தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு

கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று நிமலின் ட்விட்டின் மூலம் இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது என்பதை அறிந்து பேருவகை கொண்டேன்.

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.

5 thoughts on “தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு”

 1. text-to-speech & speech-to-text தமிழ் என்ன?

  பன்னுதல் – பனுவல்

  text-to-speech – பனுவொலி
  speech-to-text – ஒலிப்பனு

  உரை – டெக்ஸ்ட்டுக்கு இங்கே பொருத்தமில்லை
  (உரை = முதற்பொருள் பேச்சு).

  எழுத்தின் ஒலி = பனுவொலி
  ஒலியின் எழுத்து = ஒலிப்பனு.

  வேறு பரிந்துரைகள்?

  கணேசன்

 2. Does this software take care of the intervocalic -k- sound
  as a voiceless fricative sound observed by linguists of Tamil?
  It is very important in Tamil TTS software.

  Can you check & tell me please.

  N. Ganesan

 3. பெரும்பாலான பலுக்கல்கள் சிறப்பாக உள்ளன. மகிழ்ச்சியாக இருக்கிறது.

  சொற்றொடர்கள் சிறப்பாக வந்ததால் வெண்பா இட்டு செப்பலோசை வருதான்னு பாத்தேன்.. வரலையே 🙂

 4. ரொம்ப அருமை . இந்த முயற்சி பாராட்டுக்குரியது .இனி குறைகள் வராமல் மேம்படுத்தலாம் 😀

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.