Prison Break தொலைக்காட்சித் தொடர்

பிரிசின் பிரேக் எனும் தொடரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது வரை நான் பார்த்த ஆங்கிலத் தொலைக்காட்சிச் தொடர்களில் X-Files க்குப் பிறகு அதிகமாக இரசித்துப் பார்த்த தொடர் என்றால் இந்த Prison Break தான்.

 

அமெரிக்க அரச இயந்திரத்தை கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு அப்பாவி நபரைப் பழிவாங்கத் துடிக்கிறார் ஒரு பெண். இவர் இதற்குத் துணையாக எப்.பி.ஐ ஏஜென்டுகளையெல்லாம் பணிக்கமர்த்துகின்றார். ஏதோ கத்தரிக்காய் வெட்டுவது போல டப்பு டப்பு என்று தன் எதிரிகளை கொலை செய்கின்றார். இது போதாதென்று கதைக்காமல் கடதாசியில் எழுதிக் கட்டளையிடும் என்னொரு நபர்.

 

ஒருத்தரைப் பணிய வைக்கவென்று அவரின் மகனை ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக்கி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அவனைக் காப்பாற்ற அவனின் தம்பி தானும் ஒரு வங்கியில் கொள்ளை அடிப்பது போல நாடகமாடி சிறைச்சாலைக்குச் செல்கின்றார். இதற்குள் அண்ணாவின் முன்னாள் காதலி அதைவிட மனைவி மேலும் ஒரு மகன் என்று குடும்ப சென்டிமென்டு வேற இருக்குது.

 

தொடரின் நாயகன் ஸ்கோஃபீல்ட் நல்ல நடிப்பு அமைதியான நடிப்பு. அவர் பாத்திரத்திற்கு ஏற்ற தோற்றம். அவருக்கு ஒரு டாக்டர் காதலி, சாரா டங்கிரிட்டி.  அதாவது சிறைச்சாலையில் வைத்தியராகப் பணிபுரியும் பெண் டாக்டருடன் நம்ம நாயகன் காதலில் வீழ்ந்துவிடுவார். அந்தப் பெண்ணும் ஒரு முக்கியமான கட்டத்தில் அவருக்கு உதவித் தொலைக்கின்றது. Smiley

 

இப்படியே பின்னிப் பின்னி கதை நீண்டு செல்கின்றது. கார் ஓட்டம், மனித வேட்டை என்று ஒவ்வொரு அங்கமும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு அங்கம் முடிவிலும் அடுத்த அங்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு கொழுக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் இதை டிவிடியில் பார்க்க நேர்ந்தால் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். நிறுத்த முடியாது அத்தனை விறு விறுப்பு. Smiley

 

சீசன் 1, சீசன் 2 முடிந்துள்ளது விரைவில் மற்ற சீசன் வரும் என்று எதிர் பார்க்கின்றேன். இலங்கையில் இப்போது ஆர்ட் டீவியில் சீசன் ஒன்று போடுகின்றார்கள். கேபிள் அல்லது செய்மதித்தொலைக் காட்சி இருந்தால் 3ம் சீசன் தொடங்கும் போதே நேரடியாகப் பார்க்கலாம். என்னுடைய வீட்டில் இரண்டும் இல்லை ஆயினும் இணையத்தில் இறக்கிப் பார்க்கின்ற யாரிடமாவது வாங்கிப் பார்க்க வேண்டியதுதான்.

 

5 thoughts on “Prison Break தொலைக்காட்சித் தொடர்”

  1. மயூரன்
    ஃபயர் பாக்ஸில் கிரீஸ் மங்கியும் அந்த ஸ்கிரிப்டும் நிறுவினால் தான் உங்கள் பக்கத்தை படிக்க முடிகிறது.
    Prison Break ஆ பார்த்திடுவோம்.

  2. இப்போது ஃபான்ட் பிரைச்சனை சரி செய்யப்பட்டுள்ளது…!!!! :).

    அனைவரும் இனி வழமைபோல இங்கே பதிவுகளை வாசிக்கலாம்… சில அலைன்ட்மென்ட் பிரைச்சனை!!!

Leave a Reply