அழகிய தமிழ் மகன் – விமர்சனம்


பலரும் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியபின்னரும் விஜய் படம்தானே போய்த்தான் பார்ப்போம் என்று நேற்று சினிசிட்டி திரையரங்கில் இரண்டு நண்பர்களுடன் குதித்துவிட்டேன். 2.30 திரைப்படத்திற்கு 1.30 என்று நினைத்து 12.45க்கே நண்பர்கள் திரையரங்கிற்குச் சென்றுவிட்டதால் நான் கடைசிநேரத்தில் வந்தாலும் எனக்காகவும் நுழைவுச்சீட்டு வாங்கி வைத்திருந்தார்கள்.

உள்ளே போய் அப்பாடா என்று நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டோம், வழமையான விளம்பரக் கச்சேரிக்குப் பிறகு திரைப்படம் தொடங்கியது. நாயகன் அறிமுகம், தடால் படால் அடி பிடி, ஒரு அறிமுகப்பாடல் என்று திரைப்படம் தொடங்கியது. அறிமுகப் பாடலான எல்லாப் புகழும் என்ற பாடலில் விஜயின் நடனம் உண்மையிலேயே நன்றாக இருந்தது. சும்மா கலக்கலாக ஆடி முடித்தார்.

அதன் பிறகு என்று நாயகி அறிமுகம், பின்னர் வழமையான இளமைக் கூத்துகள் ஆரம்பிக்கின்றது. அட அம்புட்டுத்தானா என்று நெட்டி முறித்துக்கொண்டு இருந்த போது விஜயிற்கு ஏதேதோ கனவுகள் வருகின்றது. அது அப்படியே நடக்கின்றது. Final Destination என்ற ஒரு ஆங்கிலப் படத்திலும் இவ்வாறு வரும். அந்தப் படம் போல ஒரு விஞ்ஞாணத் திரைப்படமாக இருக்குமோ என்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். பின்னர் பார்த்தால் அது ஹீரோவிற்கு இருக்கும் ஒரு சுப்பர் நச்சுரல் சக்தியாம். முன்னால் இருந்த இருக்கையில் தலையை முட்டிவிட்டு தொடர்ந்து திரைப்படத்தைப் பார்த்தேன். என்ன செய்வது 260 ரூபா பணம் செலுத்தி உள்ளே வந்துவிட்டோமே எப்படி அரைவாசியில் செல்வது.

அப்படியே ஏனோ தானோ என்று கதை நகர்கின்றது. திடீர் என்று விஜய் காதலியை தனியே விட்டுவிட்டு மும்பாய் பாய்கின்றார். அங்கே அவரைப் போலவே உள்ள இன்னுமொரு விஜயைப் பார்க்கின்றார். அவனைப் பார்த்து பேச ஓடும் போது ஒரு கனரக வாகம் மோதி கீழே விழுந்து ரத்தம் சொட்டுகின்றார்.

இரட்டை வேடத்தில் இரண்டு விஜயையும் வேறுபடுத்திக் காட்ட விஜய் முயற்சியெடுத்துள்ளது தெரிகின்றது என்றாலும் இன்னமும் கூட முயற்சி செய்து இரண்டு வேடங்களையும் தனித்தனியாக்கியிருக்கலாம். அந்நியன் படத்தில் ரெமோ எவ்வாறு பிரபலமானதோ அவ்வாறு இக்கதாபாத்திரத்தையும் பிரபலமாக்கியருக்கலாம் ஆயினும் விஜயின் முயற்சி போதாது.

மும்பாய் விஜய் ஒரு பிளே பாய் முறையில் வாழ்க்கையை கடத்துபவர். விஜய் மும்பாயில் முடங்க மும்பாய் விஜய் சென்னை வந்துவிடுகின்றார் (என்ன குளப்புகின்றேனா????? 🙂 ). வரும் வழியில் இரயில் பெட்டியில் நமீதா வந்துவிடுகின்றார். நமீதா வந்ததும் திரையரங்கில் இருந்த பெரிசுகள் முதல் சிறிசுகள் வரை கொட்டக் கொட்ட திரையைப் பார்க்கத் தொடங்கியது.
விஜயும் நமீதாவுமே ஹேய் பேபி என் அல்பம் நீ என்கிற பாடலுக்கு வருகின்றார்கள். நமீதா தாராளம் என்றால் அப்படி ஒரு தாராளத்தை அந்தப் பாடலி்ல் காட்டியிருக்கிறார். பாடலை இரசிப்பதா அல்லது நமீதாவைப் பார்ப்பதா என்று ஒரே குளப்பமாக இருந்தது. பாடல் முடிந்த பின்னர் இரண்டும் கெட்டானாக நடந்து முடிந்திருந்ததுதான் சோகம்.

மீதிக் கதை உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

இடைவேளை நேரத்தில் பில்லா ட்ரெயிலர் போட்டாங்கள். பீல்……….!!!!!!!!!!!! என்று ஒரே விசிலடி. ட்ரெயிலரே இப்படி கலக்கலாக இருக்குதெண்டால் படம் எப்படியும் தூளாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். கடுப்பில் இருந்து சில நம்ம ஊர் அழகிய தமிழ்மகன்கள் “இதுதான்டா படம்…!!!” என்று தமது கடுப்பைக் கொட்டித் தீர்த்துக்கொண்டனர்.

பாடல்கள் தூள், ரகுமான் கலக்கியிருக்கிறார். ரீமிக்ஸ் கூட படு தூளாக இருந்தது. வீடியோ காட்சி அமைப்பு சிறப்பாக இருந்தது. ஷிரேயா பற்றி நான் சொல்லத் தேவையில்லை தானே. ஸ்லிம் என்றால் அப்படி ஒரு ஸ்லிம். நடனக் காட்சிகளில் கலக்குகின்றார். அந்நாளில் சிம்ரன் நெளிந்து வளைந்து ஆடியதை ஞாபகப்படுத்துகின்றார்.

நீங்கள் விஜயின் தீவிர இரசிகரானால் நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். மற்றவர்களிற்கு திரையரங்கில் இருந்து வெளியே வந்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கும். பார்க்க வேறு திரைப்படமே இல்லை என்றானால் நீங்கள் சென்று பார்க்கலாம். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்.

7 thoughts on “அழகிய தமிழ் மகன் – விமர்சனம்”

 1. எதிர்பார்த்ததுதான். ஆயினும் தெளிவாகச் சொல்லிக் காப்பாற்றி விட்டிர்கள். காசும், நேரமும் மிச்சம்

 2. எப்படி மயூ?படத்தை முழுசாப் பார்த்து இவ்வளவு பெரிசா விமர்சனம் வேறு எழுதுறீங்க? 🙂 நானும் நண்பரும் படத்தைப் பார்க்கப் போய் பொட்டி வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். 15 ஐரோ மிச்சம் 🙂 ஆனால், இணையத்தில் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்துத் தொலைத்தேன்..

 3. இந்தப்படம் பார்க்கவில்லை.
  கேள்விப்பட்ட விசயங்களை வைத்துப்பார்க்கும்போது பெரிய பெரிய தலை எல்லாம் இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டிருப்பது புரிகிறது. ஏ. ஆர். ரஹ்மான், ஆன்டனி போன்றவர்கள்..

  எல்லாரும் திட்டமிட்டு விஜய்யை கவுத்து விட்டார்கள் போலத்தான் இருக்கு 😉

  ஏ. ஆர். ரஹ்மானின் மதுரைக்குப் போகாதடி பாட்டை மட்டும் ஒலிவடிவில் விரும்பி ரசித்தேன்.

 4. ஹாய் பிரண்டுஸ் நான் இணையத்தில் பார்த்து நொந்துபோனேன் அதனால் எனக்கு 260 ரூபாய் லாபம். அடுத்து மச்சக்காரன் பொல்லாதவன் வேல் எல்லாம் தரவிறக்கிவிட்டேன் சில நாட்களில் பார்க்கவேண்டியதுதான்.
  இந்தப் படம் பார்க்கும் நேரத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முதலாக என ஒரு சூப்பர் டூப்பர் படத்தை விளம்பரங்களுக்கு இடையில் போடுவார்கள் அதனைப்பார்க்கலாம் 👿

 5. நல்லாச் சொன்னாய் மயூரேசா
  உனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததுமில்லாமல் விமர்சனம் வேறு போட்டிருப்பதால் மாவீரர்களுக்கு வழங்கப்படும் பரம்வீர் சக்ரா விருதுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்!

  நல்ல வேளையாக மக்கள் ஏற்கனவே சொல்லி விட்டதால் நான் இந்தப் படத்தை இறக்குமதி செய்தும் கூடப் பார்க்கவில்லை ஹி ஹி.

  மற்றபடி நீயும் வீட்டில் அனைவரும் சுகம்தானே…

  அன்புடன்,
  பிரதீப்

 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முருகானந்தன் அவர்களே…. சளாப்பு வேலை நமக்கு நன்றாகவே ஒடும்.

  ரவி நீங்க என்ன செய்ய கொடுத்த காசுக்கு ஏதாவது செய்யவேண்டாமா என் எண்ணித்தான் இவ்வாறு விமர்சனம் எல்லாம் எழுதித் தொலைத்தேன்… தியட்டரில ஓட்டி ஓட்டிப் பார்க்க முடியாதே 🙂

  வித்தியாசமான கதை என்று ஒரு சப்பைக் கதையை எடுத்திருக்கிறார். பலதையும் புகுத்த முயன்று ஒன்றும் இல்லாமல் போயுள்ளது மயூரன்.. எனக்குப் பிடித்த பாடல் ஹேய் பேபி என் அல்பம் நீ…!!!

  ஐயோ வந்தியத் தேவன் உங்களால தமிழ் சினிமாவிற்கு டோடல் டமேஜ் ஆகிட்டுது போங்க!!! 😉

 7. எங்களைப் போன்ற மாவீரர்களால்தான் உங்களைப் போன்றவர்கள் தப்பிக்கின்றார்கள்!!! ஹி.. ஹி.. வீட்டில் அனைவரும் நலம் அண்ணா!!! உங்கள் வீட்டிலும் எல்லாரும் நலம் என் று எண்ணுகின்றேன்..!!! 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.