கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

தனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் கைப்பற்ற சீனாவில் இருந்து ஹக்கர்ஸ் முயன்றதான நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது போல பலதடவை இந்தியாவின் மீது சைபர் யுத்தம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார். இதைவிட தற்போது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து இப்படியான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எதிர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஒரு மின்னஞ்சலில் PDF கோப்பாக இணைக்கப்பட்டிருந்த ட்ரோஜன் வகை வைரசு ஒன்றைக் கண்டுபிடித்ததாகவும் அந்த PDF கோப்பு மூலம் தமது கணனிகளைக் கைப்பற்று முயன்றதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

இப்படியாக இந்திய கணனிகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை தமக்கு இல்லை என்றும், சீனாவில் ஹக் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் சீனா பதிலுக்கு அறிவித்துள்ளது. சீனாவே ஹக்கிக்கிற்கு அடிக்கடி இலக்காகுவதாகவும் சீனா தெரிவுத்துள்ளது.

1962ல் நடந்த இந்தோ சீனா யுத்தத்தில் இந்திய மொக்கையடி வாங்கியபின்னர் அண்மைய காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகை மெல்ல மெல்ல மூண்டுவருகின்றது. அண்மையில் தனது இரண்டு இராணுவ டிவிசன்களை இந்தியா நிறுத்தியுள்ளதுடன் ஜெட்விமானங்களையும் கிழக்கு எல்லைக்கு இந்தியா நகர்த்தியுள்ளது.

ஒரு யுத்தம் மூண்டால் இந்தியாவிற்கு உதவி செய்யக்கூடிய அமெரிக்க தலமையிலான மேற்குலகமும் பொருளாதார நெருக்கடியில் உழல்கின்றவேளையில் இந்தியாவை வாட்ட சீனாவிற்கு இது மிகப்பெரிய பொருத்தமான தருணம் என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு எழுதிய பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து அடுத்த பதிவும் எழுதியாகிவிட்டது. கூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா?? என்ற பதிவையும் வாசித்துப் பயன்பெறுங்கள்.

6 thoughts on “கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது”

  1. நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்..தமிழ்தேசியன் திருவண்ணாமலை

  2. புதிய வார்த்தைகளை ஈயடிச்சான் காப்பி செய்வது வழக்கம்.முதல் முறையாக ஆர்வம் மிகுதியால் கேட்கிறேன்.கொந்தளர்கள் என்று எப்படி தமிழாக்கம் ஆனது?

  3. கமல்காந்த் (kamalkanth), உங்க இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழ்நாட்டை தனியாக பிரித்துக் கொடுங்கள். இலங்கைக்கோ அல்லது சீனவுக்கோ போகச் சொல்ல நீ யார்?

    முதலில் உங்கள் இந்தியாவிடம் கோரிக்கை வைத்து பாகிசுதான் அபகரித்த நிலத்தையும், பாகிசுதான் அபகரித்து சீனாவிடம் விற்ற நிலத்தையும், சீன அபகரித்த நிலத்தையும் மீட்க வழித் தேடச் சொல்லுங்க கமல்காந்த் (kamalkanth) சார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.