கூகிள் ஜிடாக் அரட்டை தமிழில்

Tamil Google Botஇப்போது ஜிமெயிலில் நேரடியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். கூகிள் இந்தியா இதற்கான வசதியை செய்து வழங்கியுள்ளது. இவ்வாறு அரட்டை அடிப்பதற்கு முதலில் en2ta.translit@bot.talk.google.com எனும் முகவரியை உங்கள் தொடர்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுக்கு அரட்டை அடிக்க விருப்பமான நண்பரை அரட்டைக்கு அழையுங்கள். பின்னர் அந்த அரட்டையை குழு அரட்டை ஆக்குங்கள். அந்த குழு அரட்டைக்கு en2ta.translit@bot.talk.google.com ஐயும் அழையுங்கள். இப்போ ஆங்கிலத்தில் தட்டச்சிட தட்டச்சிட தமிழில் இந்த பாட் உங்களுக்கு மாற்றிக்காட்டும்.

இதில் இருக்கிற பிரைச்சனை என்ன வென்றால் இரண்டு தடவை நாங்கள் தட்டச்சிடுவது மீள மீள வருது. உதாரணமாக நான் amma என்று தட்டச்சிட்டா அங்கே amma, அம்மா இரண்டையும் காட்டுது. இதை விரைவில் திருத்துவார்கள் என்று நம்புவோம்.

கலக்குங்க….

4 thoughts on “கூகிள் ஜிடாக் அரட்டை தமிழில்”

  1. நான் NHM எழுதி உபயோகிக்கிறேன். என்னால் பிறருடன் நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்து பேச முடிகிறது.

    நீங்கள் கூறுவது சுற்று வழியாக தெரிகிறது 🙂

  2. @Bruno
    இந்த வசதி, NHM அல்லது இ-கலப்பை போன்ற மென்பெருட்கள் இல்லாத அல்ல நிறுவ அனுமதி இல்லாத கணனிகளில் பயன்படுத்துவதற்கே. உங்களிடம் தமிழில் தட்டச்சிட மேற்சொன்ன மென்பொருட்கள் இருந்தால் இந்த புது வசதிபற்றி நீங்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.

Leave a Reply