ஓர்கூட் கொள்கை கொடுமை

ஓர்குட்டில் ஒருத்தர் என்பெயரையும் ஒரு புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தியிருந்தார். இது பற்றி ஆர்கூட்டுக்கு நான் அறிவித்திருந்தேன். அது பற்றி ஓர்கூட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றி கிட்டத்தட்ட இப்ப நான் மறந்தே விட்ட நிலையில் ஓர்கூட்டிடம் இருந்து ஒரு மெயில்.

ஹாய் Mayu,

orkut இல் முறைகேடு என்று “2007-10-02” தேதியில் புகார் அளித்ததற்கு நன்றி.

எங்கள் மதிப்பாய்வு மற்றும் orkut சேவை விதிமுறைகளை பரிசீலித்து பார்த்த பின், இந்த உள்ளடக்கம் தற்போது orkut இல் எந்த கொள்கையையும் மீறவில்லை என்று புரிந்து கொண்டோம். இது தவறு என்று நீங்கள் கருதினால், கூடுதல் விவரங்களுடன் உங்கள் புகாரை மீண்டும் சமர்ப்பிக்கவும். இதனால் எங்களுடைய ஆதரவு குழு இந்த உள்ளடக்கத்தைப் பற்றிய உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

orkut இல் முறைகேடுகள் பற்றிய எங்கள் கொள்கைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்பைக் காணவும்.
http://help.orkut.com/support/bin/answer.py?answer=16198&hl=ta

மதிப்பாய்வு செய்யப்பட்ட உள்ளடக்கம்: “தமிழ்மன்றம்”

என்ன கொடுமை சார்? என் புகைப்படத்தை மற்றவர் பயன்படுத்துவது ஓர்கூட் கொள்கையா? சரி அதைவிடுங்க என் புகாருக்கு பதில் அளிக்க ஒரு வருடமாச்சா? வாழ்க கூகிள் வாழ்க ஓர்குட்.

இதைவிட வினோதமான நிகழ்வு ஓன்று பேஸ்புக்கில் நடந்தது. சமூக வலைப்பின்னல் தளங்களில் தேவையில்லாமல் எங்கள் படங்கள், தனிப்பட்ட தகவல்களை பகிராமல் விடுவதே நன்று.

3 thoughts on “ஓர்கூட் கொள்கை கொடுமை”

 1. //சமூக வலைப்பின்னல் தளங்களில் தேவையில்லாமல் எங்கள் படங்கள், தனிப்பட்ட தகவல்களை பகிராமல் விடுவதே நன்று.//

  ஆமோதிக்கிறேன்.
  தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.

 2. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் “குளோபல் வார்மிங்” பற்றிய

  விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

  விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

  உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

  ஒன்றுபடுவோம்
  போராடுவோம்
  தியாகம் செய்வோம்

  இறுதி வெற்றி நமதே

  மனிதம் காப்போம்
  மானுடம் காப்போம்.

  இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

Leave a Reply