தைப்பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் இலங்கை வென்றது

இன்று நீண்ட நாட்களின் பின்னர் கிரிக்கட் ஆட்டத்தை ஆபீஸில் ஆணிபுடுங்கும் நேரத்தில் இருந்து பார்த்தேன். மட மட என விக்கட்டுளைச் சாய்த்த இலங்கை இந்தியாவை 200 ஆட்டங்களுக்கு முன்னரே சுருட்டும் என்று எதிர்பாரத்தாலும் எதிர்பாராவண்ணம் றைனா இலங்கைக்கு பால் காய்ச்சினார்.

ஒருவாறாக 100 எடுத்து றைனா வெளியேற மிஞ்சியிருந்தவர்கள் சுமார் 245 வரை இழுத்து இழுத்து சென்றுவிட்டார்கள். இலங்கை துடுப்பாட்டம் சொதப்பக்கூடியது என்பதால் நான் அவளவாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை. ஆயினும் காங்கோன் இலங்கை அணி வெல்லும் என்றும் சங்க்காரவை புகழ்ந்தும் ட்விட்டரில் ட்விட்டிக்கொண்டிருந்தார்.

நல்லவிதமாக சங்கா மற்றும் மஹேல சேர்ந்து இலங்கையை வெற்றைவாகை சூட வைத்தனர். இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி 😉

இலங்கை தோற்றதில் கிளு கிளுப்பான சிலர் வீதியில் இனிப்பு வழங்கச் சென்று அடிவாங்கியதாக அரசல் புரசலாக ட்விட்டரில் செய்திகள் அடிபடுகின்றது.

பொங்கல் சிறப்பு அவதார்

இன்று இலங்கையில் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களும் தமிழகத்தில் இருக்கும் கருனாநிதி பக்தர்களுக்கு புத்தாண்டுவாழத்துக்களையும் சொல்லிக்கொள்கின்றோம்.

புது வருடம் புது களங்கள் பல கண்டு வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பி.கு: மேலே உள்ள பொங்கல் சிறப்புப் பட உபயம் யாகூ அவதார்

4 thoughts on “தைப்பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் இலங்கை வென்றது”

 1. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் கிண்டல் கலக்கல் நன்றாக ரசித்தேன்.

 2. ஆகா….இதெப்ப நடந்திச்சு?
  என்ன கொடுமை இருக்கிறம் இது….

  கன்கொன் யாரிற்றயும் அடிவாங்கேல…. அவன் பாவம்….. :'(

  வெண்டிற்றாங்கள் என்ர ராசிக்கு…
  வென்றது எனக்கும் மகிழ்ச்சி, அதுவும் இந்தியாவை வீழ்த்தியது இன்னும் மகிழ்ச்சி….

  புது ரெம்ப்ளற் நல்லா இருக்குத்தான்…. 🙂

Leave a Reply