ஆர்கூட் தமிழில்

இன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…!!!

ஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது!!!!

Settings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.

மொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.

இது பற்றிய மேலதிக உரையாடல்களை கூகளின் இந்திய மொழிகளுக்கான குழுமத்தில் உரையாடலாம்!!!

திரைக்காட்சியைக் காண்க

11 thoughts on “ஆர்கூட் தமிழில்”

 1. ஆமாங்க சூப்பரா இருக்கு தமிழில் ஆர்க்கெட்!

  அதைவிட வித்தியாசம்

  “மகா மட்டமான சர்வர் இப்போது வேலைக்கு ஆகாது”

  போன்ற error செய்திகள்

  நன்றி!

 2. ஆகா மயூ இதுவரை ஆர்கூட் என்றாலே ஆர்வமின்றி இருந்தேன், நீங்கள் பகிர்ந்த செய்தியால் இப்போ ஆர்வம் பெருக்கெடுக்கிறது. மிக்க நன்றி மயூ இனி ஓவியனையும் நீங்க ஓர்கூட்டிலே காணலாம்……… 😉

 3. //மயூரேசன் நான் நேற்று இது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன்.//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொன்வண்டு!!!!! உங்கள் பதிவைப் பார்த்தேன் நன்றிகள். 😛

 4. //மகா மட்டமான சர்வர் இப்போது வேலைக்கு ஆகாது//
  அது மட்டுமா ஆயில்யன்… Single என்பதற்கு தனிக்கட்டை என்று மொழி பெயர்த்துள்ளார்கள்… 😛 😆

 5. மயூர்

  உலகின் எந்த விமான நிலையத்திற்கு சென்றாலும்,
  எந்த பெரிய மார்க்கெட்டுக்கு சென்றாலும்
  நிச்சயமாக அங்கு ஒரு தமிழனை சந்திக்க முடிகிறது.

  – தமிழனும், தமிழும் உலகின்
  பெரும் சக்திகளாகி வருகின்றன.
  இனி யாரும் தமிழை தவிற்க முடியாது.

 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஒவியன்….. கலக்குங்க… 😎

  ஆமாம் சாமி அவர்களே… தமிழன் புகழ் உலகம் எங்கும் பரவட்டும்.!!! 😮

 7. இவ்வளவு தூரம் செய்ததை பாராட்டத்தான் வேண்டும் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம். செய்வார்கள் என நம்புகிறேன்

 8. ஆமாம் சுபன்..
  ஹிந்தி தவிர்ந்த இந்திய மொழிகள் பற்றி கூகிள் சிந்தித்ததே பெரியவிடயம்… விரைவில் மொழி மாற்றத்தி்ல் கலக்குவார்கள் என்று நம்புவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.