செல் பேசியில் தமிழ் மொழி

இணையத்திலும் கணனியிலும் தமிழில் எழுதி வாசிப்பது இப்போது இலகுவான காரியம் ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் செல்லிடத் தொலைபேசிகளில் தமிழின் பாவனை மந்தமாகவே உள்ளது. அண்மையில் செல்பேசி மூலம் ஒரு ட்விட்டர் செய்தியிட அது எப்படி என்று காங்கோன் கேட்டதன் விழைவே இந்தப் பதிவு.

பொதுவாக செல்பேசிகளில் ஆங்கில மொழி இயல்பிருப்பாகவும் பிரஞ்சு, சீனம், ஜப்பானிய மொழிகள் இணைப்பாகவும் வருவதுண்டு. தற்போதைய நிலையில் மற்றய மொழிகளுக்கு இணையாக ஹிந்தி மொழிக்கு செல்பேசிகளில் தனியிடம் வழங்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியை ஏதோ கண்டும் கணாதது போலத்தான்.

நொக்கியா 2730யில் தமிழில் ஜிமெயில்
குறிப்பாக விலை குறைந்த தொலைபேசிகளில் தமிழ் ஆதரவு இருந்தாலும் விலை கூடிய செல்பேசிகளில் தமிழ் ஆதரவு இருப்பதில்லை. இந்த நிலையில் செல்பேசி உலாவியில் தமிழ் தளங்களைப் பார்த்தால் அனைத்தும் பெட்டி பெட்டிகளாகத் தெரியும்.

இந்த பிரைச்சனையில் இருந்து விடுபட டிவிஸ் எழுதிய பதிவைப் படியுங்கள். ஒபெரா மினி எனும் உலாவி மூலம் தமிழ் தளங்களைப் படிக்க கூடிய வசதியுள்ளது. ஆனாலும் இதன் மூலம் தமிழில் உள்ளிட முடியாது. ஒபேரா மினி இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது என்பதைக் குறிப்படவேண்டும்.

தமிழில் உள்ளிட வேண்டுமானால் தொலைபேசியில் தமிழ் உள்ளிடுவதற்கான ஆதரவு இருக்கவேண்டும். பெரும் பாலான தொலைபேசிகளில் இந்த வசதி இருப்பதில்லை.

நான் அறிந்த வரையில் இந்திய, இலங்கை சந்தைகளுக்காகச் செய்யப்பட்ட தொலைபேசிகளில் தமிழ் உள்ளீட்டு ஆதரவு இருக்கும். ஆனாலும் பெரும்பாலான தொலைபேசிகளில் இது இருப்பதில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ் ஆதரவு செல் பேசிகளில் கீ-பாட் பெரும்பாலும் சிங்களத்திலேயே இருக்கும். ஆனாலும் தமிழகத்தில் கீ-பாட்டையும் தமிழில் செய்து வைக்கின்றார்கள்.

சில வருடங்களிற்கு முன்னமே தமிழிற்கு ஒரு செல்பேசி தளக்கோலம் தேவை என்று ரவி கூறியிருந்தார். அண்மையில் ரவி வாங்கிய நொக்கிய 5310 இல் தமிழ் கீ பாட் மற்றும் தமிழ் இடைமுகம் இருப்பதாகக் கூறியிருந்தார். நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது என்றும் ரவி ஒரு பதிவிட்டுள்ளார். அவ்வகையான தொலைபேசிகள் மூலம் இணையத்தில் உலாவுவதுடன் தமிழ் மொழியில் உள்ளிடவும் முடியும். இயல்பிருப்பாக இந்த தொலைபேசிகளில் தமிழ் மொழி ஆதரவு இருப்பதினால் SMS, Email போன்றவற்றையும் தங்குதடையின்றி தமிழ் மொழியில் பார்க்கலாம்.

நொக்கியா 2730

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நொக்கியா 2730 எனும் தொலைபேசியை சுமார் 10,000 ரூபாவிற்கு (100 USD) வாங்கினேன். இந்த தொலைபேசியின் சிறப்பு என்னவெனில் 3G வசதியுள்ளமை. 3G வீடியோ அழைப்புகளை எடுக்க முடியாவிட்டாலும் WCDMA வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும். அத்துடன் கணனியுடன் இணைத்தால் சாதாரண அகலப்பட்டை இணைப்பு வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும்.

இந்த நொக்கியா 2730 இல் தமிழ்,  சிங்களம், ஹிந்தி, வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு ஆதரவு வழங்ப்படுகின்றது. இதில் இயல்பிருப்பாகவே MSN Messenger, Opera Mini, Email Client போன்றவை இருக்கின்றமை சிறப்பியல்பு.

Gmail, Hotmail போன்றவற்றை செல் பேசியிலேயே வாசிக்க கூடியதாகவும் தமிழிலேயே பதில் போடக் கூடியதாகவும் இருப்பது இரட்டை மகிழ்ச்சி. நாங்கள் அதிகம் பாவித்தால் அதிகம் கேட்டால் தானே மற்றய புதிய மாதிரிகளிலும் தமிழ் ஆதரவு தருவார்கள். நானும் ஒரு தமிழ் ஆதரவு நொக்கியாவைப் பயன்படுத்துவதில் சந்தோஷம் 🙂

நொக்கியா 2730 பிடித்துவிடவே அது பற்றிய உதவிக் குறிப்புகளை ஒரு வலைப்பதிவில் எழுத தொடங்கியுள்ளேன். நீங்கள் அந்த தொலைபேசி பாவிப்பவரானால் நீங்களும் சென்று படித்துப் பயனுறுங்கள்.

இந்த வலைப்பதிவை நீங்கள் உங்கள் செல்பேசியில் காண இந்த முகவரிக்குச் செல்லுங்கள்.

நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டசிடுவது என்று கேட்க பில்ட்டப்பு கொடுத்த மு.மயூரனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் 😉

20 thoughts on “செல் பேசியில் தமிழ் மொழி”

 1. பார்க்க நல்லா இருக்கே. நானும் வாங்கலாமான்னு பார்க்கிறேன்.

 2. நன்றி என்னிடமும் 5130 உள்ளது .
  தமிழில்தான் உபயோகப்படுத்துகிறேன்

  சமீபத்தில் என்னுடைய வீட்டிற்காக 5730 வாங்கி கொடுத்தேன்.

 3. @ரவி
  ஆமாம் ரவி நல்ல ஒரு தெரிவு. கீ-பாட் சிறிதாக இருப்பதால் குறுஞ்செய்தி தட்டச்சிடுவது சிறிது கடினம். ஆயினம் அவ்வளவு மோசமில்லை

  @யூர்கன்
  நன்று நன்பரே. நொக்கியா 5730இலும் தமிழ் ஆதரவு உள்ளதா?

 4. I also have Nokia 5310. Please advice me how to input Tamil Font and communicate in Tamil Language. I will be very grateful

 5. @S J Thayanandan, Arivan
  இதுவரை நான் அறிய சிம்பியன் இயங்குதளத்தில் தமிழ் மொழிக்கான ஆதரவை நாங்கள் எப்படி ஏற்படுத்துவது என்று தெரியவில்லை. தெரிந்தால் இங்கே அறியத் தருகின்றேன்.

 6. குறுஞ்செய்தி எழுதுவது போலவே gmail, மற்ற தளங்களிலும் தமிழில் உள்ளிடலாமா? இல்லை, வேறு சிறப்பு ஏற்பாடுகள் தேவையா? என்ன உலாவியில் இதனைச் செய்யலாம்?

 7. @ரவி
  தொலைபேசி முழுவதும் தமிழில் உள்ளிடலாம். உதாரணமாக எந்தவொரு செயலியிலும் தமிழில் உள்ளிடும் வசதியுள்ளது. ஒபேரா மினி மற்றும் அரட்டை மென்பொருட்கள் என பல மென்பொருட்களிலும் தமிழில் உள்ளிட்டு வெற்றியடைந்தேன் :mrgreen:

 8. அண்ணா ஒரு MP3 பாடலை எவ்வாறு Karaoke ஆக மாற்றுவது??ஏதாவது மென்பொருள் இருந்தால் please தாருங்கள்..

 9. Pingback: Nokia 2730 Classic
 10. Sky fire இனைய உலாவியில் தமிழ் தளங்களை பார்வையிட முடியும்…
  தரவிறக்க http://store.ovi.com/search?q=skyfire, முயற்ச்சி செய்து பாருங்கள்

 11. சகோதரா இப்படி… சைனா போன்களுக்கு செய்ய முடியாதா…. குறைந்த பட்சம் இ-புக் ல் ஆவது தமிழ் புத்தகங்கள் பாசிக்க முடியாதா… தயவு செய்து பதில் தாருங்கள்..

 12. A Doubt:

  நோக்கியா 3500 mobileலில் pdf fileகளைப் படிக்கமுடியுமா? அதற்கு என்ன சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யவேண்டும்?

 13. இப்போது என் சிக்கல் வேறு வகைத்தானதாகிவிட்டது. ஐபோன் வைத்திருக்கிறேன். தமிழில் தட்டச்ச இயலவில்லை! செல்லினம் என்ற செயலியைப் பயன்படுத்த ஐபோன்4 வேண்டுமாம். என்னிடம் உள்ளதோ ஐபோன்3. மண்டையைப் பிய்த்துக்கொண்டு உள்ளேன். ஈ71 நோக்கியாவில் இண்டிக் எஸ் எம் எஸ் நிறுவி, தமிழில் தட்டச்சி ஒருமாதிரி சமாளித்துக்கொண்டிருந்தேன். இப்போது ஐபோனில் இந்த இண்டிக் எஸ் எம் எஸ்ஸை நிறுவ இயலவில்லை. எல்லாம் காலநேரக் கொடுமை!

 14. ஆபரா மினி நிறுவியதும் தமிழில் எழுத்துக்கள் தெரியவில்லையே? settings ஏதாவது விவரம் இருக்கிறதா? நான் உபயோகிப்பது blackberry 8320. விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்; நன்றி

 15. தமிழ்மணம் விருது வென்றதற்கு வாழ்த்துகள்.

 16. நொக்கிய 5800 தமிழ் தட்ட முடியாதா இவ் கை பேசியில் தழில் குறுஞ் செய்திகளை அனுப்ப பெற என்ன செய்ய வோண்டும் பதில் தாருங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.