இனைய அரட்டைக்கு மேபோ

பல ஆபீஸ் மற்றும் நிறுவனங்களில் இணைய அரட்டையை தடை செய்துள்ளபோது இந்த தளத்தைப் பயன் படுத்தி நீங்கள் அரட்டை அடிக்கலாம்.

இதில் யாகூ, எம்.எஸ்.என், ஜீடாக், மற்றும் ஏ.ஓ.எல் போன்ற அரட்டை வழங்கிகளைப் பயன் படுத்தலாம். நீங்கள் உங்களுக் கென ஒரு கணக்கை உரு வாக்கி கொண்டீர்களானால் பின்பு நீங்கள் ஒரே தடவையில் மேற்கூறிய யாகூ, ஜீ டாக் என அனைத்திலும் சைன் இன் செய்யலாம். ஒரு வின்டோவில் எல்லா நண்பர்களையும் காட்டும். அட்டகாசமாக உள்ளது பயன்படுத்தித்தான் பாருங்களேன்.

இங்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவரும் இதைப் பயன்படுத்தலாம். தமிழ் இடைமுகத்தை ஆரம்பிக்க தொடக்கப்பக்கத்தில் தமிழ் என்பதை சுட்டுங்கள். அப்புறம் என்ன அழகான தமிழ் இடைமுகம் கிடைக்கும்.

இதைவிட விடஜெட் என்றொரு வசதியும் உள்ளது அதன் மூலம் உங்கள் தளத்திற்கு வரும் நபர்களோடு நீங்கள் உரையாடலாம். எனது சைட் பாரில் ஒரு மேபோ விட்ஜெட் உள்ளதைப் பார்க்காலாம்.
http://www.meebo.com

5 thoughts on “இனைய அரட்டைக்கு மேபோ”

  1. பல நிறுவனங்களில் meebo தடை செய்யபட்டுள்ளது.கீழே தரப்பட்டுள்ள ip- ஐ பயன்படுத்துங்கள்
    http://216.129.112.75/

  2. அனானி நண்பருக்கும் தஞ்சைப் புதல்வனுக்கும் நன்றிகள்..

Leave a Reply