வில்லு ஒரே லொள்ளு – விமர்சனம்

வில்லுவில் வரும் லொள்ளு விஜய்
வில்லுவில் வரும் லொள்ளு விஜய்

நேற்றய தினம் கடும் பண நெருக்கடி மத்தியிலும் ஹிந்தி கஜனி திரைப்படம் பார்த்துவிடும் திட சங்கர்ப்பத்துடன் மருதானை சினி சிட்டி திரையரங்குக்கு சென்றேன். வாசலில் ஒரே கூட்டம், என்னடா இது கஜனி படத்திற்கு இவ்வளவு கூட்டமா? பரவாயில்லை அமீர்கானுக்கு இப்ப தமிழ் இளசுகள் மட்டத்திலயும் நல்ல ஆதரவு இருக்கு என்று நினைத்துக்கொண்டு கிட்ட போனபோது தான் தெரிந்த்து, இளய தளபதி விசய் அவர்களின் திரைப்படம் வில்லு வெளியாகின்றது என்று.

என்னதானானாலும் கஜனி பார்த்துவிடும் வேகத்தில் உள்ளே சென்ற எனக்கு ஒரே ஏமாற்றம் காத்திருந்தது. அதிகமானோர் வில்லு பார்க்க வந்துள்ளதால் கஜனியை நிப்பாட்டி விட்டார்கள். அங்கே கஜனி பார்க்க சென்றது நானும் ஒரு சர்தார் ஜீயும்.

சர்தாரோ வாசலில் நிற்கும் காவலாளியிடம் ‘கஜனி நஹீ?’ என்று கேட்க அவனும் ‘நஹீ சார்’ என்றான்.

சரி வந்ததுதான் வந்தம் வில்லைப்பார்ரப்பம் என்று லைனில நின்று டிக்கட் எடுத்து உள்ளே சென்றேன். வழமை போல ஒரே இளைஞர் கூட்டம், சில இளைஞி இரசிகர்களும் இருந்தார்கள்.

படம் தொடங்கியதும் ஒரே விசில் சத்தம், அப்புறமாக எப்படா விஜய் வருவார் வருவார் என்று ஏங்கி இருந்த போது இறுதியாக விசய் வந்து சேர்ந்தார். என்ன கொடுமை சார், ஹூரோ அறிமுகம், விஜய் சேலை போர்த்திக்கொண்டு அறிமுகமாகின்றார். ஏதோ அவரை கற்பழிப்பது போல வில்லனுகள் துகிலுரிகின்றார்கள். அப்பவே எழுந்து போய் விடலாமா என்று இருந்த்து, என்றாலும் கொடுத்த 300 ரூபா இழுத்து உட்கார வைத்தது.

படம் தொடர்கிறது, எரிச்சல் அளவு கடந்து திரையைப் பார்க்காமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கெட்ட காலம் ஒரு அழகான பெட்டை கூட பக்கத்தில் இல்லை இல்லாவிட்டால் அத சரி நோட்டம் விட்டு நேரத்தைக் கடத்தியிருக்கலாம்.

படத்தில் விஜயை காட்டி அதில் ஒரு பிளாஷ் பேக் வேற, மகன் விஜயின் அநியாயம் தாங்காமல் தவிக்கும் நேரத்தில் அப்பா விசயையும் காட்டி நோகடித்தார்கள். ஏதோ பல்லிக்கு மீசை வைத்தது போல ஒரு உருவத்துடன் வருகின்றார் விஜய். அதில் உச்சகட்டம் அவர் இராணுவ அதிகாரியாம். அவர் எந்த ஆபரேஷன் போனாலும் தனியாத்தான் போவாராம். இரண்டு கையிலயும் இரண்டு A.K. 47 வைத்து சுடுவாராம். பாக்கிறவன் கேனை என்டா எருமையும் ஏரோபிளேன் ஓட்டும்.

சத்தியமாக சொல்லுகின்றேன், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற சக நடிகர்களைப் பார்த்து எவ்வாறு பாத்திரத்துக்கேற்றவாறு மாறுவது என்று தெரிந்து கொள்வது நலம்.

விஜய் இப்படி என்றால், நாயன்தாரா…. ஐயோ..! அவருக்கு பிங்கினி போடுவதை தவிர வேற எதுவுமே இந்தப் படத்தில் இல்லை.

வடிவேல் மட்டுமே திரைப்படத்தில் ஒரே ஆறுதல். நல்ல நகைச்சுவை. ஹூரோ அறிமுகத்தை விட வடிவேல் அறிமுகம் அபாரம்.

என்னைப்போல பல நொந்த உள்ளங்கள் உலகம் முழுதும் இருக்கும் என்று நம்புகின்றேன். ஒரு இரசிகனை இந்தளவுக்கு பேச வைத்திருக்கிறார் விசய் அவர்கள்.

இந்தப் பதிவில் ஒரு சத்தியம் எடுக்கின்றேன், ‘இனிமேல் விஜய் படங்களுக்கு, அந்தப் படம் பற்றி அறியாமல் உள்ளயே போகமாட்டேன்‘.

15 thoughts on “வில்லு ஒரே லொள்ளு – விமர்சனம்”

 1. //‘இனிமேல் விஜய் படங்களுக்கு, அந்தப் படம் பற்றி அறியாமல் உள்ளயே போகமாட்டேன்‘//
  Too late to decide?

 2. //என்னைப்போல பல நொந்த உள்ளங்கள் உலகம் முழுதும் இருக்கும் என்று நம்புகின்றேன்.//

  –ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் சார், விசய் படத்த மொதல் நாளே பார்த்திங்க…

 3. @Balaji
  :mrgreen:

  @ila
  அதிலென்ன சந்தேகம்!!!

  @கலீல்
  இளங்கன்று பயமறியாது. ஆனா இனி சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. 😀

 4. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !

  தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

  கவிதை : ” கரிசக்காட்டுப் பொண்ணு”
  சினிமா விமர்சனம் : விஜயின் “குருவி” படக் கதை – சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க

  உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு…
  உழவன்

 5. // என் கெட்ட காலம் ஒரு அழகான பெட்டை கூட பக்கத்தில் இல்லை இல்லாவிட்டால் அத சரி நோட்டம் விட்டு நேரத்தைக் கடத்தியிருக்கலாம்.//

  கொன்கோர்ட்டில் பார்த்திருந்தால் சில பெட்டைகள் பக்கத்திலிருந்திருக்கலாம். நானும் முதல் நாள் முதல் காட்சி போகவிருந்தேன் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் போகமுடியவில்லை. நல்ல காலம் தப்பிவிட்டேன்.

  வெகுவிரைவில் திரைக்கு வந்தே சில மாதங்களான சூப்பர் ஹிட் அதிரடித் திரைப்படம் உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்.

 6. I made that resolution long time ago (that I will not watch Vijay, Ajith, Rajini’s movies without reading the reviews first)

 7. கஜினி பார்த்து இருந்தால் இன்னும் தலை சுற்றி இருக்கும். நல்ல வேளை தப்பித்தீர்கள். 🙂

 8. அப்பா… முடியலை…

  மேஜர் சரவணன்… என்ன கொடுமை சார் இது…. ?????

  கடவுளே… இந்த 2009ல் நல்ல புத்தி கொடுப்பா..

Leave a Reply