2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம்

கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளேன். இன்னும் 2200 சரங்கள் உள்ளன. அண்மையில் மயூரேசனும் களத்தில் குதித்து இருக்கிறார்

தமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே..

எப்படி செய்வது?

http://translate.wordpress.com/ சென்று பயனர் கணக்கு உருவாக்கி மொழிபெயர்ப்பு மொழியாகத் தமிழைத் தேர்ந்தெடுங்கள்.

http://translate.wordpress.com/list.php போய் மேலிருந்து கீழாக்க ஒவ்வொரு சரமாக மொழிபெயர்க்கலாம். edit என்ற குறிப்பிடப்பட்டிருப்பவை ஏற்கனவே தமிழாக்கப்பட்டு விட்டது. அவற்றை விட்டு விடலாம். இல்லை, சரியாக தமிழாக்கப்பட்டிருக்கிறா என்று உறுதி செய்யலாம். add இணைப்பு உள்ளவை இன்னும் தமிழாக்கப்படாமல் இருப்பவை.

தெளிவில்லாத சரங்களை அப்படியே விட்டுவிடுங்கள். வேறு யாராவது தமிழாக்கலாம். சரத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் தெரியவில்லை என்றால் அவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாக ஆங்கில எழுத்திலேயே எழுதி விடுங்கள். விவரம் தெரிந்த வேறு எவரும் தமிழாக்கலாம். ஐயங்கள், விளக்கங்களை comment பகுதியில் தந்தது உரையாடுங்கள். பொதுவான உரையாடல்களுக்கு, நம்முடையே ஆன ஒருங்கிணைப்புக்கு http://groups.google.com/group/tamil…ss_translation குழுமத்தில் இணையலாம்.

தளம் முழுக்க ஒரே மாதிரி சொல்லாடல் இருப்பது முக்கியம்..இதுவரை நான் பயன்படுத்திய பொதுவான சொல்லாடல்க்களும் என் பரிந்துரைகளும்..

blog – பதிவு (most of the places, to be short)..வலைப்பதிவு (when we need to be more formal)

post – இடுகை

comment – மறுமொழி

category – பகுப்பு

tag – குறிச்சொல்

wordpress – வேர்ட்ப்ரெஸ

link – தொடுப்பு

user – பயனர்

logout (verb) – வெளியேறுக

login (noun) – புகுபதிகை

edit – திருத்துக

role – பொறுப்பு

நினைவு வரும்போது பிற சொற்களையும் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவிக்கிறேன்.

கவனத்தில் வைக்க வேண்டிய இன்னும் சில – நம் பண்பாட்டுக்கு ஏற்ப வினைச்சொற்களை மரியாதை விகுதிகளுடன் எழுதலாம். எடுத்துக்காட்டுக்கு, தேடு என்பதற்குப் பதில் தேடுக என்று தமிழாக்கலாம். இன்னொன்று நேர்மறையாக தமிழாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, delete userஐ பயனரை அழிக்கவும் என்று சொல்லாமல் பயனரை நீக்கவும் என்று தமிழாக்குவது..அழிப்பது என்பது நமது பண்பாட்டில் கடுமையான சொல்லாடல் தானே..

நீங்கள் குறைந்தது இவ்வளவு சரங்கள் தமிழாக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. உங்களால் இயன்றைச் செய்யலாம். ஒரு நிமிடத்துக்கு இரண்டு சரங்கள் என்ற வேகத்தில் தமிழாக்குவது பெரும்பாலும் சாத்தியமே..

எவ்வளவே பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டமா

அன்புடன்
ரவி

மேலும் அறிய ரவியின் தளத்திற்குச் செல்லுங்கள்

தமிழ் வேர்ட்பிரஸ் மடலாடற் குழுவில் நடந்த உரையாடல் ஒன்று…….!! அதிரடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற  தமிழ் ஆர்வலர்களையும் அழைக்கின்றேன்!!!!  😆 

8 thoughts on “2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம்”

 1. அருமை…!!!!!!!!!!!!!!

  இட்லிவடையின் தூண்டுதலால் செயல்படுகிறோம் என்றில்லாமல் ஆர்வத்தோடு தமிழில் தமிழர்களை வலைப்பதியவைக்க இது ஒரு சிறந்த முயற்சி…

  என்னுடைய பங்களிப்பை செய்கிறேன்…

  (ஏன் இந்த கொலைவெறி :))

 2. ஹா.. ஹா… நன்றி செந்தளல் ரவி அவர்களே!1!!
  நீண்ட நாட்களாக இந்த முயற்சி தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது அதுதான் இந்த கொலை வெறி!!!! 😈

 3. நாலு பேருக்கு நல்லதுன்னா மறுமொழிக் கயமை செய்வதில் தவறே இல்லை 🙂 ஒரே நாளில் 500 சரங்கள் தமிழாக்கி உள்ளோம்..let’s rock 🙂

 4. தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்…!
  எங்களால் ஆன உதவிகளைக் கண்டிப்பாகச் செய்வோம் சகோதரா.

 5. வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! பங்களிக்கும் அனைவருக்கும் மனதார நன்றி…

  இன்னமும் சுமார் 400 சரங்கள் மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. ஜப்பானிய மொழியையும் தமிழ் முந்திச்சென்று விட்டடது,

 6. பிந்திய நிலவரப்படி… இன்னமும் 300 சரங்கள் மட்டுமே மொழிமாற்றப்பட வேண்டும். தமிழ் 6ம் இடத்தில் உள்ளது. நம் மக்களுக்கு வாழ்த்துக்கள்!!! 🙂

Leave a Reply