தசாவதாரம் (2008) விமர்சனம்

ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.

வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் என்று ஏ/சி க்குள் விட்டால் இப்படித்தான் மண்டை குளம்புமாக்கும். விளம்பரங்களை அடுத்து சத்தியம் திரைப்பட ட்ரேயிலரும் போட்டுக் காட்டினார்கள். விஷால் கலக்கலாக அக்சன் காட்சிகளில் கலக்கியிருப்பதாகத் தெரிகின்றது.

எல்லாம் முடிந்து திரைப்படம் தொடங்கியது. கதையின் ஆரம்பம் தமிழ்நாட்டில். குலோத்தூங்க சோழனுக்கும் ஒரு விஷ்ணு பக்தருக்கும் இடையில் ஏற்படும் கல கலப்பு. சைவமா வைனவமா சிறப்பானது என்பதில் கமலுக்கும் (ராமானுஜன்) நெப்போலியனுக்கும் (குலோத்தூங்க சோழன்) கல கலப்பு. 12 ம் நூற்றாண்டில் நடந்த இந்த நிகழ்ச்சி அழகாக படமாக்கி திரைக்கதையிற்கு ஒரு தொடுப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த காட்சிகளைப் பார்க்கும் போது பொன்னியின் செல்வனை நிச்சயமாகத் தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கை என் மனதில் அடியில் ஊற்றுப் பெற்றது.

மொத்தம் பத்து வேடத்தில் கமல் நடித்திருந்தார். பத்து வேடமும் என்ன என்ன என்பது எனக்கு கூட ஞாபகத்தில் நின்ற பாடில்லை எப்படித்தான் கமல் ஞாபகத்தில் வைத்து நடித்தாரே?? 😉

திரைப்படத்தைப் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்…

நாயகன் கமல் அமெரிக்காவில் நுன் உயிரியலில் பி.எச்.டி பட்டம் பெற்று ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகின்றார். இவர்கள் கண்டுபிடிக்கும் ஒரு உயிரியல் ஆயுதம் ஒரு பிரதேசத்தையே அழிக்க கூடியது. இதை நடுநிலைப் படுத்த NaCl பயன்படுத்த வேண்டும். அதாவது உப்பு நீர்.

இதை களவாடி வேற்றார் கையில் விற்க அதே ஆய்வு கூடத்தில் முயற்சி நடக்கிறது. இதையறிந்து அந்த உயிரியல் ஆயுதத்தை களவாடி FBI கையில் ஒப்படைக்க கமல் முயற்சிக்கின்றார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி இவரை இந்தியாவிற்கு அந்த உயரியல் ஆயுதத்துடன் வர வழைத்துவிடுகின்றது. அங்கே நம்ம அசின் பொண்ணை வேறு சந்தித்து தொலைத்து விடுகின்றார்.

இந்த உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்ற அமெரிக்காவில் இருந்து கமலை விடாமல் ஒரு வெள்ளைக்கார வில்லன் துரத்துகின்றார். அந்த வெள்ளைக்கார வில்லனும் கமல்தான். இந்த வெள்ளைக்கார வில்லன் கமலைத் துரத்தும் போது கமலின் நண்பன் ஒருவனின் ஜப்பானிய மனைவியைக் கொலை செய்துவிடுகின்றான். இதனால் கோவமடையும் அந்த ஜப்பானிய நங்கையின் அண்ணா வில்லன் கமலை இறுதியில் ஒன்டிக்கு ஒன்டியாக சந்திப்பது வேறு கதை. இந்த ஜப்பானிய பாத்திரமும் கமல்தான்.

இந்தியாவை வந்தடையும் கமல் அங்கே பொலீசாரால் கைது செய்யப்படுகின்றார். இவரைக் கைது செய்யும் ஒரு தெலுங்கு காரப் பொலீஸ்காரன் அடிக்கும் கூத்து ஒரே ரகளை. தெலுங்கு பேசுபவர்களின் உச்சரிப்பில் இவர் பேசும் தமிழ் ஜோராக இருந்தது. இந்த பொலீஸ் அதிகாரியும் ஒரு கமல்தான். இந்தியாவில அதிகமாக பேசப்படுற மொழி ஹிந்தி, அதுக்கடுத்ததாக பேசப்படுறது தெலுங்கு, அதுக்கடுத்ததுதான் தமிழ். இப்படியா இருக்கையில் தெலுங்கு காரனான நானே தமிழைப் படித்து பேசும் போது நீ என்ன இங்கிலீசில பேசுறாய் என்று கேட்பது நச்.

இதைவிட பாட்டி, தலித்து, புஷ், சர்தர் ஜூ என்று பல வேடங்களில் கமல். அந்த உயிரியல் குண்டு வெடித்ததா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை. திரைப்படத்தில் கதை என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. பிரமாண்டம், மற்றும் கமலின் புதுமையான நடிப்பு. குறிப்பாக பாத்திரத்திற்கு பாத்திரம் வேறுபடுத்தி நடிக்கும் நடிப்பு திரைப்படத்தை இலயித்து பார்க்க வைக்கின்றது.

மல்லிகா ஷெரவாத் ஒரேயடிக காற்று வாங்கிக் கொண்டே நடித்திருக்கின்றார். சில வேளைகளில் அந்நேரத்தில் இந்தியாவில் வெயில் அதிகமாக இருந்ததால் அப்படியாக உடை அணிந்தாரோ தெரியவில்லை.

சில கொலை நடக்கும் காட்சிகள் சிறுவர்களுடன் பார்க்க தகுந்தது என்று நான் நினைக்கவில்லை. ஆகவே சிறுவர்களை அழைத்துச் செல்வதானால் யோசித்துச் செல்லுங்கள். கடைசி வந்தாலும் திருட்டு சீடியில் இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். தியட்டர் காட்சியமைப்பு, ஒளி, ஒலி அமைப்பில் பார்க்காவிட்டால் இந்த திரைப்படம் சப்பையாக இருக்கும்.

மொத்தத்தில் கமல் தான் ஒரு வண் மான் ஆர்மி என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆகா ஓகே பேஷ் பலே என்றேல்லாம் பாராட்ட மாட்டேன். ஆனால் வித்தாயாசமான இந்த முயற்சியை திரையில் கண்டு களிக்கலாம்.

14 thoughts on “தசாவதாரம் (2008) விமர்சனம்”

 1. I am also accepting your opinion.
  But I was not expecting the film up to this much good.

  Really – for the first half the film was fast moving, the second half it seems like little lengthy.
  The weakness of Kamals films is -We should have enough background knowledge to understand his films. His films are not common mans films.

  “Dasavatharam” -Good effort by Kamal.
  Again he proved himself as a unique actor in Tamil film industry.

 2. கதைக்கு பதிலா படத்தின் சாராம்ஸம் பற்றி படிக்க ஆசை. 10 அவதாரங்கள் தவிர மற்ற அவதாரங்களின் நடிப்பு எப்படி? இசை கேட்க்கும் படி இருந்ததா? கதை சொல்லாமல் விமர்சிப்பதே விமர்சனங்களின் முதல் வெற்றி என்பது என் கருத்து.

 3. 😆 திரைப்படத்தைப் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்… என்ற உங்கள் ஆலோசனைக்கு இணங்க மேலே படிக்கவில்லை. பார்க்க வேண்டும். ஆனால் எப்பொழுது முடியுமோ?

 4. @Samy
  அதிகமான எதிர்பார்ப்புடன் திரைப்படம் பார்க்க செல்லக்கூடாது. கதை பலவீனமாக இருந்தாலும், கமலின் நடிப்பு கதிரையில் உட்கார வைக்கின்றது.

  @bmurali80
  பத்து பாத்திரங்களைத்தவிர மற்றய பாத்திரங்கள் எதுவுமே எடுபடவில்லை. கமலின் நடிப்பு மற்றவர்களின் நடிப்பை புகையடிப்பு செய்துவிட்டது என்பதே உண்மை.
  கதையின் சிறு பகுதையைக் கூட சொல்லாமல் விமர்சனம் எழுதுவது என்பது என்னால் முடியாது. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

  @எம்.கே.முருகானந்தன்
  இந்த பக்க முகவரியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், என்றாவது நீங்கள் பார்த்தபின்னர் மீள வந்து பாருங்கள் 😉

 5. Hi,
  The latest update is – It seems that the film is a huge success.

  For the first 10 days or so from the release of the film, almost all the theaters in Chennai are screening the film (may be as a security measure to recover the money invested). Amazingly all the shows are full.

  People are piling up in the theater to see Kamals performance.
  At last some recognition for kamals efforts
  *****

 6. Nice review Mayu..keep it up..
  Specially da “veyil” n da A/c… 😀
  i would like 2 add some of my thoughts..

  u forgot 2 mention abt how da movie starts…

  the bird eye view of Tamil nadu..i think this is a “first time” in Tamil cinema they’ve shown it that way…I would say 90% of da English movies start that way wid a bird eye view of either Chicago, Washington or da Big Apple…(i watch atleast 4 English movies a week 😉 ) u can give one 4 K.S.R…

  Next u say not a great story n most of da reviews on the net n da magazines like Vihadan confirms it..
  but i have a question…How many of da James Bond movies have a great story line?? Or even Die Hard Series, Mission Impossible..
  it is always da protagonist saving da world from a Huge danger or inf act a weapon of some kind…
  so in that way i think u shouldnt expect a great story line in an action thriller like this…beside this story itself is a “first time” in tamil cinema…

  I like da “George Bush” character most…to resemble da body language n expression of a world icon and even da inherent stupidity of da man in da dialogues…hats off 2 Kamal..
  that performance is as good as any Hollywood actor u’ll see..
  so its another “first time” in Tamil..

  Yet another “first timer” is da climax action sequence which reminds a Jet Li action piece….

  this first timer list goes on and on and at least for that leaving all da “obvious” reasons ill give;

  “TWO THUMBS UP FOR THE MOVIE”!!!!!

 7. Only let down of da movie is da Background score..
  in my opinion it Sucks!!!…(Devi Sri Prasad)

  Songs r ok..but then again i think its more of Kamal’s ideas than Himesh’s tunes…(if i remember right Kamal said it indirectlly in an interview)
  one eg…
  in that scene on da bridge where Fletcher starts chasing Kamal n Asin
  i dont no wut instrument he had used, 4 me it sounded like a kid Banging on a drum wid a stick…it was terrible…
  They should have got A.R.Rahman…
  How many of u remember da piece Rahman uses in “Rang de Basanthi”
  where da British Soldiers start chasing Aamir Khan n company in Horses??
  Thats class people…
  But then agian ARR is a class of his own isnt he?? he he… 😉

 8. I don’t know how many people do know about that A.R.Rahman was initialy announced for the music composs for Dasavatharam. Unfortunately we have missed anonther musical spectacular. Let’s come to review of Dasavatharam. So many review writers mention that the story of Dasavatharam is not too good. Yah obviously Kamal does not try to give a film like “Parutheeveeran”. But he has written a good story for “Mahanathi” you remember that? As sanjayan said you can’t expect such a heart touching story for any adventure film. Even though he could make tsunami as a major charactor in his story. In our view, tsunami made a big disaster and killed so many people but in the story of Dasavatharam the tsunami has saved so many people than it killed. This is the beauty of Kamal Hasan. Isn’t it?

 9. கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வரும் நிலையிலும் புத்திகெட்ட இனத்தின் செயல்பாடுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளார்.

  காலி புல்லா நன்றியுள்ளவர் போல், நல்லவர் போல் காட்டப்பட்டாலும், அடிப்படையில் மடயன் மாதிரி காட்டிவிட்டார்.

  காலிபுல்லா பாத்திரமும், சீனாக்காரர் பாத்திரமும் அவசியமே இல்லாதவைகள்.

  அமெரிக்காவில் விஞ்ஞானி என்றாலும், அங்கேயும் திருட்டுக் கும்மளாக இந்தியர்களே இருப்பதை இப்படம் தெளிவாக்கியுள்ளது. பணத்திற்காக எதையும் செய்பவன் இந்தியன் என்பதை இப்படம் காட்டியுள்ளது. தீவிரவாதியுடன் என்றாலும் கைக்கோர்த்துக்கொள்ளும் இந்திய அடிப்படைக் கொள்கையையும் காட்டுகிறது.

  ஆனால் வெறுமனே இந்தியாவில் காண்போரையெல்லாம் தீவிரவாதி தீவிரவாதி எனும் பைத்தியக்காரத்தனத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

  அது அமெரிக்க CIA என்றாலும் சரி, விஞ்ஞான கமல் என்றாலும் சரி, முஸ்லீம் கமல் என்றாலும் சரி, எல்லோரையும் நாயுடு தீவிரவாதி தீவிரவாதி என்று எந்த ஆய்வும் இன்றி மனம் போனபோக்கில் கூறும் இந்தியாவின் அடிப்பட்ட மடமையையும் இந்த படம் காட்டியுள்ளது.

  எப்படியோ கமல் சில இடங்களில் சில வற்றை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

 10. mad movieee.. really i upsettt.. what’s thisss??? mhmmm crazyyy guyyy… already actors did 27 roles alsoo.. but this guy is advertisinggg i am the gr8 actor 10 roless.. whattt is thisss??? he must knoww what people beforee diddd??? mhmmm full and full athesim principlesss… bull shittt movieee….i have seen alavandhan, hey ram first show before… i vomitted… that muchhh tensionnn.. there is no common sense…. with out dress he is actinggg.. mhmmm mad guyyyy…. mhmmmm…

 11. கமலும் மற்றவர்களைப்போல தன்னை பெருமைப் படுத்த நினைக்கின்றாறா என எண்ணும் போது கவலையாக இருக்கின்றது. குறிப்பாக உலகநாயகனே எனும் பாடல் தேவையா?

  ஹிந்திப் படங்களில், ஹாலிவூட் படங்களில் எல்லாம் இப்படி பீலா விடுவதில்லையே!

 12. //உலகநாயகனே எனும் பாடல் தேவையா?//

  அது ஜோர்ஜ் புஸ்ஸை குளிப்பாட்டுவதற்கு

Leave a Reply