அட்சென்ஸ் & தமிழ் மொழி

இன்று அனேகமான தளங்களில் கூகிள் அட்சென்ஸ் பாவிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பெரிய தளங்கள் முதல் சின்ன சின்ன வலைப்பதிவுகள் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றன. இந்த பணம் கறக்கும் பசுவில் இருந்து எவ்வாறு மேலதிகமாகப் பால் கறக்கலாம் என்பது பற்றிய ஒரு சிறிய குறிப்பு.

நான் கூகிள் அட்சென்சை தமிழ், ஆங்கில வலைப்பதிவுகளில் பாவித்து வருகின்றேன். ஆனால் தமிழ் வலைப்பதிவில் கூகிள் அட்சென்ஸ் மூலமான வருவாய் மிக மட்டம். ஆங்கில வலைப்பதிவில் சுமாராக வந்துகொண்டிருக்கின்றது.

ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு வலைப்பதிவுகளும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 80 பக்கப் பார்வைகளைப் பெறுகின்றன. ஆனால் ஒவொருநாளும் ஆங்கில வலைப்பதிவில் கிடைக்கும் பணத்தின் பெறுமதி தமிழ் வலைப்பதிவில் கிடைக்கும் பணப்பெறுமதியின் 4 மடங்காகும்.

இதற்கான காரணம் என்ன?

கூகிள் அட்சென்ஸ் பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பார்த்து அதற்கு தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டும். தமிழ் பக்கங்களைப் பார்த்தால் அதற்கு எதுவும் புரிவதில்லை. தமிழ் மொழி என்று மட்டுமே புரிகின்றது. அதனால் தமிழில் ஏதாவது விளம்பரம் இருந்தால் காட்டும் இல்லாவிட்டால் தொடர்பில்லாமல், சூறாவளி பணம் தாருங்கள் என்று கேட்கும். பக்கத்தைப் பார்ப்பவரும் இதென்ன கோமாளித்தனம் என்று நினைத்து அதை அப்படியே விட்டுவிடுவார்.

ஆங்கில வலைப்பதிவில் அல்லது பக்கங்களில் தொடர்பான விளம்பரங்களைக் காட்டுவதால் தளத்திற்கு வரும் பயனர்கள் அந்த விளம்பரங்களைக் சொடுக்கி அங்கே செல்வார்கள். உங்களுங்கும் பையில் பணம் நிரம்பும். உதாரணமாக தீபெத் பற்றி ஒரு இடுகையை நீங்கள் இட்டால் அங்கே தீபெத்திற்கான பயன வழிகாட்டி போன்ற விளம்பரங்கள் கிடைக்கும். தீபெத் பற்றி உங்கள் இடுகையை வாசிப்பவர் மேலதிக விபரம் நோக்கி அந்த விளம்பரங்களைச் சொடுக்குவார்.

கூகிள் அட்சென்ஸ் மூலம் பணம் செய்ய விரும்பினால் ஆங்கிலம் அல்லது கணனியியலில் கோலோச்சும் சீனம், ஜப்பான், அரபி போன்ற மொழிகளில் பயன்படுத்துங்கள். செல்வச் சீமானாகுங்கள். தமிழுக்கு இன்னும் காலம் இருக்கின்றது!!!

16 thoughts on “அட்சென்ஸ் & தமிழ் மொழி”

 1. @வால்பையன்
  நிச்சயமாக வால்பையன்
  1. http://google.com/adsense சென்று உங்கள் கணக்கை பெற்றுக்கொள்ளுங்கள்
  2. அங்கு தரும் கோட்டை உங்கள் வலைப்பதிவில் இடுங்கள். அவளவுதான்.

 2. 😈 hello sir your information is very useful. But how to work with and improve with google adsense website publishing and get earn more. I am a biggner stage, Please help me how to work with adsense using notepad and get into google and yahoo gorups. thanking you.

 3. வாழ்க தழிழ் மொழி! வாழ்க தழிழ் மொழி !
  வாழ்க தழிழ் மொழி !

  விரைவில் தமிழில் கூகுள் அட்சென்ஸ்
  வரவேண்டும்,வரும் !!!!!!!!!!!!

 4. எவ்வாரு கூகுள் அட்சென்ஸை பதிவு செய்வது……….

 5. தற்போது யாருக்கும் சுலபமாக ..adsense account .கிடைப்பது இல்லை …இதனால் பல ப்ளாக் மற்றும் வெப்சைட் உரிமையாளர்கள் ..நல்ல விளம்பர வருமானத்தை பெற முடியாமல் போகின்றனர் ..இந்த குறையை போக்க ..வெறும் 400 செலவில் ..புதிய அட்சென்ஸ் accont ..நங்கள் உங்கள் பெயரில் உருவாக்கி ..தருகிறோம் ..இரண்டே நாளில் …account ஐ ..பெற்ற பிறகே ..பணம் செலுத்தினால் போதுமானது … வேண்டியவர்கள் ..தொடர்பு கொள்க .. balanwindows@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.