Twitter ஐ காப்பி அடிக்கும் Yahoo

உலகின் மிகப் பிரபலமான Micro வலைப்பதிவு சேவையான ட்விட்டர் பல மில்லியன் பிரளும் ஒரு தளமாக உருவாகியுள்ளது. இதனால் இந்த தளத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பல தளங்களும் பிரதியெடுக்கத் தொடங்கியுள்ளன.

முதலில் பலரும் தற்போதைய Facebook இடைமுகம் Twitter ஐ காப்பியடித்துவிட்டதாக சத்தம் இட்டனர் இப்போது யாகூவும் காப்பியடித்து மேமே எனும் சேவையை ஆரம்பிக்கவுள்ளது. தற்போது இந்த சேவை அல்பா (அதாவது யாகூ நிறுவன மென்பொருள் வல்லுனர்கள் மட்டுமே இயக்கிப் பார்க்கலாம்) பதிப்பில் உள்ளது. விரைவில் பீட்டா பதிப்பு வெளியானால் நாங்கள் எல்லாரும் ஒரு தடவை பயன்படுத்திப் பார்க்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா???

வேர்பிரசில் Twitter Clone சில நிமிடங்களிலேயே செய்யலாம். உளறல்.காம் இப்படியாக வேர்ட்பிரஸ் மேல் தயாரிக்கப்பட்ட ஒரு குறு வலைப்பதிவுத் தளமாகும்.

3 thoughts on “Twitter ஐ காப்பி அடிக்கும் Yahoo”

  1. உண்மையில் யாகூ இதனை போர்த்துக்கேய மொழியில் ஏறத்தாள ஆறு மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது. இப்போது தான் ஆங்கிலத்துக்கு வந்துள்ளது.

  2. ஆய்வுக் கட்டுரைகள் சிலவற்றை pdf வடிவில் சேர்த்து வைக்க ஒரு இணையத்தளம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறன் அண்ணா. எந்த இலவச இணையத்தளம் இதற்குப் பொருத்தமாக இருக்கும்

  3. @Bage
    தகவலுக்கு நன்றி நண்பரே

    @பனையூரான்
    http://www.scribd.com என்ற தளத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். அங்கு ப்ரீவியூ வசதி இருப்பது கூடுதல் வசதி.

Leave a Reply