அழகே காதலே கடவுள் பணம் தருவாரா?

முன்னுரை முதிய உரையொன்றும் இல்லாமல் நேரடியாகப் பதிவிற்கு குதிக்கின்றேன்.

அழகு

ம்… பலபேரும் அழகென்றால் வெளி அழகல்ல, உள் மனதில் அழகே முக்கியம் என்பர். சிலரோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆகவே அகம் அழகாக இருந்தால முகம் அழகாக இருக்கும் என்று சொல்லுவர். இப்படி சொல்லுபவர்களை எங்கேயாவது கண்டால் நங்கு நங்கு என்று இரண்டு குத்துப் போட மறக்கவேண்டாம். உலகம் எப்போதும் (99 வீதம்) அழகென்று கணிப்பது வெளியழகைத்தான். இப்போதெல்லாம் பொடியள் பெண் தேடும் அம்மாவிடம் தனது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கொண்டிசன் போடுவினம்.

 1. மெல்லிசா இருக்கோணும்
 2. வெள்ளையா இருக்கோணும்
 3. தலைமயிர் நீளமா இருந்தால் நல்லம்
 4. ஒரு கிரஜூவேட் என்றால் நல்லம்
 5. இங்கிலீசு கதைக்கத் தெரிந்தால் நல்லம்

இப்பிடிப் பட்டியல் நீளும். ஆனாலும் ஒரு பெண் கொள்ளையழகாக இருந்துவிட்டால் எந்த கொண்டிசனும் இல்லாமல் கனடா மாப்பிள்ளைமார் கொத்திக்கொண்டு போடுவினம். 😉

வந்தி தன் பதிவில் ஜஸ்வர்யா ராயைப் போட்டு அழகு பற்றி எழுதியிருந்தார். எனக்கு அழகென்றால் கண்முன்னாலே வருவது யார் தெரியுமா???

ஜ லவ்யூடா செல்லம்
ஜ லவ்யூடா செல்லம்

மீரா ஜாஸ்மின்!

நான் O/L படித்துக் கொண்டிருக்கும் போது எனது வகுப்புத் தோழன் ஒருவன் மச்சான் நான் ஒரு பெட்டைய லவ்வு பண்ணுறண்டா என்றான். அவட பெயர் பாதி தமிழ்டா மீதி கிருஸ்தவப் பெயர்டா என்று வேற ஆப்பு வைத்தான். யாருடா அது எண்டு தேடிப் பார்த்தா, நேற்று இரவு ரண் திரைப்படம் பார்த்தானாம். அந்த நொடியில் இருந்து மீரா இரசிகன் ஆகிவிட்டானாம்.

இன்று கேரளத்துப் பைங்கிளிகள் பல வந்து தமிழ் சினிமாவை ஆட்டுவித்தாலும், என்றும் என் மனதில் மீரா மீரா மீரா.

டோய்! உனக்கு மீராவா.. ரொம்ப ஓவரா இல்லை? என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது.. கூல் டவுன் 😉

காதல்

இதால நல்லா வந்தவனும் இருக்கின்றான் நொந்து கெட்டவனும் இருக்கின்றான். எனக்கு காதல் அனுபவம் என்று பெரிதா இல்லாவிட்டாலும் கொஞ்சமா இருந்துச்சு. அதுவும் ஆங்கிலத்தில. நான் பேசுறது அந்த வெங்காயத்துக்கு விளங்காது, அந்த வெங்காயம் பேசுறது எனக்கு விளங்காது. இப்படியே அந்தக் காதலும் விளங்காம போயிட்டுது 😉

i love you so much

உண்மையில் காதல் என்பதை பலரும் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருத்தர் விரும்புதல் என்றே வகைப்படுத்துகின்றனர். ஆனால் ஆங்கிலத்தில் காதல் எனும் வார்த்தைக்கு ஒப்பான சொல் LOVE. அந்த சொல்லுக்கு வெறுமனே ஆண்-பெண் காதலை சாட்டி முடிக்கவில்லை. தாய்-சேய், தந்தை-சேய், ஆசிரியை-மாணவர் என்று அந்தப் பட்டியல் நீளும்.

காதல் என்று ஒன்று இல்லாவிட்டால் இவ்வுலகில் எந்த உயிரினமும் இருந்திருக்க முடியாது. அடப் போப்பா! எல்லாம் ஈஸ்ஜன், புரஜட்டோன், தெஸ்தெஸ்தரோன் செய்யிற வேலை. காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று நீங்கள் புலம்புவதும் எனக்கு கேட்காமல் இல்லை.

கடவுள்

மனிதன் தன் தேவைக்காக உருவாக்கிய மகப் பலம் பொருந்திய ஒரு கண்டுபிடிப்பு. ஆதிகாலத்தில் தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றி சற்றும் அறிய முடியாத மனிதன் கடவுள் எனும் மாயையுள் வீழ்ந்து தன் மனதை தேற்றினான். காலப் போக்கில் கடவுள்கள் பல தோண்றி மதங்கள் பல தோண்றி ஒருத்தனை ஒருத்தன் மதங்களின் பெயரைச் சொல்லி கொண்று குவித்தமைதான் மிச்சம்.

சிலுவை யுத்தம் முதல் உலகெங்கும் இன்று இந்தப் பதிவை நான் எழுதும் நேரம் வரை மதங்களின் பெயரால் கொலை கொள்ளை.

சிலுவை யுத்தம்
சிலுவை யுத்தம்

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் நான்தான் கடவுள் என்று கூறி ஊரை ஏமாற்றும் கூட்டம். அம்மா பகவான், ஆத்தா பகவான் அது இது என்று ஊரை ஏமாற்றும் பேர்வழிகள். இதில் பெரிய பகிடி என்னவென்றால் இவர்களிற்கு உலகம் எங்கும் கொழும்புக் கிளை, மலேசியக் கிளை, சிங்கப்பூர் கிளை. என்ன செய்வேன் இந்த தமிழ் இனத்தை.

அடியேன் கோவில் குளம் என்று அலைவதில்லை. கணக்கா பரீட்சைகள் வரும் போது மட்டும் டான் என்று கோவில் வாசலில் வந்து நிற்பேன். ஆத்தா ஆத்தா என்று உருகி உருகி வழிபடுவேன். தேர்வு முடிவுகள் வந்த உடனே ஆத்தாக்கு அரிச்சனை விழும். 😉

பணம்

பணம் பற்றி நான் கூறியா தெரிய வேண்டும். பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். ஆனால் என்ன செய்வது எனக்குத்தான் பணம் வருதில்லை. தளத்திற்கு வந்திருக்கிறவங்கள் யாராவது மனம் வைத்து இங்கயிருக்கிற விளம்பரங்களில கிளிக்கினால் தவிர பணம் எனக்கு வர சந்தர்ப்பமே இல்லை. ஹி..ஹி… சும்மா 😉

பணம் - கடத்தல் - கொள்ளை
பணம் - கடத்தல் - கொள்ளை

பெரிய பணக்காரணாக இல்லையே என்று அப்பப்ப கண்ணீர் வடித்தாலும் இருப்பதை வைத்து வாழப் பழகினால் அதுவே செல்வம். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

இத்துடன் இந்த சிறிய பதிவை முடிப்பதுடன் அழைத்த வந்திக்கும் நன்றிகள். இப்போ நான் 5 பேரை அழைக்க வேண்டுமே. இதுதான் எனக்கு கஷ்டமான இடம்!!!

 1. ரவிசங்கர்
 2. அஷோக்பரன்
 3. ஊரோடி பகீ
 4. புல்லட்டு
 5. நிமல்

நண்பர்களே மானத்தை கப்பலேற்றாமல் ஒருத்தராவது ஒரு பதிவு போடுங்கையா 😉

7 thoughts on “அழகே காதலே கடவுள் பணம் தருவாரா?”

 1. நண்பரே முதலில் கொஞ்சம் சிரிச்சுப்போட்டு வந்து நல்லதொரு பின்னூட்டம் இடுகின்றேன் கலக்கலாக நிறைய விடயம் சொல்லியிருக்கிறியள்.

 2. தங்களது அழைப்பை ஏற்றுக்கொள்கின்றேன். கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு 2-3 நாட்களுக்குள் பதிவை இட்டுவிடுகின்றேன்.

  நன்றி.

 3. //மெல்லிசா இருக்கோணும்
  வெள்ளையா இருக்கோணும்
  தலைமயிர் நீளமா இருந்தால் நல்லம்
  ஒரு கிரஜூவேட் என்றால் நல்லம்
  இங்கிலீசு கதைக்கத் தெரிந்தால் நல்லம்//

  இவை உங்கள் விருப்பங்கள் தானே. வேண்டியவர்கள் கண்ணுக்குத் தென்பட்டால் நல்லதே நடக்கும்.

  //இப்பிடிப் பட்டியல் நீளும். ஆனாலும் ஒரு பெண் கொள்ளையழகாக இருந்துவிட்டால் எந்த கொண்டிசனும் இல்லாமல் கனடா மாப்பிள்ளைமார் கொத்திக்கொண்டு போடுவினம். //

  இது சரியான உண்மை உந்தக் கனடா மாப்பிள்ளைமாருக்கு மட்டும் எப்படி வடிவான பெட்டையள் கிடைக்கிறது என்பது பெரியதொரு ஆச்சரியம்.

  //இன்று கேரளத்துப் பைங்கிளிகள் பல வந்து தமிழ் சினிமாவை ஆட்டுவித்தாலும், என்றும் என் மனதில் மீரா மீரா மீரா.//

  என் மனதிலும் மீராதான். என்ன அவர் ஒரு வித்தியாசமான அழகு நம்ம அபிசேக் பச்சானின் மனிசி ஒரு வித்தியாசமான அழகு.

  // நான் பேசுறது அந்த வெங்காயத்துக்கு விளங்காது, அந்த வெங்காயம் பேசுறது எனக்கு விளங்காது.//

  சரி சரி எங்களுக்கு விளங்குது. அவருக்கு ஒரு டிக்சனெரி பரிசாகக் கொடுத்திருந்தால் எல்லாம் விளங்கியிருக்கும்.

  //அந்த சொல்லுக்கு வெறுமனே ஆண்-பெண் காதலை சாட்டி முடிக்கவில்லை. தாய்-சேய், தந்தை-சேய், ஆசிரியை-மாணவர் என்று அந்தப் பட்டியல் நீளும்//

  மிகவும் சரி. ஆனால் தமிழில் அன்பு என்ற சொல் இருப்பதால் காதல் என்பது ஆண் பெண் இருவருக்கும் இடையில் என சொல்லப்பட்டுவிட்டது.

  //அடியேன் கோவில் குளம் என்று அலைவதில்லை. கணக்கா பரீட்சைகள் வரும் போது மட்டும் டான் என்று கோவில் வாசலில் வந்து நிற்பேன். ஆத்தா ஆத்தா என்று உருகி உருகி வழிபடுவேன். தேர்வு முடிவுகள் வந்த உடனே ஆத்தாக்கு அரிச்சனை விழும்.//

  சேம் பிளட். ஆனால் திருவிழா, பண்டிகைகள் நாட்களில் கோவிலுக்கு அம்மன் தரிசனம் செய்யபோவது வழக்கம்.

  //பெரிய பணக்காரணாக இல்லையே என்று அப்பப்ப கண்ணீர் வடித்தாலும் இருப்பதை வைத்து வாழப் பழகினால் அதுவே செல்வம். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.//

  கடைசியாக தத்துவம் சொல்லி முடிச்சு வைத்துவிட்டீர்கள்.

  என் நம்பிக்கையைக் காப்பாற்றியதற்க்கு நன்றிகள் சீனியரே.

 4. @வந்தி
  அக்சுவலா அந்த டிக்சனரி தேவைப்பட்டது எனக்குத்தான். அவங்களுக்கில்லை.

  அழைப்பிதழுக்கு நன்றி. அத்துடன் இங்கே இட்ட கலக்கல் பின்னூட்டத்திற்கும் நன்றி. 😉

  @நிமல்
  கோடி நன்றிகள் பதிவிட்டமைக்கு

  @அஷோக்பரன்
  அழைப்பிதழை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி நண்பரே

 5. அழகு = தமன்னா என்று படம் போடாததால், இந்த தொடர் பதிவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறேன் 😉

 6. @ரவி
  ஹி..ஹி… தம்மான்னா என்னோட கேள் பிரண்டு மாதிரி. அவ படத்தைப் போயி இப்படி பப்ளிக்கில போடுவனா?? சீ.. சீ… 😉

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.