The Road (2009) விமர்சனம்

உலகம் அழிவில் வீழ்வதாகவும், அதில் மானிட இனமே அழிந்துபோவதாகவும் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அழிவிற்கு இயற்கையின் சீற்றமோ அல்லது சொம்பி போன்ற காரணங்களோ அல்லது நோய் நொடிகளோ அல்லது அணுவாயுத யுத்தமோ அல்லது வேறு ஏதாவது காரணங்களோ இதுவரை ஹொலிவூட் திரைப்படங்களில் காட்டியிருக்கின்றார்கள்.

ஆனால் மிக குறைவான திரைப்படங்களிலேயே உலகின் நாகரீகங்கள் அழிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகின்றன. அவ்வகையில் இந்த த றோட் எனும் திரைப்படமும் உலகின் நாகரீக அழிவின் பின்னர், நாகரீகம் அற்ற ஒரு சமூதாயத்தின் கோரப் பிடியில் இருந்து தப்ப விழையும் ஒரு தந்தை, தனயனின் கதையே ஆகும்.

இது ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த நாவலிற்கு புலிட்சர் விருது கூடக் கிடைத்துள்ளது.


கதையின் ஆரம்பத்தில் இருந்து ஒரு தந்தையும் மகனும் ஒருமித்துப் பயனிக்கின்றார்கள். மிகவும் அழுக்கான உடைகளை அணிந்திருப்பதுடன் மிகவும் நலிவடைந்தும் இருக்கின்றார்கள். இவர்கள் யார் இவர்கள் பிரைச்சனை என்ன வென்று நாங்கள் நினைக்கும் போதே அவர்களின் பிந்தைய காலத்தையும் காட்டிவிடுகின்றார்கள்.

உலகின் நாகரீகம் அழியும் தறுவாயில் ஒரு குடும்பத்தினுள் ஒரு புதிய நபர் பிரவேசிக்கின்றார். ஒரு குழந்தை பிறக்கின்றது இந்த தம்பதியினருக்கு. சந்தோஷமாக இருக்கவேண்டிய இந்த நிகழ்வு இவர்களை மேலும் குழப்பத்திற்கு ஆளாக்குகின்றது. தாமே இந்த நிலையில் எவ்வாறு வாழ்க்கையை நடத்தப் போகின்றோம் என்று நினைக்கும் வேளையில் எவ்வாறு இந்த மகனை பொறுப்பாக வளர்த்தெடுப்பது என பெற்றோர் கலங்குகின்றனர்.

நிலமை மோசமடையத் தொடங்கவே, நம்பிக்கை இழக்கும் தாயார் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கின்றார். சற்றும் மனம் தளராத தந்தையோ இறுதிவரை போராடப்போவதாக் கூறுகின்றார். பின்பு இனிமேலும் தன்னால் இப்படியான வாழ்க்கையை வாழ முடியாது என்று எண்ணி தாயார் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றார். இப்போது தந்தையும் மகனும் மட்டுமே குடும்பத்தில் மிச்சம்.

தனயனும் தந்தையும் பயனத்தின் போது

அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தின் இன்னமும் நாகரீகம் அழிந்துவிடாமல் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் தந்தையும் தனயனும் தமது பயனத்தை ஆரம்பிக்கின்றனர்.

இவர்களின் பயனத்தில் சந்திக்கும் இடையூறுகள பற்றியதே மீதிக் கதை. இதில் திகிலூட்டும் விடயம் என்னவெனில் மனிதர்களை உண்ணும் மனிதர்கள்.

நாகரீகம் அழிந்து அதனுடன் உணவு உறைவிடம் போன்றவற்றிற்கு தட்டுப் பாடு ஏற்படுவதனால் ஒரு கூட்டம் மனிதர்களை விலங்குகள் போல வேட்டையாட புசித்து வருகின்றது. விடியலைத் தேடும் தந்தையும் தனயனும் இவர்களிடம் மாட்டுப்பட்டார்களா இல்லையா என்று பார்க்கும் நேரங்களில் நெஞ்சம் திக் திக் என்கின்றது.

தந்தை மகன் பாசப்பிணைப்பையும் உலகம் மாறினால் என்ன ஆகும் என்பதையும் அழகாகப் படம் ஆக்கியுள்ளார்கள். நேரம் கிடைத்தால் கட்டாயம் பார்த்து மகிழுங்கள்.

My Rating: 80/100

5 thoughts on “The Road (2009) விமர்சனம்”

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  பதிவைப் படித்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

 2. படத்தின் எண்மிய பல்திற வட்டு (அதாங்க, டிவிடி) நண்பர் ஒருவரால் பல மாதங்களுக்கு முன்பே தருவிக்கப்பட்டிருந்தாலும் டிரைலர் மட்டுமே பார்த்தேன். படம் இன்னமும் பார்க்கவில்லை.

 3. @கிங் விஷ்வா
  உங்கள் பின்னூட்ட வேகம் பிரமிக்க வைக்கின்றது. கட்டாயம் நேரம் கிடைக்கும் போது திரைப்படத்தைப் பாருங்கள். பிடித்திருந்தால் அறியத் தாருங்கள்.

 4. //எண்மிய பல்திற வட்டு //இப்படி ஒரு தனி தமிழ் வார்த்தை(கள்) தேவையா? பல்லே சுளுக்கி விட்டது!

 5. @ரவி
  ஆங்கிலத்தில் தெரியாத வார்த்தை என்றால் துருவித் துருவித் தேடும் நாங்கள் தமிழில் புதிதாய் ஒரு வார்த்தை வந்தால் அதிகமாக அலுத்துக் கொள்வதேனோ???

  மொழி பிழைக்க அடுத்த கட்டத்திற்குச் செல்ல சில மாற்றங்களைச் சுமந்தே ஆகவேண்டும். 🙂

Leave a Reply