இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்

இதயத்தின் துடிப்பினில் எனும் பாடலை இலங்கையைச் சேர்ந்த ஹார்ட் பிரேக்கர்ஸ் எனும் நிறுவனத்தை சேர்ந்த கலைஞர்கள் படைத்துள்ளனர். முதலில் பாடலைப் பார்த்துவிடுங்கள்

இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தமைக்கு காரணம் நான் சிறுவயதில் வளர்ந்த திருமலையில் பல இடங்களில் காடசிப்படுத்தப்பட்டுள்ளமையாகும்.

பாடல் விமர்சனம் எல்லாம் செய்யுமளவிற்கு நான் ஒன்றும் வித்தகன் அல்ல ஆயினும் என் சிற்றறிவிற்கு எட்டிய சில கருத்துக்கள். பாடல் காட்சிகளை தமக்கிருக்கும் குறுகிய தொழில்நுட்ப வளங்களுடன் அருமையாக அமைத்துள்ளார்கள். மேலும் பாடல் காட்சியில் வரும் முக்கிய பாத்திரங்கள் இரண்டும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாயகன், நாயகி பின்னால் போகும் எத்தனை பாடல்கள் வந்தாலும் சலிக்காது போல எமக்கு 😉

இசை அருமையாக உள்ளது. சாதாரணமாக அமைக்கப்படும் பாடல்களை விடப் பல மடங்கு சிறப்பாக அமைத்துள்ளார்கள். இசைக்கு ஒரு சபாஷ் போடலாம்.

எனக்கு இந்தப்பாடலில் அவ்வளவாக இலயிக்காத விடையம் என்றால் நடனக் காட்சியமைப்புகள். அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. சரியாக வராத அந்த நடனத்தை தவிர்த்திருந்தால் பாடல் பார்க்கும் போது இன்னும் நல்ல உணர்வு (அதாங்க பீலிங்) அமைந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

அடுத்து மிக முக்கியமான விடையம், பாடகர் ழ,ள,ல க்களில் கோட்டை விடுகின்றாரோ எனத் தோன்றுகின்றது.

மட்டுப்பட்டுத்தப்பட வளங்களுடன் இப்படியாக சிறப்பான பாடலை அமைத்துள்ள ஹார்ட் பிரேக்கர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

அப்படியே பேஸ்புக்கிலும் அவர்களை லயிக்கிடுங்கள்

5 thoughts on “இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்”

 1. உண்மையச் சொல்லவேண்டுமெனில்- பாடல் கேட்கக் கூடியதாக உள்ளது. ஆனால் எங்கோ கேட்டது போலுள்ளது. இது தவிர்க்கமுடியாதது போலுள்ளது.
  தற்போதைய பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர்கள் அனைவரது பாடலுமே
  எங்கோயோ கேட்ட உணர்வைத் தரும்போது இவர்கள் எம்மாத்திரம்.
  ஆரம்பத்தில் வரும் எக்கோடியன் இசையைத் தவிர்த்திருக்கலாம். அது ஒரு பழைய சாயலைத் தருகிறது. ஈழத்துப் பாடல்களில் இவ்வாத்தியத்தின் ஆழுமை அன்றிலிருந்து மிக அதிகம். 2-2.10 ஒலிக்கும் குரலில் தடிமலுடன் பாடும் குரல்
  இதை இசைக்கலவைக் கருவியால் உருவாக்கியுள்ளார்கள். தேவையற்றது.
  இப்போ பல தென்னிந்தியப் பாடல்களிலும் இந்த “நாராசம்” ஒலிக்கிறது.சகிக்க
  முடியவில்லை. தவிர்த்து பாடகரின் உண்மையான குரலை அனுமதித்திருக்கலாம்.
  காட்சிகள் அழகாக உள்ளன. திருகோணமலையைத் தெரியும் அழகான பூமி, படமாக்கல் சிறப்பாக உள்ளது.
  தனித்துவமாக மாறவேண்டும், பாதிப்பில் மீளவேண்டும். ஒரு மாற்றம் வேண்டும்.
  திருகோணமலை எப்போதும் ஈழத்து இசையில் திருப்புமுனை தருவது, நான் பரமேஸ் கோணேஸ் குழுவைக் சொல்கிறேன். அந்த வகையில் இப்பாடலும் திரும்பிக் கேட்க வைத்தது.
  பாராட்டுக்கள்…. வெற்றுக் கூச்சல் ,கொலை வெறிகளுடன் ஒப்பிடும் போது நீங்கள்
  ஆயிரம் மடங்கு சாதித்துள்ளீர்கள்.

  1. உண்மைதான் யோகன் பாரிஸ். உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன்.

   முழுமையாக ஈழத்து இசையின் அடையாளம் மறையாமல் இருக்க இப்படியான முயற்சிகள் உதவுகின்றன. ஆகவே அவற்றை அடையாளம் கண்டு வளர்க்கவேண்டிய பொறுப்பு எம்மவர்கட்கு உண்டு.

  2. மிகவும் நன்றி அண்ணா.. விமர்சனங்கள் மிகவும் முக்கியம் . வளர்ந்து வரும் எம்மை போன்றவர்களுக்கு இது தான் அடுத்த படைப்பை இன்னும் சிறப்பாக செய்ய உதவும் . நன்றி

 2. மிகவும் நன்றி அண்ணா.. விமர்சனங்கள் மிகவும் முக்கியம் . வளர்ந்து வரும் எம்மை போன்றவர்களுக்கு இது தான் அடுத்த படைப்பை இன்னும் சிறப்பாக செய்ய உதவும் . நன்றி

  1. வாழ்த்துக்கள் தம்பி. மேலும் மேலும் கலக்குங்கள்.

Leave a Reply