கொழும்பில் குண்டு வெடிப்பு

இன்று கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. குண்டு இராணுவத்தினர் சென்ற ஒரு பஸ் வண்டியை இலக்கு வைத்துத் தாக்கப்பட்டுள்ளது. இதில் 6 நபர்கள் காயம் அடைந்ததாகவும் அதில் இருவர் பொதுமக்கள் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

குண்டு எங்கே வெடித்தது என்று பார்த்தால் நான் அடிக்கடி சென்று வரும் பாதை. மாலுக்கடை பஸ் தரிப்பிடத்திற்கு அடுத்த தரிப்பிடத்திற்கு சற்றே முன்பாக வெடித்துள்ளது. அங்கு நிறையத் தமிழர்கள் குறிப்பாக வேலைதேடி தம் சொந்த இடம் விட்டு வந்த தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எல்லாருக்கும் இனி ஆப்புத்தான்..

கொழும்பு மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத பிரதேசமாக மாறப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கின்றேன். இதற்குப் பதில் தாக்குதலாக இலங்கை அரச என்ன செய்யும் என்று யோசித்துப் பார்த்தேன் அனேகமாக வன்னிப் பகுதியில் அவர்களில் மிக், புக்காரா விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிவார்கள் என்பதே என் சிந்தனை.

இதே வேளை புலிகளி்ன் கடற்படைப் பிரிவு நெடுந்தீவு கடற்படைத் தளத்தை தாக்கி அழித்துள்ளதாகத் தெரிகின்றது. 34 கடற்படையினர் மரணம் அடைந்துள்ளதுடன் 4 புலிகளும் வீரச்சாவடைந்துள்ளதாகத் தமிழ் தளங்கள் தெரிவிக்கின்றன.

என்று முடியுமோ இந்த மனித அவலம். தமிழர்களில் பிரைச்சனைகளை அடிப்படைச் சிங்களவர் உணர்ந்து அதை சிங்கள அரசுக்கு உணர்த்தும் வரை இந்தப் பிரைச்சனை தீரப் போவதில்லை. சிங்களவர்களும் இதை உணரப் போவதும் இல்லை….

6 thoughts on “கொழும்பில் குண்டு வெடிப்பு”

 1. நண்பரே.. கவனமாக கொழும்பில் திரியவும்!!! 🙁

 2. //நண்பரே.. கவனமாக கொழும்பில் திரியவும்!!! //
  நன்றி நண்பர் குகன்!!! உங்கள் அன்புள்ள வரை எம்மை தீமை தீண்டாது!!! 🙂

 3. //இலங்கைத் தமிழர்களுக்கு என்றுதான் விடிவுகாலம் வருமோ?//
  வழமைபோல விரைவில் கிடைக்கும் என்று நம்புவோம்!!! 🙁

 4. //தமிழர்களில் பிரைச்சனைகளை அடிப்படைச் சிங்களவர் உணர்ந்து அதை சிங்கள அரசுக்கு உணர்த்தும் வரை இந்தப் பிரைச்சனை தீரப் போவதில்லை. சிங்களவர்களும் இதை உணரப் போவதும் இல்லை….//

  …ஆளும் வர்க்கச் சிங்கள மொழியில்
  போர் என்றாலும் போர்.
  சமாதானம் என்றாலும் போர்.
  எதை நாம் பேச?

  …ஆளப்படுகிற சிங்கள மக்களோ
  வாய்மொழி இழந்து
  முகங்கள் இழந்து
  அபினி தின்று மூச்சுமிழந்து
  ஆளும் பேய்களின் நடைப் பாவையாக,
  இந்த மனிதன் விழிக்கும் வரைக்கும்
  எவருடன் பேச?

 5. நன்றி விண்ணாணம்…
  ஒன்று சொல்லட்டா… இவர்கள் விழிக்கப் போவதேயில்லை!!!! 🙁

Leave a Reply