Shutter Island திரையில் வெளியானது

ஷட்டர் ஐலண்ட்

அமெரிக்க திரையரங்குகளில் Shutter Island திரைப்படம் இன்று வெளியானது. டைட்டானிக் புகழ் லியனாடோ டிக்காப்பிரியோ தோண்றும் இந்த திரைப்படம் இதுவரை நல்ல வரவெற்பைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிற்கின்றன.

உளவியல் திகில் கதை என்று வகைப்படுத்தப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை IMDBஇல் 85/100 என்ற புள்ளியைப் பெற்றிருப்பது இந்த திரைப்படம் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.

டிக்காப்பிரியோ இது வரை நடித்த பாத்திரங்களில் இது ஒரு வித்தியாசமான பாத்திரம் என்றும் புகழப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தை இயக்கிய Martin Scorseseஇன் இயக்கத்தில்தான் The Departed எனும் திரைப்படம் வந்தது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

இலங்கையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர் பார்க்க முடியாது டிவிடி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

Leave a Reply