இதுவே போதும்

வளி மண்டலத்தில் உந்தன் வாசம்

நாசி வழியே சுவாசிக்கின்றேன்

உள்ளே சென்ற சுவாசம்

வெளியே வர மறுக்கின்றது

மூச்சடைத்து செத்தாலும் பரவாயில்லை

உன் வாசமே இத்தனை அழகென்றால்

நீ எப்படி இருப்பாய்

 

 

மீண்டும் உன் வாசம்

காற்று வழியே வருகின்றது

வந்த திசை நோக்கிப் பறக்கின்றேன்

தூரத்தில் தெரிகின்றாய்

மஞ்சளாய், அழகாய் கலகலவென்று

 

உன் அருகில் வந்துவிட்டேன்

பேச நினைத்தவை அனைத்தும்

தொண்டைக் குழியில் வற்றுகின்றது

எங்கிருந்தோ வந்து

தாழ்வு மனப்பாண்மை ஒட்டுகின்றது

வாய் திறந்து

ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை.

 

நலமா?

இறுதியாகக் கேட்கிறேன்

சிறிய விழிகளை உயர்த்தி என்ன வென்கிறாள்

ஓ… உனக்குத் தமிழ் தெரியாதல்லவா

ஹா.. பரவாயில்லை

விழிகள் பேச மொழி எதற்கு

 

இந்தச் சின்ன விழியாலே

இத்தனை கதை பேசுகின்றாய்

கஞ்சன் கடவுள்

பானுப்பிரியாவின் கண்ணைத் தரவில்லை

 

கண்கள் பேசிக்கொள்கின்றன

வார்த்தைகள் மூடிக்கொள்கின்றன

பேச வேண்டியவை அனைத்தையும்

கண்களே பேசுகின்றன

அப்பப்போ சில சிரிப்புகள்

அங்காடிகள், பீச்சுகள், பஸ்கள்

எல்லாம் கடந்து செல்கின்றன

நடப்பவை எல்லாவற்றையும்

நம்பவே முடியவில்லை

 

எல்லாவற்றிற்கும் முடிவுண்டு

இன்னமும் இரண்டு மாதங்கள்

அதன் பின்பு உன்னை

நான் காணப்போவதில்லை

பரவாயில்லை இந்த சில நிமிடங்களே

எனக்குப் போதும்

 

 

2 thoughts on “இதுவே போதும்”

  1. நன்றி தூயா!!!
    தொடர்ந்து எழுத ஆர்வமூட்டும் உங்களைப் போன்றவருக்கு நன்றி சொல்லியேஆகவேண்டும்.!!! 🙂

Leave a Reply