ஜீமெயில் பற்றி ஒரு பொம்மலாட்டம்

நீங்கள் ஏன் ஜீமெயிலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்களுடன் கூகள் களமிறங்கியுள்ளது. எப்போதும் புதுமை படைக்கும் கூகள் இம்முறை பொம்மலாட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளது. கீழே இணைக்கப்பட்ட வீடியோ கூகள் நிறுவனத்தில் பொம்மலாட்டம். பொம்மலாட்ட முடிவில் ஜீமெயில் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள் என்று உருக்கமாக வேண்டுகின்றார்கள். ;). இப்போது நீங்கள் ஜீமெயில் கணக்கை ஆரம்பிக்க முன்னர் போன்று யாராவது வரவேற்பு அனுப்பத் தேவையில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

எரிதங்களைத் தடுத்துவிடுகின்றது, இலகுவாக உங்களை ஒழுங்கமைக்க உதவுகின்றது, உள்ளமைந்த உரையாடல் வசதி உங்கள் காதலுக்கு தீனி போடுகின்றது போன்ற காரணங்களைக் காட்டுகின்றார்கள். சரி சரி.. என் அலம்பலைக் கேட்காமல் நேரே வீடியோவைப் பாருங்கள்..!! 🙂

4 thoughts on “ஜீமெயில் பற்றி ஒரு பொம்மலாட்டம்”

  1. நானும் எதார்த்தமாக இந்த வீடியோவைப் பார்த்தேன் நன்றாக இருந்தது.
    இதில் நான் குறிப்பாக் வியந்தது – அந்த சின்னச் சின்ன பொம்மைகளை
    எப்படி எப்படியெலாம் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான்.

    கூகிள் எதிலுமே புதுமைதான்.

  2. ஹா.. ஹா.. எல்லாமே கலக்கல் சிந்தனைகள்!!!! அந்த கூகள் இன்ஜினீயர் வாழ்க!!! 🙂

Leave a Reply