).

  vasanthan,
  still life is in unceasing wandering wavey motion. Yet to focus. Hopefully, in this summer, I would start gathering materials.

 10. 1,5,9 ஆம் மறுமொழிக்காரருக்கு – நீங்கள் கொடுத்த மின்மடல் மயூரேசனின் பார்வைக்கு மட்டுமே கிடைக்கும். பொதுவில் உங்கள் பெயர் /- என்றே தெரிந்தது. இதை வைத்து உங்களை ஊகித்தறியாமல், உங்கள் தமிழ் இணைய பங்களிப்புகளை அறியாமல் ஏதும் பேசியிருந்தால் மன்னிக்கவும் 😉

  நீங்கள் சுட்டிக் காட்டுவதற்கு முன்பே தலைப்பை மாற்றச் சொல்லி மயூரேசனிடம் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். வீணே, எதைக் குறித்தும் தவறான கருத்து பரப்பும் எண்ணம் இல்லை. TBCD அவரது பதிவில் எ-கலப்பை தேவை இல்லை என்று கூறியிருந்தது xerox = photocopy போலத் தான். தமிழ் எழுது மென்பொருள் தேவையில்லை என்ற தொனியிலேயே அவர் கூறியிருந்தார். இதில் தவறாக ஒன்றையும் விளங்கிக் கொள்ள வில்லை.

  மதுரைத் திட்டத்துக்கு என் பங்களிப்புகள் ஏதும் இல்லை. ஈடுபாடும் இல்லை. அதனால் குறை சொல்வதும் இல்லை.

 11. மயூரேசன், 1,5, 9, 11ஆம் மறுமொழிக்காரரின் மறுமொழிகளை நீக்கினால், நான் இட்ட மறுமொழிகளில் அவருக்கு அளித்த விளக்கங்கள் வரும் பாகங்களை மட்டும் திருத்தி வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

 12. 12 மறுமொழிகாரருக்கு
  எழுதியவரை -/. இப்படியே குறிப்பிடலாமே..

 13. /மதுரைத் திட்டத்துக்கு என் பங்களிப்புகள் ஏதும் இல்லை. ஈடுபாடும் இல்லை. அதனால் குறை சொல்வதும் இல்லை/
  in such case, it would have been better if you hadn’t lectured me, “மதுரைத் திட்டம், உத்தமம் எல்லாம் ஒரு சிலரின் கைகளில் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள், உங்கள் நண்பர்களும் இணைந்து இந்தத் திட்டங்களில் மாறுதலைக் கொண்டு வரப் பார்க்கலாம். அல்லது, நீங்களே புதிதாகவும் திட்டங்களைக் கொண்டு வரலாம். வேறு ஏதும் ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இருக்கப் போவதில்லை.”

  BTW,

  1. Why don’t you ask someone you “may know” involving with noolagam on why they work alone instead of joining hands with Project Madurai?

  2. Why do you not ask Dr. KaNNan how many of his current e-suvadai (thamiz muthusam) officers were part of his e-suvadai when he started it? (It is his own child, and I respect him a lot)

  3. Why do you not go and see how many of the current “executive members” in I(U)NFITT were part of webmasters list and related discussions in late 90’s?

  (If you see the same members shoot to stardom in the recent few years in both INFITT and e-suvadai, do not worry. In ten years, you will see how the history will be written, and even e-kalappai won’t have a mention in that history (see what happened to murasu-anjal in day to day life); anyway, your attempts will also go down as of someone’s, and suratha’s ponguthamiz won’t be mentioned. YOU DO NOT KNOW HOW THESE PEOPLE WORKED THROUGH THE HISTORY… THEY+THEM+THEIR+THEIRS –> THEY DID + THEY PRESERVED+THEY PIONEERED +THEY HERITAGE. GO Ayyasamay Ravishankar, go into the history as one of their toolbearer. YOU DO NOT UNDERSTAND WHAT THEY THINK WHEN THEY ENCOURAGE YOU; YOU DO NOT KNOW HOW THEY CONSOLIDATE THEIR BASE AND INTERESTS BY USING YOU. HAVE A BIG TALK AND OF COURSE IN TIMES SOME WORK ABOUT YOUR OPEN SOURCE AND ALL OTHER FREE THINKING LIBERATING IDEAS… ALAS! AT LAST THEY SUCK THEM AS THEIRS PUT INTO THE MARKET AND MEDIA, AND YOU GO AS A PAUPER OF ALL.

  THAT’S WHAT EVERY SINGLE WORD MATTERS AND EVERY SINGLE SYLLABLE MATTERS WHEN YOU RECORD THE THINGS AND TECHNOLOGY AND CHRONOLOGY.

  HOPE YOU KNOW WHAT I MEAN AND HOPE YOU BE PREPARED FOR DEALING WITH SUCH PEOPLE.

  I HAVE NOTHING MORE TO SAY.

  GOOD LUCK.

 14. /நீங்கள் சுட்டிக் காட்டுவதற்கு முன்பே தலைப்பை மாற்றச் சொல்லி மயூரேசனிடம் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். வீணே, எதைக் குறித்தும் தவறான கருத்து பரப்பும் எண்ணம் இல்லை. TBCD அவரது பதிவில் எ-கலப்பை தேவை இல்லை என்று கூறியிருந்தது xerox = photocopy போலத் தான். தமிழ் எழுது மென்பொருள் தேவையில்லை என்ற தொனியிலேயே அவர் கூறியிருந்தார். இதில் தவறாக ஒன்றையும் விளங்கிக் கொள்ள வில்லை. /

  if any super techtrekkie missed the simple language, I post what I posted earlier,
  “What you people intend may be differnet, but when a new blog reader sees these lines (s)he goes with the negative tone.” 😥 😥 😥 😥 😥 😥 😥

 15. அன்புள்ள /-

  நூலகம் திட்டம் ஏன் மதுரைத் திட்டத்தில் இருந்து விலகி இயங்குகிறது என்பதை நன்கு அறிவேன். அதே காரணங்களாலேயே நூலக நண்பர்களும் ஆதரிக்கும் தமிழ் விக்கிமூலம் திட்டம் போன்றவற்றிலேயே தற்போது ஈடுபாடு காட்டி வருகிறேன்.

  தமிழ் இணையத்தில் உள்ள அரசியல் குறித்த உங்கள் கவலையை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழ்99 என்ற விசைப்பலகை பற்றி பேசும் இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. எந்த மென்பொருளானாலும் அதன் பயன்பாட்டின் அடிப்படையிலேயே நிலைக்குமே தவிர, இன்னார் அறிமுகப்படுத்தினார்கள் என்பதற்காக யாரும் தவிர்க்கவோ, பரப்பவோ இயலாது.

  நன்றி.

 16. //vasanthan,
  still life is in unceasing wandering wavey motion. Yet to focus. Hopefully, in this summer, I would start gathering materials.//

  -/. ,
  நன்றி.

  இந்தக் கோடையிலாவது எதிர்பார்க்கிறோம்; பாலாவின் படத்தையன்று…(அதுவரை கோவில்களின் படத்தையாவது பார்ப்போம்) 😉

 17. அன்பின் -/. ,

  மொடேன் கேர்ள் ‘டாஷ் சிலாஷ் காரர்’ எண்டெழுதியும்கூட உங்கட சுருக்கப்பெயர் பெரியளவில வெளித்தெரியேல. 🙁

  குறிச்சு வைச்சிருக்கறம்.
  ஆங்கிலத்திற் பின்னூட்டமிடுவதைச் சாடுமொரு காலத்திலே மெல்ல நுள்ளுவமாம். 😉 😆

 18. //மொடேன் கேர்ள் ‘டாஷ் சிலாஷ் காரர்’ எண்டெழுதியும்கூட உங்கட சுருக்கப்பெயர் பெரியளவில வெளித்தெரியேல. 🙁 //

  Modern Girlம் ஃபுல் ஸ்டாப்பை விட்டுவிட்டவரோ!

  //ஆங்கிலத்திற் பின்னூட்டமிடுவதைச் சாடுமொரு காலத்திலே மெல்ல நுள்ளுவமாம்.//

  :mrgreen:

  இதற்கு அவர் தமிழில் பதிவொன்னு போடாமல் இருக்க ஆண்டவனை(?!) ப்ரார்த்தித்துக் கொள்கிறேன் 😳 😳 😳

 19. vasanthan
  aiyyaa,
  regarding engileeshu pinnuuttam:
  at work place, yet to settle down with my own computer with the administrative power to install e-kalappai. In times, I do typing in ponguthamiz maatri in Romanised way, and convert to copy & paste. That’s what in English.

  At home, no problem 🙂 anyway, I know too much talk leads nowhere. (See, THEY never do it. THEY push THEIR agenda swiftly and silently in real way with all the support of THEIR clans 🙁 ) yet, i fell into the trap after holding my temptation for sometime 😥

  ravishankar,
  ok. 💡

  mohandas, thanks (for not writing as ‘a foolstop there’) 😈 😈

 20. ரவிசங்கர்,
  நூலகம் திட்டத்தினர் என யாரைக்கருதுகிறீர்கள்?
  அவர்கள் ஏன் மதுரைத்திட்டத்தில் இருந்து விலகி இயங்குகிறார்கள் எனக்கூற முடியுமா?
  ஏன் என்று வெளியில தெரிஞ்சா பெரிய வெக்ககேடு.

 21. //அவர்கள் ஏன் மதுரைத்திட்டத்தில் இருந்து விலகி இயங்குகிறார்கள் எனக்கூற முடியுமா?
  ஏன் என்று வெளியில தெரிஞ்சா பெரிய வெக்ககேடு.//

  வெளியேதான் சொல்லுங்களேன். இதிலென்ன “உங்களுக்கு” வெட்கம் இருக்கிறது? 😆

 22. வணக்கம் நண்பர்களே! மிகவும் தாமதமாக இந்த தளத்திற்கு வந்திருக்கின்றேன். நான் பாமினி முறையில் தட்டச்சிடுபவன். அம்முறையில் பத்து விரல்களையும் பயன்படுத்தி வேகமாக எவ்வாறு தட்டச்சு செய்வது என கொஞ்சம் சொல்லி கொடுக்க முடியுமா? (எந்தெந்த விசையில் எந்த விரல்கள் இருக்கவேண்டும்)

 23. அய்யா தமிழ் 99 ஈ கலப்பை 3.0 விண்டோஸ்98 ல் இயங்கவில்லை எனவே ஈ கலப்பை 2.0 தான் என்னிடம் உள்ளது இதில் போனடிக் முறைதான் பயன் படுத்த முடிகிறது யாரிடமாவது தமிழ்99.கேஎம்எக்ஸ் கோப்பு இருந்தால் எனக்கு அனுப்பி வைத்தால் நல்லது. தயவு செய்து உதவவும்.

 24. @பாலசுப்பிர மணியன்
  வின்டோஸ் 98 மிகப் பழைய இயங்கு தளம். லினக்ஸ் உபுன்டுவிற்கு மாறலாமே??

Leave a Reply