Google Friend Connect இப்போது தமிழ் உட்பட 47 மொழிகளில் கிடைக்கின்றது

Google Friend Connect என்பது கூகிளினால் வழங்கப்படும் ஒரு சேவை. இதன் மூலம் உங்கள் தளத்தில் சமூகவலைப்பின்னலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.. MAYUonline.com இல் இந்த சேவை பயன்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

தமது தயாரிப்புகளை பல்வேறு மொழிகளில் வெளியிடுவதில் கூகிளிற்கு நிகர் கூகிள் என்று மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளனர். இப்போது கூகிள் பிரண்ட் கெனக்ட்டை 47 மொழிகளில் வெளியிட்டுள்ளனர், இதில் தமிழும் அடக்கம். இந்திய மொழிகளில் தமிழ், ஹிந்தி, கன்னடா, மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

Tamil Interfaceதமிழ் இடைமுகம்

இது வலைமனை உரிமையாளர்களுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாகும். இதன் மூலம் வலை பயனர்களுடன் அவர்களது மொழியிலேயே தொடர்புகளைப் பேண முடியும். உங்கள் தளத்திற்கான மொழியை அமைப்பதன் மூலம் அது சரியான மொழியை உங்கள் தளத்தில் காட்டும்.

பின்வரும் மொழிகளில் தற்போது கூகிள் பிரண்ட் கெனக்ட் கிடைக்கின்றது: Arabic, Bengali, Bulgarian, Catalan, Chinese, Croatian, Czech, Danish, Dutch, English, Filipino, Finnish, French, German, Greek, Gujarati, Hebrew, Hindi, Hungarian, Indonesian, Italian, Japanese, Kannada, Korean, Latvian, Lingala, Lithuanian, Malay, Malayalam, Marathi, Norwegian, Oriya, Persian, Polish, Portuguese, Romanian, Russian, Serbian, Slovak, Slovenian, Spanish, Swedish, Tamil, Telugu, Thai, Turkish, Ukrainian, Vietnames.

2 thoughts on “Google Friend Connect இப்போது தமிழ் உட்பட 47 மொழிகளில் கிடைக்கின்றது”

  1. வணக்கம் நண்பரே

    இலங்கையிலிருந்து வலைப் பதிவு செய்யும் தங்களை கொழும்பு வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாத இறுதியில் நடாத்த திட்டமிட்டுள்ளோம், தங்களின் வருகை மற்றும் ஏனைய விமர்சனங்கள் கருத்துக்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ(vanthidevan@gmail.com) அல்லது புல்லட்டின் மின்னஞ்சலுக்கோ (bullettheblogger@gmail.com) தெரிவிக்கவும்.

    நன்றி

    அன்புடன்
    வந்தியத்தேவன்

Leave a Reply