ஜூன் 15 ல் ஐபோன் (iPhone) வெளிவருகின்றது.

உலகை ஈர்த்த iPhoneஅதிகமாக எதிர்பார்க்கப்ட்ட ஐபோன் வெளியாகும் திகதி கலிபோர்ணியாவில் அமைந்துள்ள நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் விலை $499 (£251) முதல் $599 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொபைல் ஃபோனும் PDA யும் சேர்ந்த அமைப்பாகும். இந்த கருவி முழுக்க முழுக்க தொடுகையை உணர்ந்து செயற்படக்கூடியதாகும்.

விளம்பரத்திலே வீடியோ பார்த்தல், இணையத்தை துளாவுதல், விரல்களை சுட்டியாகப் பயன்படுத்தி மின்னஞ்சல் பார்த்தல் என்பன காட்டப்பட்டது. அப்பிள் கம்பனி இதன் மூலம் தொலைபேசி சந்தையிலும் தடம்பதிக்கப் போகின்றது.

iTunes music & Video களஞ்சியத்துடன் செயற்படக்கூடியதாக இருப்பதால் இன்னமும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பா, மற்றும் உலகின் மற்றய பகுதிகளுக்கான வெளியீட்டுத் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை!!!

11 thoughts on “ஜூன் 15 ல் ஐபோன் (iPhone) வெளிவருகின்றது.”

 1. ஆனால் இந்த ஐ.போன் சிங்குலர் நிறுவனத்துடன் இனைந்த க்ளோஸ்டு மார்க்கெட்டில் வருவதால் இரண்டு மாதங்கள் மந்த நிலையில் தான் இருக்கும்…

  மேலும் 500 – 600 டாலர் கொடுத்து வாங்க இயலாதவர்கள் / விரும்பாதவர்கள் LG PRADA KE850 போன்றதொரு டிவைஸை பெற்றுவிடுவார்கள்..(இன்பினியான் ப்ளாட்பார்ம் மற்றும் டச் ஸ்க்ரீன்) – (சுமார் 200 – 300 டாலர் விலையில் விற்பனையில் உள்ளது)

  மேலும் கைபேசி தயாரிப்புகளில் பழம் தின்று கொட்டை போட்ட நோக்கியா / மோட்டரோலா / சாம்ஸங் / எரிக்ஸன் / எல்.ஜி / பேனசோனிக் / பெங்குயூ – சீமன்ஸ் போன்ற நிறுவனங்கள் வாளாவிருப்பார்கள் என்று நினைத்தால் – அது தவறு…

  நோக்கியா ஏற்க்கனவே தனது டச் ஸ்கீரின் போனுக்கான ப்ரடொக்ஷன் தேதி குறித்துவிட்டது ( மற்ற விஷயங்கள் நிறுவன ரகசியம்) வெளியே சொல்ல இயலாது…

  ஐ.போன் நிறுவனம் முதல் மாதத்திலேயே கடுமையான போட்டியை எதிர்நோக்கியுள்ளது என்பது நிச்சய உண்மை…பரந்துபட்ட டீலர் நெட்வொர்க் / இந்த துறையில் பல ஆண்டுகள் அனுபவன் ஆகியவை இந்த நேரத்தில் இந்த நிறுவனங்களுக்கு கை-கொடுக்கும்…

  மேலும், இந்த நிறுவனங்கள் ஏற்க்கனவே இணைந்து நடத்தும் 3GPP / OMA (ஓப்பன் மொபைல் அலையன்ஸ்) போன்ற அமைப்புகளில் இருந்தும் சரியான வகையில் ரெஸ்பான்ஸ் கிடைக்காது…

  காரணம் இந்த நிறுவனங்களின் (நோக்கியா / எரிக்ஸன்) நெட்வொர்க்கைத்தான் உலகின் அனைத்து ஆப்பரேட்டர்களும் ( ஏர்டெல் / ஹட்ச் போன்ற) பயன்படுத்திவருகிறார்கள்…

  ஐ.பாட் விற்பனை ஒரு கோடியை தொட்டபோது நோக்கியா / மோட்டரோலா விழித்துக்கொள்ளவில்லை…ஆனால் தன்னுடைய சீட்டை பிடிக்க வரும் ஐ.போனை கண்டிப்பாக த்ரட் (Threat) என்ற நோக்கிலேயே இந்த கைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும்…

  கை பேசி மார்க்கெட் என்பது இந்த நிறுவனங்களுக்கு ப்ரட் & பட்டர் என்று கூட சொல்லலாம்..அதற்கே ஆப்பு என்னும்போது கண்டிப்பாக அதை முறியடிக்க எல்லா முயற்சிகளும் இந்த நிறுவனங்கள் மேற்க்கொள்ளும்..

  மேலும் இந்த துறையில் (கைபேசி தயாரிப்பு) புதியதாக நுழைவதால் கடைசி நேரக்குழப்பங்களால் ஜூன் வரை ப்ரொடக்ஷன்/விற்பனை தள்ளி வைக்கப்பட்டது சரி, இனிமேல் வரும் Bugs (காரணம் சந்தைக்கும் வந்தபிறகு தான் ஐ.போனின் உண்மை முகம் தெரியவரும்) எப்படி பிக்ஸ் செய்யப்படுகிறது, சந்தையின் போட்டி எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்துத்தான் ஐ.போனின் எதிர்காலம் அமையும்…

 2. நாட்டமை தேதிய மாத்து, ஐபோன் வர்ரது ஜூன் 29. சிவாஜி படம் ரிலிஸ் டேட் வெச்சி குழம்பிட்டியா நாட்டாமை. சரியான தேதிய போடு.

 3. //இது சற்றுமுன்னில் எழுதிய பின்னூட்டம்..தொடர்பாய் இருந்ததால் இங்கேயும் பேஸ்ட்…//
  நன்றி ரவி… பதிவை விட அழகான பின்னூட்டம் போட்டுள்ளீர்கள் 😉

 4. //நாட்டமை தேதிய மாத்து, ஐபோன் வர்ரது ஜூன் 29. சிவாஜி படம் ரிலிஸ் டேட் வெச்சி குழம்பிட்டியா நாட்டாமை. சரியான தேதிய போடு.//
  என்ன செய்றது.. அப்பிள் கம்பனி CEO ரஜனி படம் பார்ப்பதில்லையாம்!!! 🙂

 5. .
  நான் முதலில் பயன்படுத்திய மொபைல் NOKIA 2100,
  அடுத்தது NOKIA 6610i சமீபத்தில் NOKIA 6111 இதில் வீடியோரெக்கார்டிங்,
  புளூடூத் என சகல வசதிகளும் இருந்தது.

  இப்போதெல்லாம் இவற்றில் இருந்த ஈர்ப்பு குறைகிறது.
  சாதாரண மொபைலே போதும் என்றாகிவிட்டது.

  இதில் போய் பணத்தைப் போடுவதற்கு
  500$ க்கு அழகாக ஒரு LAP TOP வாங்கிவிடலாம்.

  என்ன சொல்கிறீர்கள் மயூர்?

  .

 6. ஜூன் 29ல் வந்துடும்னு இன்னிக்கு கூட CNNல விளம்பரம் பார்த்தேனுங்களே

 7. //என்ன சொல்கிறீர்கள் மயூர்?//
  என்னா இப்படிக் கேட்டிட்டீங்க.. நிச்சயமா.. என்னோட தெரிவும் இப்படித்தான் இருக்கும்.!!! 🙂

 8. //ஜூன் 29ல் வந்துடும்னு இன்னிக்கு கூட CNNல விளம்பரம் பார்த்தேனுங்களே//
  கடைசி நேரத்தில ஏதும் மாத்திட்டாங்களோ????

 9. மயூரேசன், இவ்வார நட்சத்திரத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

 10. //மயூரேசன், இவ்வார நட்சத்திரத்துக்கு எனது வாழ்த்துக்கள்.//
  நன்றி நண்பரே!!!!

Leave a Reply