கொழும்பில் கரும்புலித் தாக்குதல்

நேற்று இரவு 9.30 அளவில் திடீரென மின்சாரம் அணைக்ககப்பட்டுது. மின்சாரம் அணைந்தவுடன் புலிகளின் விமானங்கள் ஊடுருவுகின்றன என்ற சந்தேகம் எம் அனைவருக்கும் உருவாகிவிட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கையடக்க தொலைபேசியில் செய்தி வந்து சேர்ந்தது. அதாவது கொழும்பில் உள்ள விமான எதுர்ப்பு பீரங்கிகள் உயிர்ப்பாகிவிட்டன. தாக்குதல் ஒன்று நடக்கலாம் என்றும் எதிர்வு கூறுவதாக அதில் கூறப்ப்பட்டிருந்தது.

Tracker bullets
Tracer bullets

அதை உறுதிப் படுத்தும் முகமாக சில நிமிடங்களில் இலங்கைப் படையினர் வானத்தில் சுடத் தொடங்கினர். Tracer Bullets வானமெங்கும் சர சர என்று பறந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மஞ்சள் வெளிச்சம் ஒன்று ஏற்பட்டது. அதன் பின்னர் ‘பூம்’ என்ற ஒரு சத்தமும் கேட்டது.

அதன் பிறகு வந்த செய்தியறிக்கைகள் மூலம் கொழும்பு மத்தியில் உள்ளதும், இலங்கை விமானப் படைத் தளத்திற்கு அருகில் உள்ளதுமான உள்நாட்டு வரித்திணைக்களத்தில் குண்டு வீழ்ந்ததாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

இதே நேரம் ஒரு விமானத்தை கட்டுநாயகா விமான நிலையத்தில் சுட்டு வீழ்த்தியதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. பின்னர் சிறிது நேரத்தில் கொழும்பு, உள்ளாநாட்டு வரித்திணைக்களத்தின் உள்ளே இருந்தும் புலிகளின் விமானத்தின் பாகங்களை ஒத்த பகுதிகளை மீட்டதாக அரசு அறிவித்தது. இதன் படி இரண்டு விமானங்களும் திரும்பிப் போகவில்லை என்பது உறுதியானது.

இன்று காலை தமிழ் நெட்டில் வான் கரும்புலிகள் வெற்றிகரமாக கொழும்பு விமானப்படைத் தலமையகத்திலும், கட்டுநாயகா விமானப்படைத்தளத்திலும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர். புலிகளின் கரும்புலி விமான ஒட்டிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு வரித்திணைக்களம்
உள்நாட்டு வரித்திணைக்களம்

இதேவேளை இலங்கை அரசு, தாமே இரண்டு விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர். இலங்கை அரசின் டிபன்ஸ்.lk தளமும் தாக்குதலில் சேதமாகிய உள்நாட்டு வரித்திணைக்களத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

கத்தரிக்கை முத்தினால் சந்தைக்கு வந்தாகவேண்டும் என்பது போல விரைவில் உண்மைத் தகவல்கள் வெளியே வரும்.

One thought on “கொழும்பில் கரும்புலித் தாக்குதல்”

  1. உங்களை போன்ற வலைப்பதிவர்கள் சொல்லும் செய்திகளை தான் நம்ப முடிகிறது. ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் பிரச்சாரம் செய்கின்றன. போரில் முதலில் பலியாவது உண்மையும் நீதியும் தான் போல.

Leave a Reply