த லாஸ்ட் கிங் ஒஃப் ஸ்கொட்லான்ட் – விமர்சனம்

அண்மையில் பார்த்து தலை விறைத்த படம் என்றால் அது த லாஸ்ட் கிங் ஒஃப் ஸ்கொட்லான்ட் என்ற படமே. கதை பிருத்தானியாவில் ஆரம்பித்தாலும் சடுதியாகத் திரும்பி ஆபிரிக்காக் கண்டத்தின் பக்கம் சென்றுவிடுகின்றது.ஸ்கொட்லாந்தின் ஒரு மருத்துவப் பட்டதாரி பட்டம் பெற்றுக் கூத்தடிப்பதுடன் கதை ஆரம்பமாகின்றது. பின்னர் அவர் சேவை நோக்கில் மற்றும் புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள உகண்டா செல்கின்றார். இவர் உகண்டாவில் கால் பதிக்கும் நேரம் பார்த்து அங்கே ஒரு இராணுவப் புரட்சி ஏற்படுகின்றது. அந்த இராணுவப் புரட்சியாளர் யார் என்றால் அனேகம் பேர் அறிந்த இடியாமீன்.

புதிய புரட்சியாளரை உகண்டா மக்கள் பெரும் கூச்சலுடன் வரவேற்கின்றனர். இதே நேரம் கிராமம் ஒன்றில் எங்கள் நாயகன் வைத்தியராகச் சேவை புரியத் தொடங்குகின்றார். இளமைக் கொழுப்புகளும் அவரிடம் அதிகமாகவே இருக்கின்றது. படத்தின் பின் பாதியில் இந்தக் கொழுப்பு எந்தளவிற்கு அவரைக் கொண்டுபோய் விடுகின்றது என்று படம் பார்த்தால்தான் தெரியும்.

ஒரு விபத்தினூடாக உகண்டாவின் புதிய ஜனாதிபதி அமீனைச் சந்திக்கும் வாய்ப்பு இந்த இளம் வைத்தியர் நிக்கலஸ்சிற்குக் கிடைகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் இவர் ஒரு ஸ்டண்ட் வேலையையும் செய்து அமீனின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றார்.

மறுநாள் இவரைத் தேடி ஜனாதிபதியின் கார் வருகின்றது. காரில் இவர் தலைநகருக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கே ஜனாதிபதியினதும் அவரது குடும்பத்திற்கும் குடும்ப வைத்தியராகப் பணிபுரிய வேண்டுகோள் வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்னர் அதை ஏற்றுக்கொள்கின்றார்.

ஒரு கட்டத்தில் அமீனின் அடாவடித்தனங்கள் பற்றி அறிந்து, நாட்டைவிட்டு வெளியேற முயன்றாலும் அவரால் வெளியேற முடியாதவாறு அமீன் தடுத்துவிடுகின்றார். அனைத்தும் வெறுத்துப் போய் இருக்கும் வைத்தியர் நிக்கலஸ் அன்பைத் தேடி அலைகின்றார். கடைசியாக அந்த அன்பை அமீனின் மனைவி ஒருவரிடம் பெற்றுக்கொள்கின்றார் (அமீனின் மனைவிகள் பலர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்). இவர்களின் உறவு எல்லை மீறிப் போய் அமீனின் மனைவி கருத்தரித்துவிடுகின்றார். இதன் பின்னர் என்ன ஆனது என்பதை நான் சொல்லப் போவதில்லை நீங்களே பார்த்துத் தெரிந்ந்து கொள்ளுங்கள். 😉

சிறுவர்களுடன் உட்கார்ந்துபார்க்கும் படத்தினுள் இதனை அடக்க முடியாது. சில காட்சிகள் எல்லை மீறியதாகவும், வன்முறை உள்ளதாகவும் உள்ளதால் சிறுவர்களை இந்தப் படத்தை பார்க்க அனுமதியாதீர் என்பதே என் வேண்டுகோள்.

அமீனாக நடித்த நடிகர் அருமையாக நடித்துள்ளார். பாத்திரமாகவே மாறி கண்ணில் வெறி பீறிட்டுப் பறக்க பறக்க நடித்துள்ளார். அதனால்தான் அவருக்கு இதற்காக ஆஸ்கார் விருது கூடக் கிடைத்தது.

ஆபிரிக்காவின் அழகையும் அகோரத்தையும் ஒருங்கே படமாக்கியுள்ளார்கள். அதே போல உண்மைச் சம்பவங்களையும், கற்பனைப் பாத்திரங்களையும் சேர்த்து இந்தக் கதையைப் பின்னியுள்ளனர். உதாரணமாக பிரஞ்சு விமானம் கடத்தல் என்பன. என்னதான் சொன்னாலும் ஹொலிவூட் காரங்கள் ஹொலிவூட் காரங்கள்தான். என்ன அழகாக யோசித்து ஒரு பயங்கரமான திகில் கதை எழுதியிருக்கின்றார்கள். நேரம் கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

இதைவிட பிளட் டயமன் என்கிற படமும் பார்க்கக் கிடைத்தால் பாருங்கள், ஆபிரிக்காவை வெள்ளையர்கள் எவ்வாறெல்லாம் கொள்ளையடிக்கின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது இந்தத் திரைப்படம்.

8 thoughts on “த லாஸ்ட் கிங் ஒஃப் ஸ்கொட்லான்ட் – விமர்சனம்”

 1. நல்ல விமர்சனம் மயூரேசன்.
  சுருக்கமாவும் அதே சமயம் நிறைவாவும் இருக்கு!
  வாழ்த்துக்கள் !!

  //என்னதான் சொன்னாலும் ஹொலிவூட் காரங்கள் ஹொலிவூட் காரங்கள்தான்.//
  ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டியதுள்ளது!! இல்லையா?? 🙂

  நண்பர் ஜி ஹாலிவுட் படங்களை பத்தி ஒரு தொடர் எழுதறாரு,முடிஞ்சா படிச்சு பாருங்க!! 🙂

  http://veyililmazai.blogspot.com/2007/06/peter.html்

 2. that is a good review ,last king of scotland is the best film about idi ameen when compare it with movies of 80s.
  Whithakar is the best actor of the year there is no question about it but we can expect some more in coming years.
  After Denzil washington oscar board has opened its doors to coloured people finally.

 3. //இதைவிட பிளட் டயமன் என்கிற படமும் பார்க்கக் கிடைத்தால் பாருங்கள், ஆபிரிக்காவை வெள்ளையர்கள் எவ்வாறெல்லாம் கொள்ளையடிக்கின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது இந்தத் திரைப்படம்//

  ” பிளட் டயமன் ” இந்த திரைப்படம் உண்மையிலேயே ஒரு சிறந்த திரைப்படம். நாங்கள் பார்க்கும் ஒரு டைமண்ட் பின்னால் எத்தனை பேருடைய இரத்தம் சிந்தியிருக்கிறது என்று காட்டியிருக்கிறார்கள். ம்…. சிறந்த திரைப்படம். நீங்கள் இங்கே எழுதிய திரைப்படம் நான் என்னும் பார்க்கவில்லை. அதையும் பாாப்போம். :-))

 4. ஹோட்டல் ருவாண்டாவும் உங்களுக்குப் பிடிக்கலாம். பாருங்கள். நீங்கள் குறிப்பிட இரண்டு படங்களையும் என் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். டிவிடி எடுக்கணும்

 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருள். ஆமாம் கறுப்பு இனத்தவருக்கு விருது கிடைத்ததுபற்றி பலரும் தமது திருப்தி அைடந்தனர். 😆

 6. //ஹோட்டல் ருவாண்டாவும் உங்களுக்குப் பிடிக்கலாம//
  ஆமாம் எற்கனவே பார்த்து விட்டேன்.!!! அருமையான திரைப்படம்.!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.