அடக் கடவுளே நானுமா???

ஒரு நாள் எனது மின்னஞ்சலுக்கு தமிழ் மணத்தில் இருந்து ஒரு வேண்டுகோள் என்னவோ எதுவோ என்று எடுத்துப் பார்த்த போது என்னை நட்டசத்திரமாக அழைத்திருந்தார்கள். யாருக்குத்தான் நட்சத்திரமாக விருப்பம் இருக்காது. அட சரி நான் நட்சத்திரம் ஆகச் சம்மதம் என்று மறு அஞ்சல் போட்டேன்.

என்னையும் ஒரு நபராக மதித்து நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்திற்கும் என் வலைப்பதிவையும் ஒரு பதிவாக மதித்து வாசித்த, வாசிக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வலையில் சிதறிக் கிடந்த சில வலைப்பதிவுகளைப் பார்த்து ஆர்வத்தால் உந்தப் பட்டு வலைப்பதிய ஆரம்பித்தவனே இந்த மயூரேசன். இன்று கிட்டத்தட்ட வலைப்பதிவுடன் ஓராண்டு கடந்துவிட்டது. இது வரை சிறுகதை, கவிதை, கட்டுரைகள் என்று பல்வேறு முயற்சிகளில் இறங்கினேன். அவற்றை பொறுமையுடன் வாசித்த உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் அரசியல் கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்தேன். ஆயினும் வேறுவிதமான சங்கடங்களை எதிர்நோக்கியதால் இப்போது அரசியல் கட்டுரைகளுக்கு வணக்கம் சொல்லி அனுப்பிவிட்டேன்.

வலைப்திய ஆரம்பித்த போது தமிழ் தட்டச்சு என்பது பெரிய பிரைச்சனையாக எனக்கு இருக்கவில்லை காரணம் ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதி யுனித் தமிழுடன் கை கோர்த்துவிட்டதால் வலைப்பதிவு இனிய பயனமாகவே அமைந்தது. அஞ்சல் முறையில் தட்டச்சு செய்து இன்று பாமினி முறையில் தட்டச்சு செய்கின்றேன். விரைவில் தமிழ் 99 க்கு மாற வேண்டும் என்பது இப்போதைய சிந்தனை.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஏன் நான் என் டொமைனில் ஒரு வலைப்பதிவை வைத்திருக்கக் கூடாது என்று யோசித்ததன் விழைவாகத்தான் இந்த புதிய டொமைனில் வேர்ட்பிரஸ் நிறுவி பயன்படுத்துகின்றேன். சும்மா சொல்லக் கூடாது வேர்ட்பிரஸ் மென்பொருள் அந்தமாதிரி!!! :). நீங்க பிளாக்கரோடு மாரடிப்பவரானால் வேர்ட்பிரஸ் உங்களுக்கு நல்ல ஒரு மாற்று.

தமிழ் வலைப்பதிவு நன்கு வளர வேண்டும், தமிழில் வேர்ட்பிரஸ் மென்பொருள் விரைவில் கிடைக்கவேண்டும். முட்டி மோதிக்கொள்ளும் தமிழ் வலைப்பதிவர்கள் விரைவில் நல்ல நண்பர்களாக வேண்டும். மொத்தத்தில் தமிழ் வலைப்பதியும் உலகம் ஒரு முற்போக்காக மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.

இவ்வேளையில் எனக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்த பல வலைப்பதியும் நண்பர்களுக்கும் இங்கே நன்றி சொல்லிக்கொள்கின்றேன். 😉

வலைப்பதிந்து தமிழ் வளர்ப்போம் வாரீர்!!!

அன்புடன்,
மயூரேசன்.

38 thoughts on “அடக் கடவுளே நானுமா???”

 1. வாழ்த்து தெரிவித்த மணியன், ரவிசங்கர், சின்னக்குட்டிக்கு நன்றிகள்!!! 🙂

 2. வாழ்த்துக்கள்! கலக்குங்க! காத்திருக்கிறோம்!

 3. டெக்னிக்கல் பதிவுகள். விக்கிபீடியாவில் நீங்க ஏற்கனவே கொடுத்திருந்தவைகள் என்று இந்த வாரத்தை அசந்துங்க மயூரேசன்..!!!

 4. //அடக் கடவுளே நானுமா???//

  மவராசன் உங்களுக்கென்ன கொறைச்சல்? நல்லா எழுதுங்க 🙂 வாழ்த்துக்கள்

 5. மயூரேசன்னா முருகனைக் குறிக்கும்னு இல்ல இத்தனை நாள் நினைச்சு இருந்தேன்..மயூரன், மயூரனாதன் எல்லா பேருக்கும் இது தான் அர்த்தமா

 6. வாப்பா வா..மயூரேசா. இந்த வார நட்சத்திரமே! ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமைய எனது வாழ்த்துகள். அடுத்தடுத்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம். கொடுத்து அசத்து.

 7. மயூரேசா! கலக்கிட்டே போ! ஈழத்தமிழில் கதைகள் படைப்பாய் அல்லது அந்த நடையில் ஏதேனும் எழுதுவாய் என எதிர்பார்க்கிறேன். மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 8. வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.!!!
  உங்கள் அன்பினால்தான் இன்று நட்சத்திரம் ஆக முடிந்தது…. 🙂

 9. இன்றுதான் உங்கள் எழுத்தின் திறமை கண்டேன்
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  ராகினி
  ஜேர்மனி

 10. வாழ்த்துகள் பலவும். நீங்கள் அடிக்கடி வேர்ட்பிரஸ், தமிழ்99 என்று சொல்லிகொண்டு போகிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் தொண்டு தொட்டே அஞ்சல் முறையில் டைப் செய்து, யுனிகோட்டில் மாற்றி தான் இதுவும், எப்பொழுதும் செய்வது. இனியாவது புரிய ஆவல் படுகிறேன் நண்பரே

  asalamone

 11. பிளாக்கர் போல வலைப்பதிவு செய்யப்பயன் படும் ஒரு மென்பொருள்தான் வேர்ட்பிரஸ்….. அதாவது என்னுடைய வலைப்பதிவு கூட வேர்ட்பிரஸ் முறையில் அமைக்கப்பட்டதே….!!!
  🙂
  தட்டச்சு முறையில் பழகுவதற்கு அஞ்சல் முறை இலகுவாக இருந்தாலும் அது வினைத்திறன் அற்றது.. அதனால்தான் தமிழ் 99 என்கிற தட்டச்சு முறையை பயன்படுத்தச் சொல்லி பரிந்துரைக்கின்றேன்.!!!!

 12. தம்பி,
  என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!
  கொஞ்சம் தாமதமாகச் சொல்வதற்கு மன்னிக்கவும். அதற்கான காரணம் உனக்குத் தெரிந்திருப்பதால் மன்னிக்காமலும் இருக்கலாம் 🙂

 13. எதுக்கு மன்னிப்பெல்லாம்!!!!! உங்களுக்கே ஓவரா இல்ல!!! 😉
  தெரியும் தெரியும்….. உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா!!! 🙂 🙂 🙂 🙂 🙂 🙂
  எம்புட்டு சிரிப்பு பாத்தீகளா 😉

 14. நட்சத்திர வாழ்த்துகள், மயூரேசன்.

  வைசா

 15. அடக் கடவுளே நானுமா?இல்லை மயூரேசன் நாம் எல்லோரும்தான்.ஏதோ பார்த்தது படித்தது உணர்ந்தது வச்சி பதிவு போடுறோம்.தமிழ்மண அங்கீகாரம் எல்லோருக்கும் உண்டு என்ன வரிசை முன்னே பின்னே யிருக்கும் [உங்களுக்கேல்லாம் முன்னாடி ஒன்னுமில்லாத நான் வரலையா 😉 ]

 16. வாழ்த்துக்கள்…மயூரா…இன்னிக்கு தான் இதை பார்த்தேன்..
  கலக்கவும்..

 17. வாழ்த்துக்கள்…..மயூரேசன்,இன்னிக்குத்தான் பார்த்தேன்.

  ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம்,

  மயூரன், மயூரேசன், மயூரநாதன்

  முதலாமவர் விக்கிபீடியா முன்னோடி,
  இரண்டாமவர் நீங்கள்.
  மூன்றாமவர்?

 18. நீங்கள் கொஞ்சம் குளம்பிட்டியள் மாஹீர்.. பலரும் குளப்புறாங்க…!!!!
  மயூரநாதன் – விக்கிப்பீடியா முன்னோடி
  மயூரன் – நூலகம், தமிழ் உபுண்டு, லினக்ஸ் ஆர்வலர், திறவூற்று மென்பொருள் ஆர்வல்….!!!!!
  இங்கே அவர் பற்றிய தகவல்களைக் காண்க!! http://mauran.blogspot.com/
  பலரும் என்னையும் மயூரனையும் போட்டு நன்றாகக் குளப்புவர். இருவரும் ஒரே பாடசாலையில் படித்தோம், தற்போது இருவரும் கொழும்பில் ஒரே பிரதேசத்தில் உள்ளோம்..!!:)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.