சக்கை போடும் ஹரி பொட்டர் 5ம் பாகம்

ஹரி போட்டர் ஐந்தாம் பாகம் திரைப்படமாக வந்து அமெரிக்காவில் சக்கை போடு போடுகின்றதாம். முதல் நாள் இரவுக் காட்சியிலேயே 12 மில்லியன் அமெரிக்க டாலரை அள்ளி எறிந்துவிட்டதாம் என்றால் பாருங்களேன். இங்கே குறிப்பிட வேண்டியது என்னவெனில் நம்ம சிவாஜி பட பட்ஜட்டோ வெறும் 16 மில்லியன் அமெரிக்க டாலர்தான்.

 

இதில் எனக்குத் துக்கமான விடயம் என்னவெனில் இலங்கையில் இந்தத் திரைப்படம் வெளியாகவில்லை. சரி வெளியாகவில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டு இருந்தால், இன்னமும் கடுப்பேத்துவது போல லிபர்ட்டி திரையரங்குக் காரர் நாலாம் (கொப்லட் ஒஃப் ஃபயர்) பாகத்தை இப்போது திரையிடுகின்றார்கள். இரவோடு இரவாகப் போய் அந்த தியட்டரை கொழுத்தினால் என்னவென்று இருக்கின்றது. ஸ்பைடமான் திரைப்படத்தையெல்லாம் உடனே இறக்கிப் போட்டார்கள் இப்போ என்னவானதோ தெரியவில்லை.

 

இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் ரட்கிளிஃவ் ஐ சி.என்.என் இல் லாரி கிங் பேட்டி கண்டார். இதில் மீதமுள்ள இரண்டு பாகங்களிலும் தான் நடிக்கப் போவதாகக் கூறியதுடன் தனக்கு வயதாகிவருவதாக மற்றவர்கள் சொன்ன கருத்தை மறுத்துள்ளார். தான் திரைப்படத்துறையில் தடம் பதித்து பெரிய நடிகராக வர விரும்புவதாகவும் சொல்லியுள்ளார். அத்துடன் அடுத்துவர உள்ள இரண்டு படங்களில் தன் நடிப்பில் அதை நீங்கள் காணலாம் என்றும் கூறினார்.

 

அதைவிட அந்தச் சீனப் (சோ நான் புத்தகம் வாசிக்கும் போதே ஜொள்ளுவிட்டேன்) பெண்ணுக்கு முத்தமிட்ட சந்தர்ப்பத்தைப் பற்றிக் கேட்டபோது, அது திரைப்படத்தில் உணர்வுபூர்மான ஒரு கட்டம் என்று கூறினார். ஆனாலும் மற்றவர்கள் அதைத் தூக்கிப்பிடிக்குமளவிற்கு அது அப்படியொன்றும் முக்கியமான நிகழ்வில்லை என்றும் கூறினார்.

 

ஹரி பொட்டர் எழுத்தாளர் ரெளலிங்கை உயர்த்தப் பேசியதுடன், அவர் ஒரு சிறந்த கற்பனைக் கதாசிரியர் என்றும் புகழாரம் சூட்டினார். இந்தக் ஹரி பொட்டர் திரைப்படங்களின் வெற்றிக்குக் காரணம் அவர் எழுதிய அந்த சிறப்பான புத்தகமே என்றும் கூறியுள்ளார்.

4 thoughts on “சக்கை போடும் ஹரி பொட்டர் 5ம் பாகம்”

 1. படத்த நேத்துப் பாத்துட்டேன். ரொம்ப நாள் கழிச்சி திரும்பவும் ஹாரி பாட்டர் பாத்திரங்களோட உலாவுவது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஏன்னா போன படமும் புத்தகமும் வந்தே ஒன்னர வருடங்கள் ஆகுது. IMAXல கடைசி 20 நிமிடம் 3Dல காட்டுறாங்க. ஆனா அது ரொம்பப் பிரமாதமா இல்லை. ஏன்னா அது 3Dக்காகவே எடுக்கலை. 2D to 3D Conversion முறையில செஞ்சிருக்காங்க. அதுனால சுமார்தான்.

  புத்தகத்தோட ஒப்பிடும் போது படம் ஒன்னுமேயில்லை. ஆனாலும் ரசிச்சுப் பார்த்தேன். படம் படு வேகமா ஓடுது. நான் ரொம்பவும் ரசிச்சது கார்னீலியஸ் பட்ஜ், டோலோரஸ் அம்பிரிட்ஜ் இவங்ககிட்ட இருந்து டம்பிள்டோர் தப்பிக்கிற கட்டம். சூப்பர். “Mr.Fudge, you may not like that man. But Dumbledore has style”

  அதே மாதிரி Weasly Brothers வெடி போட்டுக் கலக்குற இடம். அதுவும் சூப்பர். புத்தகத்த அந்தக் கட்டத்தைப் படிக்கும் போது ரொம்பச் சந்தோஷமா இருக்கும். படத்துலயுந்தான். படத்துல கதை படுபயங்கரமா ஓடுது.

 2. படம் இன்னைக்கு பாக்க போறேன்!!
  நான் இது வரை அந்த புத்தகத்தையோ அல்லது படத்தின் முந்தைய பாகங்களையோ பார்த்தது இல்லை!!

  இன்னைக்கு பாத்துட்டு வந்து பிடிச்சிருந்ததான்னு சொல்றேன்!! 🙂

 3. ராகவன் அண்ணா … நல்லா இரசித்துப் பார்த்திருக்கிறீங்க… ஹி.. ஹி… வீஸ்லி சகோதரர்கள் ஃபிரட், ஜோர்ஜ் கடைசியில் பட்டாசு கொழுத்துவிட்டு ஓடும் கட்டம்…

  பார்ப்போம் எப்போ இலங்கைக்கு வருதெண்டு!!! 🙁

 4. CVR… முதல் பாகங்கள் பார்க்காமல் பார்த்தால் எவ்வளவு இந்த திரைப்படம் புரியும் என்பது கேள்வியே இருந்தாலும்.. இரசித்தீர்களா????

Leave a Reply