காத்திருக்கின்றேன் காதலனே

null

உறுமிக்கொண்டு நகரும் கரு மேகம்
கதறிக்கொண்டு நகரும் புகையிரதம்
அமைதியாக அலரும் என் இதயம்

கடைசி முத்தம் நீ தந்து
நகர்ந்து விட்டாய் புகையிரதத்துள்
காத்திருக்கின்றேன் காதலனே

சொட்டும் ஒவ்வொரு மழைத்துளியும்
உன் பெயரைச் சொல்கின்றன
அவை பூமியில் பட்டுத் தெறிக்கயில்
நம் முத்தச் சத்தம் கேட்கிறதே
உனக்கும் அது கேட்குமா?
காத்திருக்கின்றேன் காதலனே

காதலனே நீ காவியனாகிவிடுவாயா
இல்லை காதலியைக் காண வருவாயா?
காத்திருக்கின்றேன்.. காத்திருப்பேன்
காதலியாக காலம் கடந்தாலும்
காத்திருக்கின்றேன் காதலனே

தமிழ்மன்றம்.காம் இல் ஒரு கவிதைப் போட்டிக்காக எழுதியது… ஏதோ கவிதை என்ற பெயரில் நான் இந்தப் படத்தைப பார்த்து கிறுக்கிய வரிகளுக்கு உங்கள் பின்னூட்டங்களை இட்டு எதிர்காலத்தில் உண்மையான கவிஞராக உதவி புரியுங்கோ!!!

18 thoughts on “காத்திருக்கின்றேன் காதலனே”

 1. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் கவிதை அல்ல அல்ல அல்ல..அதையும் தாண்டி … 😉


  இன்னும் நிறையவே நல்லா எழுதலாம்..புதுக் கவிஞர் எழுதிய திரைப்படப் பாடல் மாதிரி இருக்கிறது..

 2. ஹி.. ஹி… 🙂
  நன்றி ரவி!!! ஆமாம் எழுதிப் பழக வேண்டும்….!!!!
  தொடர்ந்து கவிதை எழுதி மக்களை வதைப்பதாக உத்தேசம் 😉

 3. ரவி சும்மா ஏத்திவிட்டுக்கிட்டு இருக்கார்..மயூரேசன். நீங்க தொடருங்கோ.. இதெல்லாம் கவிதை இல்லைன்னா மத்ததெல்லாம் என்னது..

 4. //இதெல்லாம் கவிதை இல்லைன்னா மத்ததெல்லாம் என்னது..//

  அதானே.. இதெல்லாம் கவிதை இல்லைனா எப்படி?? ஆனா நிறைய பேரு இத கவுஜைன்னு சொல்வாங்க :))

 5. //ரவி சும்மா ஏத்திவிட்டுக்கிட்டு இருக்கார்..//
  ஆமா நிச்சயமா சத்தியா!!! சந்தேகமே இல்லை!!! 🙂

  //மயூரேசன். நீங்க தொடருங்கோ.. இதெல்லாம் கவிதை இல்லைன்னா மத்ததெல்லாம் என்னது..//
  அதானே… ரவி கேட்டுச்சா!!!! 😉

 6. //நிறைய பேரு இத கவுஜைன்னு சொல்வாங்க //
  அதென்ன ஜி கவுஜை… ஏதும் கெட்ட வார்த்தையால திட்டேலயே!!! ??? 🙂

 7. //நல்ல ஆரம்பம். தொடருங்கள்.//
  நன்றி கலை… தொடர்ந்து நிச்சயமாக எழுதுவேன்!!! 🙂

 8. //கவிஞனாக வேண்டிய தகுதி இருக்கு. ஜமாய்ங்க//

  நன்றி சர்வேசன்…!!!! 🙂

Leave a Reply