உபுண்டுவில் DVD படம் காட்டல்

அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பையன் கொடுத்த ஓயாத தொல்லையால் இந்தப் பதிவு உதிக்கின்றது. உபுண்டு நிறுவியபின் உடனடியாக உங்களால் DVD திரைப்படங்களை இயக்க முடியாது. காரணம் டிவிடிக்களை இயக்க தேவையான ஓட்டி, கோடெக் போன்றவை உரிமம் பெற்றவை. பொதுவாக உரிமங்கள் உள்ள எந்த மொன்பொருளும் இயல்பிருப்பாக உபுண்டுவில் கிடைப்பதில்லை.

இதற்கு நீங்கள் டிவிடி பார்க்க தேவையான மென்பொருட்களை நிறுவ வெண்டும். முதலில் டேர்மினலுக்கு செல்லுங்கள் (Application -> Accessories -> Terminal) அங்கே பினவரும் கொமாண்டை தட்டச்சிடுங்கள்

நல்ல வீடியோ பிளேயர் வேண்டாமா?? என்தெரிவு VLC Media Player

sudo apt-get update
sudo apt-get install vlc

அம்புட்டுத்தேன்…. இப்போது திரைப்பட டிவிடியை உள்ளே போட்டு விஎல்சி மீடியா பிளேயரில் இயக்கிப் பாருங்கள். சும்மா ஜக ஜக என்று ஹாலிவூட் முதல் கோலிவூட் திரைப்படங்கள் வரை வேலைசெய்யும்.

படம் காட்டும் வி.எல்.சி
படம் காட்டும் வி.எல்.சி

மேலே பாருங்கள் எவ்வளவு அழகாக ஜேசன் சத்தம் வி.எல்.சியில் தெரிகின்றார் என்று. 😉

பிழையை பின்னூட்டம் மூலம் திருத்திய மு.மயூரனுக்கு நன்றிகள்

Creative Commons License
உபுண்டு பதிவுகளின் அத்தனை உள்ளடக்கங்களும் Creative Commons Attribution-Share Alike 3.0 License அடிப்படையில் கட்டற்ற பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

6 thoughts on “உபுண்டுவில் DVD படம் காட்டல்”

 1. முதல் கோடிலேயே தூக்கி அடிச்சிடுச்சி
  Package libdvdread3 is not available, but is referred to by another package.
  This may mean that the package is missing, has been obsoleted, or
  is only available from another source
  E: Package libdvdread3 has no installation candidate

 2. sudo apt-get install vlc போட்டு VLC Media Player முதலில் நிறுவி பின்னர் டிவிடியை பிளே பண்ணிப் பாருங்கள்.

  பிந்தய வி.எல்.சி பிளேயருக்கு இந்த கோடெக் ஏதும் தேவையில்லை என்று கேள்விப் பட்டேன்.

 3. ஒரு பிரச்சினையும் இல்லை.

  sudo apt-get install vlc

  இவ்வளவும் போதுமானது DVD பார்க்க.

  முதன் முதல் இப்பொழுதுதான் பொதி ஒன்றை நிறுவுகிறீர்களாக இருந்தால் இரண்டு வரிகள்.

  sudo apt-get update
  sudo apt-get install vlc

 4. கூடவே பதிவின் தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையையும் திருத்தி “உபுண்டுவில்” என்று மாற்றிவிட்டால் நல்லது 😉

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.