Google Buzz பாவிக்கிறீங்களோ???

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் Buzz என்றால் என்ன?

கூகிள் Buzz எனப் படுவது Twitter, FaceBook, Friendfeed போன்றவற்றை பிரதி செய்து (அதாங்க, காப்பி அடிச்சு) ஜிமெயில், கூகிள் ரீடர் போன்ற கூகிளின் சேவைகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட ஒரு சேவையே ஆகும்.

உங்களுக்கு ட்விட்டர் பரிச்சயம் என்றால் கூகிள் பஸ் பற்றிப் புரிவதற்கு அவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இணையத்தில் பார்க்கும் விடையம் ஒன்றையோ அல்லது உங்கள் மனதில் தோன்றும் ஒரு கருத்தையோ நீங்கள் வெளியிட அதில் மற்றவர்கள் பதில் போட்டு தங்கள் கருத்தையும் தெரிவிக்க கூடிய ஒரு மேடையை அமைத்துத் தரும் தன்மையே இதன் அடிப்படைச் செயற்பாடு.

இதைவிட Flickr, Twitter போன்ற தளங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் நிகழ் நேரத்தில் இங்கே காட்டமுடியும்.

மேலதிக தகவலிற்கு இந்த யூடியூப் காணொளியைக் காணுங்கள்

எனக்கு இன்னும் Buzz இல்லையே??

நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் புகுபதிகை செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் பஸ் வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று எண்ணலாம்.

மயூரேசனை Google Buzz இல் பின் தொடர

7 thoughts on “Google Buzz பாவிக்கிறீங்களோ???”

  1. எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.
    twitter, அது இது எண்டு எல்லாத்துக்கும் தனிதனியா போக தேவையில்லை.

  2. எனக்கு வந்திருச்சு………………….

    🙂 😛

    எனக்கு buzz இன் pronunciation வடிவா விளங்கப் படுத்தவும்…

  3. Google எப்போதுமே ஒரே id யை வைத்தே………… இப்போது BUZZ ம் super தான்

Leave a Reply