டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்

டெக்ஸ் வில்லரின் சாகசங்களை வாசிப்பதில் கிடைக்கும் திருப்தியே தனிதான். அவ்வகையின் அண்மையில் டெக்சின் ஒரு சாகசத்தை வாசிக்க கிடைத்தது. வருந்தத்தக்க விடையம் என்னவெனில் இந்தப் புத்தகம் மொத்தம் மூன்று பாகங்களாக வந்துள்ளது. அடியேன் கையின் சிக்கியதோ இந்த முதற் பாகம் மட்டுமே.

இந்தக் கதையின் சிறப்பு என்னவெனில் டெக்சின் வரலாற்றைப் படம் போட்டுக் காட்டுவதே. டெக்சின் செவ்விந்திய மனைவி, மகன் என்று கதை நீள்கின்றது.

இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களாக தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு என்று தொடர்ந்திருக்கின்றன. கடைகளில் தேடியும் இன்னமும் இந்தப் பாகங்கள் கிடைக்கவில்லை.

நீண்ட நாளாக காமிக்ஸ் பதிவு இடாத காரணத்தால் இந்த சிறிய காமிக்ஸ் பதிவு 😉

கொசுறுத் தகவல்: நம் பலரும் விரும்பி வாசிக்கும் லயன் ஆசிரியர் திரு. விஜயனின் “சிங்கத்தின் சிறுவயதில்” தொடரும் இந்த இதழில்தான் ஆரம்பமாகின்றது.

4 thoughts on “டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்”

 1. மீண்டும் பதிவிட்டமைக்கு நன்றி.

  தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்.

 2. இந்த வெளியீடு வந்து நீண்ட நாட்களாகின்றன என நினைக்கின்றேன் மயூ, ஏனெனின் இந்த தொடரின் இரண்டாவது பாகமான `தணியாத தணல்` வெளியீட்டினை நீண்ட நாட்களின் முன்னர் நான் படித்திருக்கின்றேன், ஆனால் எனக்கும் முதல் பாகமும், இறுதிப் பாகமும் கிடைக்கவில்லை…

  டெக்ஸ் வில்லர் கதைகளில் ஆர்வமூட்டிய `பிரகாஸ் பப்ளிகேஷன்` இப்போது தம் பிரசுரங்களை சரி வரத் தொடராத நிலையில் இணையத்தில் தேடினால் வில்லரின் கதைகள் பல கொட்டிக் கிடக்கின்றன…

  ஆனால், கொடுமை என்னவென்றால் அவையெல்லாம் ஆங்கிலத்தில் அல்லாமல் இத்தாலி மொழியில் இருக்கின்றன…

 3. @கிங்கு
  தலை பின்னூட்டத்திற்கு நன்றி.

  @சுகந்தன்
  நண்பரே பின்னட்டையில் தணியாத தணல் அட்டைப் படம் போட்டிருந்தார்கள். எங்கள் டெக்ஸ் அலாதியாக மஞ்சள் சட்டையுடன் பச்சை பிண்ணனியுடன் படம் உள்ளது.

  ஆமாம் டெக்ஸ் போல சிக் பில் புத்தகங்கள் பதிவிறக்கினால் ஏதோ ஒரு கியா கியா பாசையில் இருக்குது. ஒரு மண்ணும் விளங்கேல. ஆங்கில காமிக்ஸ் இரசிகர்கள் இந்தப் புத்தகத்தை வாசிப்பதே இல்லை போல. இவ்வகையில் இவ்வாறான கதைகளை தமிழில் அறிமுகப் படுத்திய ஆசிரியர் எஸ். விஜயன் பெரும் காமிக்ஸ் தலைவர்தான். நாங்கள் கொடுத்து வைத்திருக்கின்றோம்.

 4. எனது காமிக்ஸ் மீதான காதல் தொடங்கியது இரத்த ஒப்பந்தம் முதல் தான். விஜயனுக்கு ஒரு வேண்டுகோள், அந்த மூன்று பாகங்களையும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.