ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்


திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. முன்னோர்கள் சொன்னபடி சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் இன்றய பல திருமணங்கள் அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி உடனடியாக முடிவடைந்துவிடுகின்றன.

முதலில் உங்கள் நண்பர் திருமணம் செய்வார். அவர் திருமணம் முடிந்து வெளியே வரும்போது அவரின் முகத்தில் தெரியுமே ஒரு ஆனந்தக் களை, அந்தக் களையைப் பார்த்து நானும் அடுத்த முறை முயற்சி செய்யலாமே என்று எங்காளு நினைப்பார்.

திருமணம் முடிந்த பின்னர் அவர் எதிர்ப்பார்த்த்து இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்டு ஒரேயடியாக மனம் குழம்புவர். அடுத்த ஒரு மாதத்தினுள் இறைவா என்னைக் காப்பாற்றி அருள் என்று வேண்டத் தொடங்குவார்.

காதலில் இருக்கும் போது முன்மாதிரியாக இருக்கும் ஜோடிகள் திருமணமானதும் தடம் புரளுவதேன்?. இதற்கு முதல் காரணம் காதலிக்கும் காலத்தில் மதித்த இரு சொற்களை இருவரும் முற்றாக மறந்தமைதான். அந்த இரு சொற்கள்தான் “விட்டுக்கொடுத்தல், தியாகம் செய்தல்”

காதலிக்கும் போது எத்தனை தடவை விட்டுக் கொடுப்பார்கள், தியாகம் செய்வார்கள் ஆனால் திருமணமானதும் ஒருத்தர் மேலே ஒருத்தர் அதிக உரிமை எடுப்பதுடன் அவர் செய்தால் என்ன எதுக்கு நான் போன்ற மனப்பாண்மையை வளர்த்துக் கொள்கின்றனர்.

இதைவிட ஆண்கள் பெண்கள் இருவரது உளவியலும் வேறுபட்ட தன்மை கொண்டது. அதாவது ஆண்கள் சிந்திப்பது, செயற்படுவது போன்றவை பெண்களில் இருந்து மாறுபடும். ஒருத்தர் உளவியலை ஒருத்தர் அறிந்து நடப்பது மிக்க நன்று. இந்த விடையத்தை ஒரு ஆங்கலப் புத்தகம் (Men are from Venus, women are from Mars) வாசிக்கும் போதே அறிந்துகொண்டேன்.

ஆண்கள் இயந்திரங்கள், விளையாட்டுகள் என்று வீரியம் கூடிய துறையில் ஆர்வம் செலுத்துவர். இவர்களின் எண்ணப்படி இவர்களின் ஆளுமையில் பெண்கள் குறை கூறவோ சந்தேகப்படவோ கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் எல்லாம் துலைந்தது.
உதாரணத்திற்கு

ஒரு திருமண வீட்டிற்கு உங்கள் கணவரோடு செல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். செல்லும் வழியில் இந்த வழி பிழை அந்த வழியால் போக வேண்டும் என்று திருப்பித் திருப்பி நச்சரிக்கின்றீர்கள். கடைசியில் அவர் தான் நினைத்த வழியால் சென்று பெரும் கஷ்டத்துடன் திருமண மண்டபத்தை அடைந்து விடுகின்றார்.

இந்த நிகழ்வால் இருவருக்குமிடையில் ஒரு இறுக்கமான உணர்வு நிலவுவதை பார்க்கலாம். திருமணம் முடிந்து வீடு சென்று பின்னரும் இந்த இறுக்கம் குறைய நேரம் எடுக்கும். ஏனேனில் ஆண்களுக்கு அவர்களின் செயல் திறமையில் நீங்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் ஒரேயடியாக மனமுடைந்துவிடுவார்கள்.

இதே போல பெண்கள் இளகிய மனம் கொண்டவர்கள் அத்துடன் அவர்கள் மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய விரும்புவதில்லை. இவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பு ஆனால் ஆண்கள் கொடுக்க விரும்புவது தீர்வுகள். இதனால்தான் இருவருக்குமிடையில் குழப்பம் வருகின்றது. பின்வரும் ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

கீதா: இண்டைக்கு அலுவலகத்தில சரியான வேலை.
குமார்: எந்த நாளும் இதத் தானே சொல்றீங்க?
கீதா: இல்லை இண்டைக்கு உண்மையிலேயே அதிக வேலை
குமார்: ஏன் என்ன நடந்தது?
கீதா: மனேஜர் இண்டைக்கு கனக்க வேலை தந்திட்டார்
குமார்: அவரிட்ட ஏலாது எண்டு சொல்றது தானே?
கீதா: சொன்னா வேலையை விட்டு நிக்க வேண்டியதுதான்
குமார்: அப்ப வேலையை விட்டு நிக்கிறது
கீதா: இப்ப என்னதுக்கு வேலையை விட்டு நிக்கச் சொல்றீங்க. நீங்க எந்த நாளும் இப்படித்தான் என்னைப் புரிந்து கொள்வதே இல்லை.

இவ்வாறு கூறி அழுதவாறே அவ்விடத்தை விட்டு கீதா நகர்ந்து விடுகிறாள். குமாருக்கு என்ன நடந்து முடிந்தது என்றே புரியவில்லை. இங்கு இந்த நிகழ்வை குமார் கையாள வேண்டிய முறையே வேறு. இப்ப பாருங்க

கீதா: இண்டைக்கு அலுவலகத்தில சரியான வேலை.
குமார்: ஏனப்பா?
கீதா: மனேஜர் கடுமையா வேலை தந்திட்டார்.
குமார்: ஐயோ படுபாவி. என்ற அழகான மனைவியை இப்படியா வதைக்கிறது???
கீதா: வேலைய விட்டிடலாம் போல இருக்கு.
குமார்: இங்க வாப்பா (என்று கட்டியனைத்து) I do understand, don’t worry honey, soon it’ll be over!!!

இப்போ கீதா வலும் சந்தோஷம். இப்போ கீதாவும் குமாரும் ஐடியல் ஜோடியாகிவிட்டார்கள். அவர்களுக்கு ஆண்களிடம் இருந்து தேவை அன்பே. தீர்வுகள் அல்ல. பொதுவாக ஆண்கள் தன் நம்பிக்கையுக்குரியவரிடம் சென்று தன் பிரைச்சனைகளைக் கூறி தீர்வு கேட்பார். ஆனால் பெண்கள் பிரைச்சனைகளைச் சொல்வது தீர்வுகளுக்காக அல்ல, ஒரு ஆறுதல் தேடவே. ஆண்களே அவதானம்!!!

இன்றல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் நீங்களும் அழகான வாழ்க்கை எனும் ஓடத்தில் ஏறிப் பயனிக்கப் போகின்றீர்கள். அந்த நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுப்பதுடன் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து நடந்துகொண்டால் சொர்க்கத்தையே வீட்டு வாசலுக்குக் கொண்டுவந்துவிடலாம்.

27 thoughts on “ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்”

 1. நான் இரண்டாவது குமார் மாதிரியெல்லாம் செய்யமாட்டேன்.:-)
  வேலைக்கு போவதற்கு முன்பே விளக்கிவிடுவேன்,அதற்கு பிறகு எப்படி பேசமுடியும்?

 2. @வடுவூர் குமார்
  முதலே சொன்னா திருப்பி வீட்ட வந்து பேசமாட்டங்க என்று நினைக்கிறீங்களா??? 😛

  @கருப்பன்/Karuppan
  வாழ்த்துக்கள்… கலக்குங்க

  @ravishankar
  என்னவோ தெரியேல இப்படியான கட்டுரைகள்தான் இப்ப எழுத வருது. பல்கலையில you’ll be a romantic husband yaar!!! என்று பொண்ணுங்களே இப்பெல்லாம் Certificate தர்றாங்க!!! 😳

  @ CVR
  தொடுப்புக்கு நன்றி.. படித்துப் பார்கின்றோம்!

 3. @Ravishankar
  வேலை கேட்கப் போய், இருக்கிற Temporary வேலையும் இல்லாம்ப் போயிடும்!!!

  Friendship என்ற போர்வையில இருந்திட்டா SAFE!!! :mrgreen:

 4. //மதித்த இரு சொற்களை இருவரும் முற்றாக மறந்தமைதான். அந்த இரு சொற்கள்தான் “விட்டுக்கொடுத்தல், தியாகம் செய்தல்”//

  நீங்கள் மேற்கூறியவற்றை பின்பற்றி 🙂 //அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி (பல்கலைகழக காதல்) உடனடியாக முடிவடைந்து…விடாமல்,இரண்டாவது குமாரைப்போன்று புரிந்துணர்வுடன் வாழ முன் (Advance) வாழ்த்துக்கள். 🙂

 5. வணக்கம்

  நீங்கள் சொல்வதை பார்த்தால்

  பெண்கள் பிரட்சணைகளை பிரட்சணைகளாக அனுகுவதில்லை போல் இருக்கின்றது.

  வெத்து வார்த்தைகளாலும், அன்போடு இருப்பதாக நடிப்பதாலும் பெண்களை எளிதில் கவரலாம் என தோன்றுகின்றது.

  இராஜராஜன்

 6. @இராஜராஜன்
  அதே அதே நண்பரே.. அதை செய்து பாருங்கள் கைமேல் பலன் கிடைக்கும் உங்களுக்கு 😉

 7. 😆 hello romba supera irruku. yen husbend kitta anboda theervaium yedhi parpen. appo yennaku rendum kedaikum nanga jollya irrupom. thanks.

 8. பெண்கள் தவறான பாதையில் செல்வதை எப்படி கண்டு பிடிப்பது?

Leave a Reply