தமிழ் மொழி பெயர்ப்பான் விரைவில்???

null
கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.

தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.

உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.

இந்த தளத்திற்குச் சென்று இது வரை உள்ள மொழிகளில் தேடி, எதிர்காலத்தில் தமிழ் வரும் போது தேடுவதற்கு இப்போதே பயிற்சி எடுக்கவும் 🙂

அன்புடன்,
மயூரேசன்

3 thoughts on “தமிழ் மொழி பெயர்ப்பான் விரைவில்???”

  1. மயூ, இது ஏதோ ஆழம் தெரியாமல் பரபரப்புக்காக thatstamil வெளியிட்ட செய்தி போலத் தான் தோன்றுகிறது. ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பில் இது வரை பல்கலைக்கழக அளவில் கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாத நிலையில் சந்தைக்குப் புது வரவான கூகுள் இதைச் சாதித்திருக்கும் என்று என்னால் நம்பமுடியவில்லை. செய்திருந்தால் பெரிய விசயம் தான். இது குறித்த கூகுள் அறிவிப்பு, தயாரிப்பு ஏதும் வெளிவரும் வரையில் கருத்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

  2. என்னவோ தெரியவில்லை இரவி! நடந்தால் நல்லதுதானே.. நல்லது நடக்கும் என்று நம்புவோம். 😐

Leave a Reply