தமிழ் மணத்தில் படம் காட்டுவது எப்படி???

தமிழ் மணத்தில் படம் காட்டினால்தான் நல்லா ஹிட்ஸ் எடுக்கலாம் என்று யாரோ ஒரு குருவி முன்னொரு காலத்தில சொல்லிச்சுது. நான் சொல்ல வர்றது அந்தப் படம் இல்லை. அது வேற இது வேற 😉

தமிழ் மணத்தில் உங்கள் பதிவை இணைத்தவுடன் உங்கள் பதிவு முகப்பு பக்கத்தில் தெரியுமல்லவா? அப்போது அதன் அருகே உங்கள் படம் தெரியவில்லையா??? அப்படியானால் எப்படி படம் காட்டுவது என்று கேட்கின்றீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.

number

க்ரவட்டார் எனும் தளத்தில் (இப்போது க்ரவட்டாரை வேர்ட்பிரஸ் வாங்கிவிட்டது) உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து அதற்கு ஒரு சின்னப் படத்தையும் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது தமிழ் மணம் மட்டும் அல்ல க்ரவட்டார் பயன்படுத்தும் பல ஆயிரம் வேர்ட்பிரஸ் தளங்கள் மற்றும் க்ரவட்டார் பயன்படுத்தும் ஏனைய தளங்களிலும் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தினால் இந்த குட்டிப் படத்தைக் காட்டும்.

க்ரவட்டார் செய்துவிட்டு எனது தளத்தில் மறுமொழி போட்டுப் பாருங்கள் உங்கள் அவதாரம் தெரியும்.

5 thoughts on “தமிழ் மணத்தில் படம் காட்டுவது எப்படி???”

  1. நான் ஏற்க்கனவே க்ரவட்டார் தளத்தில் படத்தை தரவேற்றி வைத்திருக்கிறேன் … ஆனால் படம் காட்ட முடியவில்லை ஏன்ன காரணமாக இருக்கலாம்…

  2. நான் ஏற்க்கனவே க்ரவட்டார் தளத்தில் படத்தை தரவேற்றி வைத்திருக்கிறேன் … ஆனால் படம் காட்ட முடியவில்லை ஏன்ன காரணமாக இருக்கலாம்…

  3. தோழர்களே,
    நீங்கள் தமிழ் மணத்தில் இணையும் போது கொடுத்த மின்னஞ்சலுக்கும் க்ரவட்டார் சேர்த்துவிடுங்கள். நீங்கள் அங்கே கொடுத்த மின்னஞ்சல் வேறு இங்கே மறுமொழி போடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் வேறு என்றால் இங்கே படம் காட்டும் தமிழ் மணத்தில் படம் காட்டாது.

Leave a Reply