ஆவ்டத சண் செட் – விமர்சனம்நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழக் கூடிய என்னொரு திரைப்படம்தான் இந்த After the sunset. ஒரு வைரத்தை ஒரு கள்வன் களவாடுவதுடன் திரைப்படம் தொடங்குகின்றது. வைரத்தைக் களவாடும்விதம் அழகானது. பரபரப்பாகச் செல்லும்.

யார் அந்தக் கள்வன் என்று பார்த்தால் பிரபல நடிகர் பியர்ஸ் புரொஸ்னன். எப்.பி.ஐ ஏஜென்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அந்த வைரத்தைக் களவாடிவிடுகின்றார்.

நெப்போலினின் மூன்று வைரங்களில் இரண்டாவது வைரம் இது. ஏற்கனவே ஒரு வைரத்தை இந்தக் கள்வன் (மக்ஸ்) களவாடிவிட்டான். கள்வன் என்று வந்தாலே அங்கு அவனோடு நெருக்கமாக அங்கும் இங்கும் அலைந்து திரிய ஒரு கள்வி இருப்பாளே!!!! ஆமாம் இங்கும் ஒரு அழகான காதலி அவருக்கும். இருவரும் ஒன்று சேர்ந்துதான் இந்தக் கொள்ளைகளை அரங்கேற்றுவார்கள்.

இவ்வாறு இந்தக் கொள்ளையின் பின்னர் ஒரு அழகிய தீவில் சென்று இருவரும் குடியேறுகின்றனர். இதன் பின்னர் இப்படியான கொள்ளைகளில் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுத்து இருவரும் தமது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகின்றனர். அடுத்த அத்தியாயத்தை தொடங்கினரோ இல்லையோ நிமிடத்துக்கொரு தடவை முத்தமிட்டுக்கொள்கின்றனர்.

இதே வேளையில் இந்த வைரங்களைக் கொள்ளையடிக்கும் போது அதில் கோட்டை விட்டவர் எப்.பி.ஐ ஏஜென் ஸ்டான். இவர் இவர்களைத் தேடிக்கொண்டு இந்தத் தீவிற்கு வருகின்றார்.

வந்து ஒரு நாள் மக்சை சந்தித்து இந்தத் தீவிற்கு ஒரு கப்பலில் அந்த நெப்போலியனின் வைரங்களில் 3ம் வைரம் வருகின்றது. அதைக் களவெடுக்க முயன்றால் தன்னிடம் இருந்து தப்ப முடியாது என்று எச்சரிக்கை வேறு விடுக்கின்றான்.

இந்த ஏஜென்டை வளைத்துப் போட அவருக்கு புதிய வசதிகள் கூடிய அறை போன்ற பல்வேறு வசதிகளை மக்ஸ் செய்து கொடுத்தாலும் எப்போதும் மக்ஸ் பின்னால் சந்தேகத்துடன் இந்த ஏஜென்ட் அலைந்து திரிகின்றான். அது போதாதென்று அந்த ஏஜென்டுக்கு உள்ளூர் பொலீஸ்காரி ஒருத்தியின் உதவியும் கிடைக்கின்றது.

இதே வேளையில் அங்கு உள்ளூரில் உள்ள ஒரு தாதா மக்சை அழைத்து அந்த வைரத்தை இருவரும் சேர்ந்து கொள்ளையடிக்கலாம் என்று சொல்கின்றான். அந்த சந்தர்ப்பத்தை மக்சும் ஏற்றுக்கொள்கின்றான்.

இவ்வாறு என்னொருதடவை சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட விருப்பமில்லாத மக்சின் காதலி பலதடவை கடிந்துகொள்கின்றார்.

கடைசியில் மக்ஸ் கொள்ளையடித்தானா இல்லையா ஏஜென்டிடம் மாட்டினானா இல்லையா தாதா தன் பாட்டுக்கு என்னவெல்லாம் செய்தான் என்பதையெல்லாம் திரைப்படத்தைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

திரைப்படத்தில் சீரியசான காட்சிகள் பல இருந்தாலும் பல சிரிப்பூட்டும் காட்சிகள் உள்ளன. திரைப்படம் முடியும் போது அடப்பாவி….!!! என்று நீங்கள் வாயைத் திறக்கப் போவது மட்டும் நிச்சயம்.

சும்மா ஜாலியாகப் பார்க்க இது ஒரு நல்ல திரைப்படம்.!!!

2 thoughts on “ஆவ்டத சண் செட் – விமர்சனம்”

Leave a Reply