காதலிக்க நேரம் இல்லை

காதலிக்க நேரம் இல்லை எனும் தொடரை நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். வழமை போல இந்த தொலைக்காட்சித் தொடரை நான் பார்பதில்லை. ஆனாலும் பலர் இதை விரும்பிப் பார்த்ததைக் கண்டிருக்கின்றேன். ஆனாலும் இப்போது ஒரு முக்கியமான பாத்திரமான நாயகனைக் கொலைசெய்துவிட்டார்களாம். அதனால் தொடர் டோடல் பிளாப் ஆகிவிட்டது.

இந்த தொடரின் இரசிகர்கள் பெண்களாக இருக்கின்ற நேரத்தில் நாயகனை கொலை செய்வது என்பது முட்டாள் தனம்தானே???

இந்த தொடரின் தொடக்கத்தில் வரும் பாடல் மிக அழகானது. பல தடவை மீண்டும் மீண்டும் கேட்டாலும் திகட்டாத பாடல். நீங்களும்தான் கேட்டுப் பாருங்களேன்.

MP3 ஆகப் பதிவிறக்குக

பாடலிசை : விஜய் அந்தனி
பாடல் வரிகள் : தேன் மொழிதாஸ்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..

I

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..

3 thoughts on “காதலிக்க நேரம் இல்லை”

  1. தொடரைப் பார்ப்பதில்லை, தொடரின் பாடல் பிடித்துள்ளது 🙂

  2. @அருன்
    பாடல் அருமை… தொடரைப் பார்க்காதது மிக்க நன்று 😉

    @சாமி
    என்ன அப்படி சொல்லீட்டீங்க..
    அண்ணாமலை, சித்தி, சித்தப்பா, சின்னப்பா எல்லா தொடரும் இங்க மெகா பிரபலம்.

Leave a Reply