இலங்கையில் ஐபோன்

ஜபோன் பற்றிப் பேசும் போது இலங்கையர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். அப்பிள் நிறுவனம் தமது ஐபோனிற்கான புதிய இயங்கு தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த புதிய இயங்கு தளம் மூலம் MMS மற்றும் வெட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளை நீங்கள் செய்ய முடியும்.

இதே வேளை அப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாதிரி ஒன்றை சந்தைக்கு அறிமுகப் படுத்த இருக்கின்றது. (இது iPhone 3GS என அறியப்படுகின்றது). இந்த மாதிரியானது ஒருங்கிணைந்த காணொளி கமிரா மற்றும் பல வசதிகளை உள்ளடக்கியது.

நீங்கள் ஐபோனை கிட்டத்தட்ட $99 க்கு ஒரு வழங்குனர் உடன்படிக்கையுடன் வாங்க கூடியதாக இருக்கும். அதேவேளை புதிய மாதிரியான iPhone 3Gs $199 க்கு வாங்க கூடியதாக இருக்கும்.துரதிஷ்டவசமாக இலங்கையில் ஐபோனை எந்தவொரு சேவை வழங்குனரும் வழங்குவதில்லை.

நீங்கள் ஐபோனை ஒருத்தர் இலங்கையில் வைத்திருப்பதைக் கண்டால், ஒன்று அவர் ஐபோன் போன்ற ஒரு பொய் நகர்பேசியைப் பயன்படுத்துகின்றார் அல்லுது சட்டவிரோதமாக வாங்கிய தொலைபேசியைப் பயன்படுத்துகின்றார்.

சில காலங்களுக்கு முன்பு டயலொக் நிறுவனம் ஜபோன் பற்றிய அறிவித்தலை வெளியிட்டது. அக்காலகட்டத்தில் அனைவரும் அதைப்பற்றி பேசிக்கொண்டனர்.பின்னர் அந்த முயற்சியை டயலோக் நிறுவனம் கைவிட்டதுடன், ஐபோன் பற்றி பேசிய பக்கமும் அவர்களின் தளத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. இலங்கையில் யாராவது ஒரு சேவை வழங்குனர் ஐபோனை விற்க உரிமம் பெற்றால், கிட்டத்தட்ட 11,000 ரூபாவிற்கு நாங்கள் இந்த தொலைபேசியை வாங்கலாம். இது விலைகூடய நொக்கியா தொலைபேசிகளைவிட பல மடங்கு மலிவானது என்பதைக் குறிப்பிடவேண்டும்.

விரைவில் இலங்கையில் ஐபோன் வரும் என்று நம்புவோமாக.

5 thoughts on “இலங்கையில் ஐபோன்”

 1. கோப்பி, பேஸ்ட் அடிக்கும்போது பார்த்து செய்யுங்க. இங்கே your ad here இதெல்லாம் பேஸ்ட் ஆகி இருக்கு. மாற்றிடலாமே முயற்சிக்கவும்

  see this video about iPhone 3G S —
  iPhone 3G S

 2. pathungo. sattam ollungu ammachar, atthuthan, rubavahinikulla pooi sattam nilai naatinavar vachurukkirar. enda nabar 3 per vaithirukranga. athu satta virotham illa. if u buy for 600$ it is unlocked. legal. anyway feel free to contact me if u want to unlock iphone 2G or 3G(cumma illa kasu thannugo.)

 3. வந்தால் நன்மைதான்.
  போட்டி காரணமாக 3GS ற்கு மறுபடியும் ஆரம்பிப்பார்களென நினைக்கின்றேன்.
  பார்க்கலாம்.

 4. அமெரிக்காவில் $99 என்பதனால் இலங்கையில் 11,000 ரூபாவுக்கு வாங்கலாம் என்றில்லை.

  அமெரிக்காவிலும் AT & T என்ற நிறுவனத்தினூடாக மாதாந்த கட்டண அடிப்படையில் தான் கொடுப்பதாகக் கேள்வி !

  அத்துடன் இந்தச்சலுகை அமெரிக்காவில் மடடும் தான்… இங்கிலாந்தில் கூட இச்சலுகை இல்லை 🙁

 5. 11 000 என்பது அமெரிக்க 1 வருட ஒப்பந்தத்தின் முதற்கட்டணத்தின் இலங்கை பெறுமதி என நினைக்கிறேன். சுவிசில் ஒப்பந்தம் அற்றநிலையில் அதன் முழுப்பெறுமதி 700 SFr . இலங்கை பெறுமதியில் 70 000 ரூபாவாக இருக்கிறது.

  உதாரணத்திற்கு 16 Gb ஒன்றான 3G ஒன்றினை 199 sfr க்கு முதற்கட்டணம் கட்டி எடுத்து பிறகு மாதாந்தம் 55 sfr + பேசுவதற்கான கட்டணம் கட்டவேண்டியிருக்கிறது. 1GB data இலவசம்.

  இதை இலங்கைக்கு மாற்றிபார்த்தால் 11 000 செலுத்தி – பிறகு மாதாந்தம் 5500 + அழைப்புகளுக்கான கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
  அமெரிகாவிலோ எங்காவதோ போனை வாங்கி லொக் உடைத்துவிட்டு prepaid sim போட்டு இலங்கைக்கு பாவிக்கலாமில்லையா 🙂

  வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் பயன்படுத்தினால்கூட சட்டவிரோதமாக வருமா.. huh.-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.