நண்பன் தனேஷின் கவிதைகள்

“செருப்பில்லாமல் நடக்கும் போதுதான்
முள் குத்துகிறது,
நீ இல்லாமல் நடக்கும் போதுதான்
வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!”
“மரணப்பொழுதில்,
என் கண்கள் வாங்கிக்கொண்டு போகும்
கடைசிப் பரிசு
உன் முகமாக இருக்கட்டுமே!”

“நான் : போ! போ! போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் பண்ணிட்டுப்போ
நீ : என்ன?
நான் : அதான் …….. காரியம்”
உன் கால் தடம் எனும் கவிதைக்கு
இசை அமைத்துக்கொண்டு போகிறது
உன் கொலுசு !!!
நீ வாழ்வதால்தான்
இது பூவுலகம்
இல்லையென்றால்
வெறும் உலகம் !!!

நெடு நேரமாக என் பாடப்புத்தகத்தின்
ஒரே பக்கத்தில் நிற்கின்றேன்
அதில் உன் புகைப்படத்தை
வைத்திருப்பதால் !!!!

எனது பல்கலைக்கழக நண்பனின் காதல் கவிதை இங்கே அரங்கேறுகின்றது….

5 thoughts on “நண்பன் தனேஷின் கவிதைகள்”

  1. பின்னூட்டம் இட்ட அன்பர்களுக்கு நன்றி….

Leave a Reply