இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள்.
ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை உலகத் தமிழர்கள் பார்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அனைவரும் பாருங்கள், ஆனால் அதில் வருவதை பார்த்து படத்தில் என்ன கருத்து சொல்ல வருகின்றார்கள் என்று குழம்பாதீர்கள்!! 😯
அன்புடன்,
மயூ
ஈழத்தில் திரைப்படம் எடுக்க வேண்டும் எனும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும்,எந்தவித உண்மைத்தன்மையும் அற்று ஈழத்தவர்களின் வாழ் நிலையை இழிவு படுத்து வதற்காக எடுக்கப்பட்ட ஒரு மண்ணும் இல்லாத “மண்”
யாரோ அரை வேக்காடுகளின் உளறல்கள்.
@அருன்
நன்றாகச் சொன்னீர்கள் அருன்!