65 : பச்சைக்கிளி முத்துச்சரம் – விமர்சனம்

போக்கிரி பார்த்த பின்பு திரையரங்கு சென்று ஒரு தமிழ் படம் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவேயில்லை.இப்பொழுது ஒரு நிறுவனத்தில் பயிற்சிக் காலத்தில் இருப்பதால் கிழமை நாட்களில் நேரம் கிடைப்பதேயில்லை. கிழமை நாள் போனால் பரவாயில்லை என்று யோசித்தால் சனிக்கிழமையும் வேலை. அரை நேரம் என்ற பெயரில் 2 மணி வரையும் வேலை இருக்கும். அன்றும் வேலை முடிந்ததும் எனது நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவன் வரத் தயாரா என்று கேட்டேன். மறு முனையில் சரி என்று பதில் வரவே இருவரும் சொல்லி வைத்தபடி தியட்டர் வாசலில் சந்தித்துக் கொண்டோம்.

உள்ளே நுழைந்து டிக்கட் கவுண்டரில் நுழைவுச் சீட்டை வேண்டிய போது திரையரங்கில் மற்ற தளத்தில் மீரா ஜாஸ்மினின் படம் ஓடுவது தெரிந்தது. மீராவின் பரம இரசிகனாச்சே நான். ஆகவே மனதில் சிறு குளப்பம் என்றாலும் நண்பனின் கரைச்சலினால் பச்சைக்கிளி முத்துச்சரம் செல்வது என்று முடிவானது.

உள்ளே செல்ல சரியாகப்படம் ஆரம்பித்து விட்டிருந்தது. சரத்குமாரை அப்பா அப்பா என்று கலங்கியவாறு ஒரு அபலைச் சிறுவன் அணைக்கிறான் பின்பு சரத்குமார் அந்தக் குளந்தைக்கு ஒரு ஊசி போடுகின்றார். முதல் காட்சியைப் பார்த்ததும் சரத்குமார் வைத்தியர் என்று யோசித்தவாறே ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம்.

அதன் பின்பு திடீர் என்று திரைக்கதை நம்மை சில காலங்கள் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றது. அங்கே சரத்குமார், அழகான மனைவி, ஒரு குளந்தையைக் காட்டுவதுடன் ஒரு பாடல் செல்கின்றது. உன் சிரிப்பினில் என்ற பாடலுக்கு சரத், அவர் மனைவி நெருக்காமாகத் தோன்றுகின்றனர். அருமையான பாடல் அருமையான மெட்டு பாடல் மனதை வருடிச்செல்கின்றது.

உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக
உன் கண் இமைகளின் என் பார்வையின் மீதியும் தேய!!

இப்படிப் பாடலில் லயித்துக்கொண்டு சரத்தின் அழகான குடும்பத்தை இரசித்துக் கொண்டு இருந்த வேளையில் வழமைபோல குடும்பத்தில் கலக்கம் தோன்றத் தொடங்குகின்றது. அதாவது சரத்தின் குளந்தைக்கு நீரழிவு நோய் வந்து விடுகின்றது. இதனால் சரத், அவர் மனைவி உறவு முன்பு போல் இல்லாமல் விலகி விலகிச் செல்கின்றது. மனைவி கணவனை விட குளந்தையைப் பராமரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். வழமையான சராசரிக் கணவனான சரத்தின் கண்கள் நாளாந்தம் பயனம் செய்யும் புகையிரதத்தில் ஒரு அழகான மாதுவை நோட்டம் விடத் தொடங்குகின்றது.

அந்த அழகான மாது யாருமல்ல ஜோதிகாதான். சாதாரண பேச்சில் தொடங்கும் இருவரது நட்பும் ஆழமாக வேரூண்டத் தொடங்குகின்றது. இருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒழிவு மறைவின்றி பகிர்ந்துகொள்கின்றனர். தமது மனைவி மகன் பற்றி சரத்தும் தனது கணவன் பற்றி ஜொவும் கருத்துப் பரிமாறிக்கொள்கின்றனர். முதலில் விலக எத்தனித்தாலும் இருவரும் விலக முடியாமல் மேலும் மேலும் ஒருவரை ஒருவர் நெருங்குகின்றனர். இருவரும் சந்திக்கும் போது கரு கரு விழிகளில் எனும் எனக்கு தற்போது மிகப்பிடித்தமான பாடலை பின்னணியில் போட்டுக் கலக்குகின்றார்கள். என்ன ஒரே சோகம் அந்தப் பாடல் படத்தில் முழுமையாக வரவில்லை. துண்டு துண்டாக வெட்டி வெட்டி வருகின்றது.

சாதாரண உணவகத்தில் உணவுஉண்டு மகிழ்ந்த இருவரும் பின்னர் ஒரு நாள் ஒரு டாக்சியில் பீச் ரிசோட் ஒன்றில் அறை வாடகைக்குப் போட்டு அங்கு தங்குகின்றனர். இருவரும் பெரும் தயக்கங்களுக்கு மத்தியில் ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிக்கின்றனர். அப்போது கதவில் யாரோ தட்டும் சத்தம்.
“ யார்?” சரத்

“ரூம் பாய் சார்” வெளியிலிருந்து ஒரு குரல்.

சரத் கதவைத் திறக்க ஒரு திருடன் உள்ளே புகுந்து சரத்தை அடித்துப் போட்டு விட்டு பணம் என்பவற்றை திருடுகின்றான். திருடும் போது இருவரும் கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து அதை வைத்து இருவரையும் மிரட்டி அப்பப்போது பணம் கேட்கின்றான் அந்த லோரன்ஸ் என்ற ரவுடி. சரத் உண்மையை வீட்டில் மனைவியிடமும் சொல்ல முடியாமல் பொலீஸ் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுகின்றார். தன் மகனின் எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த எட்டு லட்சம் பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிகளிடம் தாரை வார்க்கின்றார். எட்டு லட்சமும் முடிந்து அதன் பின்னர் இவரிடம் பணம் இல்லாதபோதும் ரவுடி சரத்தை அரியண்டம் செய்யவே உண்மையை தன் மனைவியிடம் சொல்ல முடிவு செய்கின்றார்.

உண்மையை மனைவியிடம் சொன்னதும் மனைவி சரத்திடம் கூட சொல்லாமல் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றார். மனைவி வெளியில் போய்விட்ட நேரத்தில் குளந்தையைத் தனியே கவனிக்க வேண்டிய பொறுப்பு சரத்திடம். இதற்குள் தன்னிடம் கொள்ளையிட்ட லாரன்ஸ் யார் என்பதையும் அவன் பின்னாலுள்ள கூட்டத்தையும் சரத் கண்டுபிடிக்கின்றார்.

இதன் பின்னர் நான் கதையைச் சொன்னால் நீங்கள் தியட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு அர்த்தம் இருக்காது. ஆகவே நீங்கள் மிகுதியை தியட்டரில் சென்று பாருங்கள். திடீர் திருப்பம் இதன் பின்னர் திரைப்படத்தில் உள்ளது.

திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் திரைப்படத்திற்கு வலுச் சோக்கின்றன. ஆயினும் கெளதம் மேனனின் படம் என்று பார்த்ததற்கு ஏமாற்றம்தான். மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த திரைப்படம் என்றும் சொல்ல முடியாது. சரத்தில் வயசு தெரிந்தாலும் அடிதடிக்காட்சிகளில் புகுந்து கலக்குகின்றார். வழமையான தமிழ் சினிமாச் சண்டையான தனிநபர் பல வில்லன்கள் என்ற கொள்கையைத் தவிர்த்திருக்கலாம். முதலில் தனியாளாக வில்லன்களிடம் அடிபடும் சரத் பின்னர் தனியாளாக நின்று பல வில்லன்களைச் சமாளிப்பது எரிச்சலைத் தருகின்றது. மற்றும் படி சரத்தின் நடிப்பு சிறப்பு. ஜோ பற்றிச் சொல்லத் தேவையில்லைதானே. அதே துறு துறு நடிப்பு. சரத்தின் மனைவியாக நடித்தவர் முகத்தில் பருக்கள் இருந்தாலும் அவருக்கும் அழகான சிரிப்பு. மொத்தத்தில் நல்ல நடிகர் பட்டாளம்.
பி.கு : கடைசிக் காட்சிகளில் சரத் குடும்பம் ஹைதராபாத் போகின்றது. அங்கே லாரன்ஸ் கூட்டத்திடம் இருந்து தப்பி வாழ முயற்சிக்கின்றது. ஹைதரபாத் என்றதும் எங்கயாவது அண்ணா தெரியிறாரா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். ம்ஹூம்… ஆளைக் காணவேயில்லை. பெருத்த ஏமாற்றம்.

10 thoughts on “65 : பச்சைக்கிளி முத்துச்சரம் – விமர்சனம்”

 1. படம் theatre விட்டுப் போற நேரத்துல நல்ல விமர்சனம் 🙂

 2. படம் பார்த்தேன் மயூரேசன் அண்ணே!! படம் நல்லாதான் இருக்கு!! ஆங்கில படம் ஒன்றின் தழுவல் என இயக்குனரே சொன்னதாகா எங்கேயோ வாசித்தேன்!! ஆனால் இதில நீங்க சொன்ன அந்த திருப்பம் அருமையாக இருக்கிறது! ஆரம்பத்தில நான் என்னடா இப்படி படம் போகுதே என பார்த்தால் திடீரென நல்ல திருப்பம்!! ஜோதிகா நல்லா நடிச்சு இருக்கா!!

 3. நிதன்

  யோ…
  நீ படம் பார்த்தால் சும்மா இருக்க வேண்டிய்து தானே…
  நீ எல்லாம் விமர்சனம் எழுதுகிறாய்?
  நீ விமர்சனம் எழுதித் தான் படம் பார்க்க வேண்டுமா?
  இனிமேல் படம் பார்த்தால் பார்த்து விட்டு சும்மா இரு அதை விட்டு விமர்சனம் எழுதும் வேலை வைச்சுக் கொள்ளாதே

 4. இந்த விமர்சனத்தைப் படிப்பவர்கள் முதற்கண் என்னை மன்னிப்பார்களாக…
  ————————–

  மயூர் நீங்கள் தப்பித்தீர்கள் நாங்கள் “பருத்தி வீரன்” படத்துக்குச் சென்றேன்.

  படம் ஆரம்பித்து ரொம்ப நேரம் கதையென்று ஏதாவது இருக்கிறதா…படம் எதை நோக்கி செல்கின்றது…என ஒரே குழப்பம்.

  இது ஒருபுறம் இருக்க – ஐயோ ஆண்டவா….இயக்குனர் அமீர் மனதில் இவ்வளவு குரூர புத்தியா என நினைக்கத் தோன்றிவிட்டது.

  படம் முழுவதும் – கதாநாயகனும் அவன் சித்தப்பாவும் (…?…!) குடித்துவிட்டு போக்கிரித்தனம் பண்ணுவதும், அடுத்தவன் ஓட்டிவரும் கம்புகளை (prostitute) மடக்கி ………..கடைசியில் கதாநாயகியை அடுத்தவர்கள் இதே போல நினைத்து….
  சே…எழுதவே கூசுகிறது….அய்யோ அய்யோ…ஏன் தான் இப்படியெல்லாம் படம் எடுக்கிறான்(!)களோ?

  ஓசியில் கூப்பிட்டால் கூட இந்தப்படத்திற்கு போகாதீர்கள்…இல்லை இல்லை அந்த தியேட்டர் பக்கம் கூட போய்விடாதீர்கள்.

 5. God அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி…
  நீங்கள் கூறிய பருத்தி வீரன் இன்னமும் பார்ககவில்லை… இனிமேல்தான்..
  ஆனால் நீங்க பார்க்க வேண்டாம் என்று சொல்வதால் அடுத்ததாகப் பார்க்கப் போகின்ற திரைப்படம் மொழி!

 6. //படம் theatre விட்டுப் போற நேரத்துல நல்ல விமர்சனம் :)//
  என்னா செய்யிறது …
  நேரம் விரட்டுகின்றது… 🙁

 7. ஆமாம் சுபன் நீங்கள் சொன்னது போல திருப்பம் சிறப்பாக இருந்தாலும் ஊகிக்கக் கூடியதாக இருந்தது!!!
  ஜோ இப்போ மாற்றான் மனைவி ஆகவே சுபன் இனிமேல் முன்பு மாதிரி கொமன்ட் அடிக்கக் கூடாது சரியா??? 🙂

 8. யாருப்பா நீங்க நிதன்!!
  இப்படி நிந்தித்தித்து உள்ளீர்கள்…
  என்ன செய்வது எழுதிப்பழகி விட்டது எப்படி நிறுத்துவது!! 🙂

 9. பச்சைக்கிளி முத்துச்சரம்…பார்க்க வேண்டும் மயூர். எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது பார்க்க வேண்டும். ஐதராபாத்தில் அண்ணாவைத் தேடினாயா? ஹா ஹா ஹா…கிடைத்தாரா?

 10. //பச்சைக்கிளி முத்துச்சரம்…பார்க்க வேண்டும் மயூர். எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது பார்க்க வேண்டும். ஐதராபாத்தில் அண்ணாவைத் தேடினாயா? ஹா ஹா ஹா…கிடைத்தாரா?//

  எங்க அவரைக் கண்டாத்தானே!!! அதாவது ஹாலிவூட் படம் தவிர்ந்த படங்களில் தலைகாட்டுவதில்லை என்று முடிவு எடுத்து இருக்கின்றாராம்!!! 😉

Leave a Reply