டெக்ஸ் வில்லர் தோண்றும் The Lonesome Rider

புத்தக அட்டை

காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள் என்றால் நிச்சயமாக டெக்ஸ் வில்லரைத் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. டெக்ஸ் குதிரையேறி வேட்டையாடும் காட்சியை லயன், முத்து காமிக்ஸில் படித்து திளைத்த காலம் ஒரு பொற்காலம்.

டெக்சின் கதைகள் 1948ல் முதன் முதலாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றது. இதே ஆண்டில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. அதைவிட எனது தாயாரும் தந்தையாரும் பிறந்ததும் இதே ஆண்டுதான். என் வாழ்வில் முக்கியமான ஆண்டாக இருக்கும் 1948ல் டெக்ஸ் பிறந்தமை மேலும் பெருமையே எனக்கு. 😉

காலம் பல கடந்தாலும் டெக்ஸ்சின் காமிக்சுகள் என்றும் இளமையானவையே. இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த கௌபாய் நாயகனின் கதையொன்றை லக்கி லிமட் ஆதரவில் இணையத்தின் வழி படிக்க முடிந்தமை பெரும் மகிழ்ச்சியான விடையம். Tex – The Lonesome Rider என்கிற இந்தக் கதை நான் கடைசியாகப் படிந்த டெக்சின் கதையாகும்.

வழமையான டெக்சின் சித்திரங்களில் இருந்து மாறி வித்தியாசமான சித்திரப் பாணியில் இந்தக் கதை அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். இதற்கு முக்கியமான காரணம் இந்த காமிக்சின் ஓவியர் ஜோ குபேர்ட். காலப் பகுதியில் எழுதப்பட்ட & வரையப்பட்ட இந்தக் கதை முந்தய டெக்ஸ்வில்லர் ஓவியங்களில் இருந்து வேறுபட்டிருக்கின்றமை வெள்ளிடைமலை. அதைவிட இந்த லோன்சம் ரைடர் கதையில் டெக்சின் வழமையான தோழனான கிட் கார்சன் மற்றும் டைகர் ஜக் போன்றவர்களைக் காண முடியாது. இதனால் இந்தக் கதையில் டெக்ஸ் தனியாளாக சுப்பர் ஸ்டார் போல சண்டை போடுகின்றார்.

எனக்கென்ன்னவோ கதையை வாசிக்கும் போது டெக்சின் ஓவியங்களில் டிசி காமிக்சின் பனிஷர் ஓவியப் பாணியின் தாக்கத்தைப் பார்க்க கூடியதாகவிருந்தது. சில வேளை ஓவியர் தன் பாணியில் வரைய அப்படிச் செய்திருக்கலாம்.

யோ குபேர்ட் - ஓவியர்

சரி கதையில் என்ன நடக்கிறது என்று மேலோட்டமாக சொல்கின்றேன். தனது நண்பர் குடும்பத்தைப் பார்க்க நீண்ட காலத்தின் பின்னர் செல்லும் டெக்சிற்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கின்றது.

ஊர் மேய்ந்து கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் டெக்சின் குடும்ப நண்பர்களின் குடும்பத்தை வேட்டையாடிவிடுகின்றது.

இந்த படுகொலைகளுக்குப் பழி வாங்குவதாக இவர்களின் கல்லறையில் சத்தியம் புரிந்து புறப்படுகின்றார் அகில உலக காமிக்ஸ் சுப்பர் ஸ்டார் டெக்ஸ்.

அப்புறம் என்ன மீதிக் கதையைச் சொல்வது அழகல்லவே. டெக்ஸ் மெல்ல மெல்ல முடிச்சுகளை அவிழ்த்து நரிகளை வேட்டையாடுவதுதான் கதை.

இவ்வளவு சிறப்பான இந்த டெக்ஸ் கூட அமெரிக்காவில் பிரபலமாகாமை ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சில வேளை சூப்பர் மேனும், பட் மேனும்தான் அவர்கள் உலகம் போல.

நீங்கள் டெக்ஸ் இரசிகரா?? அப்படியானால் கட்டாயம் இந்தக் கதையைப் படித்துவிடுங்கள்.

அமேசனில் வாங்க


New
தமிழில் இந்தக் கதையை லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் “சாத்தான் வேட்டை” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

தகவல் உதவி: Siv, King Viswa, Mathu

பட உதவி: கிங் விஷ்வா

முன் அட்டை
பின் அட்டை

காமிக்ஸ் பதிவுகள் தொடர்ந்து எழுதும் ஆசை வந்துவிட்டது. ஆனால் அதற்கு ஒரு தனி வலைப்பதிவு திறக்க நினைத்தாலும் அளவிற்கு மிஞ்சி எதற்கு ஆயிரம் வலைப்பதிவு திறக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தால் இந்த ஹொலிவூட் பார்வை வலைத்தளத்திலேயே காமிக்ஸ் பதிவுகளையும் இடுவதாக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு செய்வது பிடிக்காதுவிட்டார் அறியத் தாருங்கள் நிச்சயமாக புது வலைப்பதிவு ஆரம்பித்துவிடலாம்.

17 thoughts on “டெக்ஸ் வில்லர் தோண்றும் The Lonesome Rider”

 1. இதே கதை “சாத்தான் வேட்டை” என்ற பெயரில் லயன் காமிக்ஸில் தமிழில் வந்துள்ளது. சிவகாசியில் இன்னும் கூட ஸ்டாக் இருக்கிறது என எண்ணுகிறேன்

 2. @சிவ்
  அருமை நண்பரே. லயனில் அந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்படியாவது வாசிக்கக் கிடைத்தமை சந்தோஷமே.

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தோழரே.

 3. பயங்கரவாதி டாக்டர் செவன் said…
  உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா?

  இக்கதை ஒரிஜினலாக மொத்தம் நான்கு பாகங்களாக வெளிவந்தது! உலகிலேயே நம்ம லயன் காமிக்ஸில்தான் இக்கதை முழுமையாக ஒரே இதழில் வெளியானது!

  அதுவும் கடைசி பாகம் வெளிவருவதற்கு முன்னரே நம் லயன் காமிக்ஸில் முழுக்கதையும் வந்துவிட்டது! எப்பூடி!

  இக்கதை டெக்ஸ் வில்லரை அமெரிக்கர்களுக்கு அறிமுகம் செய்ய ஸ்பெஷலாக டார்ஜான் புகழ் ஓவியர் ஜோ கூபெர்ட் கொண்டு உருவாக்கப்பட்டது!

  ஆனால் அமெரிக்கர்கள் பற்றிதான் நமக்கு தெரியுமே! பேண்டுக்கு மேல் ஜட்டி போடாத எவனையும் காமிக்ஸ் ஹீரோவாக மதிக்கத் தெரியாத தனி உலகம் அது!

  இம்முயற்சியின் படுதோல்விக்கு இன்னமும் புத்தகம் அதிக அளவில் விற்பனையாகாமல் இருப்பதே சான்று! வேண்டுமானால் நீங்கள் ஓவியரின் கையொப்பமிட்ட பிரதியும் வாங்கலாம்! 10 டாலர் விலை கூடுதல்!

  http://www.kubertsworld.com/texBook.html

  தகவல்களுக்கு நன்றி – முத்து விசிறி

 4. @கிங்கு விஷ்வா
  காமிக்ஸ் உலகு கிங்கே வந்து பின்னூட்டம் போட்டது மிக்க மகிழ்ச்சி.

  அமெரிக்கர் பற்றிய காமென்ட் நச்!

  டாக்டர் செல்வனின் மறுமொழியை இங்கே பதிந்து எம்மைப் பரவசப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே.

 5. நண்பரே,

  //காமிக்ஸ் உலகு கிங்கே வந்து பின்னூட்டம் போட்டது மிக்க மகிழ்ச்சி//

  இது என்ன சார்? உங்க சினிமா பதிவில் எல்லாம் கூட நான் வந்திருக்கிறேன். நல்லதொரு பதிவு. தொடருங்கள்.

 6. @விஷ்வா
  என்றாலும் என் முதல் முத்து காமிக்ஸ் பதிவில் நீங்களே வந்து பின்னூடம் போட்டமை பெருமைதான் தலைவா. 🙂

 7. இந்தக் கதை என்னிடம் தமிழில் இருக்காக்கும். சாத்தான் வேட்டை. வாசிக்கும்போதே வழமையான டெக்ஸ் சித்திரப்பாணி மாறியிருந்ததை சிலாகித்திருந்தேன். எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. வில்லனாக இருக்கவேண்டும்.. அவர் மலையிலிருந்து குதிரையுடன் விழும்போது அதனை ஓவியர் பல கோணங்களில் சுவாரசியமாகச் சித்தரித்திருப்பார்.

  இருக்க.. விஷ்வா.. நீங்கதானா… பயங்கரவாதி டாக்டர் செவன்?

 8. @மது
  அவர் வேற இவர் வேற…
  அவர் இல்ல இவர் 😉 இருவரும் காமிக்ஸ் பதிவு மன்னர்கள்

 9. //இருக்க.. விஷ்வா.. நீங்கதானா… பயங்கரவாதி டாக்டர் செவன்?//

  சார்,
  நான் உங்களுக்கு மெயில் எல்லாம் கூட அனுப்பி இருக்கேன் என்று நினைக்கிறேன். அப்படி இருக்க, என்னுடைய வேண்டப்பட்ட விரோதியுடன் என்னை ஒன்றாக வைத்தது சற்றே வருத்தமடைய வைக்கிறது.

  தனியாக உங்கள் மெயில் ஐ.டி கொடுங்கள். நான், பயங்கரவாதி, ஒலக காமிக்ஸ் ரசிகர், அய்யம்பாளையம் ஆகியோர் ஒன்றாக இருக்கும் படத்தை அனுப்புகிறேன்.

 10. //விஷ்வா… சும்மா கேட்டேம்பா… கடுமையாக எடுக்கவேண்டாம்.//

  நண்பரே,

  நானும் பயங்கரவாதியும் நல்ல நண்பர்கள். அதனால் கோபப்படுவதற்கு இடமே இல்லை. கவலையே வேண்டாம்.

  இது போல பலரும் நினைத்திருக்கிறார்கள். ஒருமுறை நான்தான் ஒலக காமிக்ஸ் ரசிகன் என்றுகூட சொன்னார்கள். பின்னர் அவரை நேரில் சந்தித்த உடன்தான் தெரிந்துகொண்டார்கள் அவர் வேறு, நான் வேறு என்று.

 11. நண்பர் மயூர்,

  உங்கள் பதிவேடையே இன்றுதான் அறியப்பெற்றேன்.. அதுவும் உங்கள் கருத்தை பின்தொடர்ந்து வந்தால்.

  வந்து பார்த்தால் ஹாலிவுட் பார்வை மட்டுமல்ல, ஒரு காமிக்ஸ் பதிவையும் இட்டிருக்கிறீர்கள்…. இன்னொரு காமிக்ஸ் ரசிகரை சந்தித்ததில் மகிழ்ச்சி

  ஜோ குபேர்டின் வித்தியாசமான ஓவிய பாணியில் இக்கதையை படிக்கும் முதல் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நமது விஜயனுக்கு நன்றிகள். அமெரிக்க தரத்தில் இத்தாலிய காமிக்ஸ் நாயகன் மிலிர்ந்திருப்பார்.

  தொடர்ந்து காமிக்ஸ் பதிவுகளை இட்டு கலக்குங்கள்.

 12. @ரபீக்
  உங்கள் பதிவின் தீவிர விசிறி நான்.

  நிச்சயமாக தொடர்ந்து பல காமிக்ஸ் பதிவுகள் தமிழிலும் போடுகின்றேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நணபரே.

Leave a Reply