Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Feb 14, 2010 in இணையம், உலகம், கணனி | 1 comment

PayPal ஐ தடை செய்த இந்தியா

கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே.

இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட காரணம் பேபால் இந்திய மத்திய ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிந்து கொள்ளவில்லை என்பதே.

இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றே பேபால். பாதுகாப்பு கூடிய முறை என்பதுடன் பலராலும் பரந்தளவில் பயன்படுத்தப்படும் முறையும் இதுதான் என்று கூறினால் மிகையாகாது.

இந்த தடைமூலம் இணையத்தில் பேபால் பாவிக்கும் இந்தியர்கள் பெரும் பிரைச்சனைகளை அடையப் போகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் பேபால் முழுமையான சேவையை வழங்கவில்லை. இலங்கை பேபால் பயனர்கள் பணத்தை மற்ற பயனர்களுக்கு அனுப்பும் வசதியுண்டு ஆனால் அங்கிருந்து பேபால் பணத்தை பெறும் வசதியில்லை. ஆயினும் இருபக்க கொடுக்கல் வாங்கல் வசதி இந்திய பேபால் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்படித் தக்கதாகும்.

எது எவ்வாறிகினும் பேபால் தம்மை பதிவு செய்துகொண்டால் மீள இந்தியாவில் இயங்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

1 Comment

  1. 🙂
    பேபால் இயங்கவில்லை என்று கேள்விப்பட்டேன், இப்போது தான் இதை அறிகிறேன்… 🙂

Leave a Reply

%d bloggers like this: