தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார்

தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.

அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.

 அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.

http://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் காணுங்கள்!!!

 இத்திட்டத்தை முன்னின்று நடத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

வாழ்க தமிழ்! வாழிய தமிழ் கணனியியல்!!!

6 thoughts on “தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார்”

 1. //தமிழ் வேர்ட்ப்ரெஸ் வந்தார்//

  இதையும் harry potter character மாதிரி ஆக்கிட்டீங்களா 🙂 ஏனோ ப்ளாகரிடம் வராத பாசம் வேர்ட்ப்ரெஸிடம் வருகிறது

  //எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.//

  அது !

 2. எங்களுக்கு வேண்டுமான வகையில் மாற்றியமைக்க அனுமதி வழங்கும் தன்மையே இந்த வேர்ட்பிரசின் அழகு அது பிளாக்கரில் இல்லை. அதுதான் ஹரி மேல் இருக்கும் அன்பு வேர்ட்பிரஸ் மேலும் உள்ளது. 😎

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கல்வெட்டு 😛

 3. ஊரைக் கூட்டியதற்கும் ஊர்கூடி தேர் இழுத்து சிறப்பாக நடத்தியமைக்கும் பாராட்டுக்கள்!!

Leave a Reply