உன்னாலே உன்னாலே – திரைவிமர்சனம்

 அண்மையில் முடி திருத்தும் கடையில் சென்று காத்திருந்த வேளையில் சண் மியூசிக்கில் ஒரு பாடல் போனது.. ஜூன் போனால் ஜூலைக் காற்றே…. பாடலைக் கேட்டதும் அந்தப் படத்தைப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். நண்பன் ஒருவனிடம் எப்படிப் படம் என்று கேட்டதற்கு அவனும் நேரம் போகாட்டிப் பார் மச்சான் என்று சொல்லிவிட்டான்.சரி என்று மறு நாள் ஒரு சீ.டி கடையில் படத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தேன். படத்தைப் பார்க்கத் தொடங்கியதும் ஒரேயடியாக வெறுக்கத் தொடங்கியது. பலதடவை தமிழ் சினிமா அரைத்துவிட்ட கதையைப் போட்டு தானும் தன் பங்குங்கு அரைத்துள்ளார் இயக்குனர்.

அதே காதல் ஊடல் எத்தனை தடவைதான் இவற்றைப் பார்ப்பது. படத்தில் ஆறுதலான விடயம் ஹரிஷ்ஜெயராஜின் பாடல்கள்தான். அவையும் இல்லாவிட்டால் படம் பூச்சியம்.
ஜூன் போனால் பாடலும், உன்னாலே உன்னாலே பாடலும் மிக அருமையாக இருந்தது. காட்சி அமைப்புகள் கூட சிறப்பாக இருந்தது.

அடிதடி வெட்டுக்குத்துப் படங்களைப் பார்த்து சலித்துப்போய் இருப்பவர்கள் இந்த காதல் கதையைப் பார்த்து ஓரளவுக்கு கனவில் மிதக்கலாம் ஆனாலும் என்னைப் பொறுத்தவரை கதை தேறாது. தமிழ் சினிமா இப்போது கிராமத்துப் பக்கத்தில் இருந்து ஹி்ந்தி சினிமா போல நகரப் பக்கத்திற்கு நகரத் தொடங்கியுள்ளது. இந்தக் கதை பெரும்பகுதி அவுஸ்திரேலியாவிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

நாயகன் வினாய்யுடன் ஒட்டிக்கொண்டு திரியும் டனிஷா கொள்ளை அழகு. நல்ல துள்ளல் நடிப்பாக இருந்தது. சதா பெரிதாகச் சாதித்ததாகத் தெரியாவிட்டாலும் அழகாக உள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. படத்தின் நாயன் வினாய்யைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். மாதவனை கொஞ்சம் கொப்பி அடிப்பது போலத் தெரிந்தாலும், தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலத்திற்கு வாய்ப்புள்ளது.

கதையை இப்போது பார்ப்போம். அதவது நாயகன் வினய்யும் நாயகி சதாவும் காதலிக்கின்றனர். சதா சற்றே வீம்புப் போக்குள்ளவர். வினய் கொஞ்சம் விளையாட்டுப் பையன். இவர் மேல் சந்தேகம் கொண்டு சதா நாயகனைப் பிரிந்துவிடுகின்றார். பின்பு நாயகனுக்கு அவுஸ்திரேலியாவில் வேலைகிடைத்து அங்கு செல்கின்றார். அங்கே சதாவை மீண்டும் சந்திக்கின்றார். இதற்கிடையில் வருவதுதான் அந்த அழகான நடிகை டனிஷா. கதை மெல்ல மெல்ல முக்கோணக் காதல் ஆகின்றது. நாயகன் யாருடன் சேர்ந்தார் என்பதே மிகுதிக் கதை.

கதை முடிவு கொஞ்சம் மாற்றமாக இருக்கும். வித்தியாசமாக அடி தடி சண்டைப் படம் பார்த்து சலித்துவிட்டது வேறு படம் பார்க்கலாம் என்றால் இந்தப் படம் நல்ல தெரிவு. இல்லாவிட்டால் பேசாமல் வேலையைப் பாருங்கள். அல்லது வேறு ஒரு படத்தைப் பாருங்கள். இது காதல் பட இரசிகர்களுக்கான படம் மட்டுமே.

6 thoughts on “உன்னாலே உன்னாலே – திரைவிமர்சனம்”

 1. நம்ம ரசனை ஒத்துப் போகலையே ! என் வீட்டுல இந்தப் படம் தினம் தினம் ஓடிக்கிட்டிருக்கு 🙂

 2. //இது காதல் பட இரசிகர்களுக்கான படம் மட்டுமே.//

  அப்போ உங்களுக்கு எப்பிடிங்க.. :)))

 3. நானும் பாடல்களின் ஈர்ப்பினால் பார்த்த படம் இது. வித்தியாசமான முடிவு. நல்ல விமர்சனம்.

 4. //நம்ம ரசனை ஒத்துப் போகலையே ! என் வீட்டுல இந்தப் படம் தினம் தினம் ஓடிக்கிட்டிருக்கு //
  ஐந்து விரல்களும் ஒரேயளவில்லையே ரவி!!! 🙂

 5. //அப்போ உங்களுக்கு எப்பிடிங்க.. :)))//
  அதுதான் பின்னிப் பெனலெடுத்திருக்கின்றேன்.. இன்னமும் புரியவில்லையா?? 😉

 6. //நானும் பாடல்களின் ஈர்ப்பினால் பார்த்த படம் இது. வித்தியாசமான முடிவு. நல்ல விமர்சனம்.//
  அட நம்மளை மாதிரி யோசித்த ஒரு நண்பர்… வாழ்க வளர்க!! 🙂

Leave a Reply