கூகிள் குரோம் இப்போது தமிழில் கிடைக்கின்றது

தமிழ் கணனிப் பயனர்களுக்கு நல்ல ஒரு செய்தி. கூகிள் தமது குரோம் உலாவியை தமிழ் இடைமுகத்துடன் வெளியிட்டுள்ளனர். ஓ போடு!தற்போது பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா (வின்டோஸ் விஸ்டாவில் மட்டும்), தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கின்றது. ஹிந்திப் பதிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் பயர்பொக்ஸ் 2.X தமிழ் இடைமுகத்துடன் கிடைத்தது. அது தமிழா.காம் சமூகத்தினால் மொழிமாற்றம் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். பின்னர், பயர்பொக்ஸ் பதிப்பு 3.0 வெளியானது ஆயினும் அதற்கு தமிழ் இடைமுகத்தை வெளியிடவில்லை.இதேவேளையில் பயர்பொக்ஸ் 3.0 சிங்கள இடைமுகத்துடன் வெளியிடப்பட்டதைக் குறிப்பிடவேண்டும்.

பின்னர் மொரட்டுவைப் பலகலைக்கழகம் செயற்பட்டு இலங்கைத் தமிழ் இடைமுகம் ஒன்றைக் கொண்டுவந்தது. இங்கு முதலில் ஆங்கிலப் பதிப்பை நிறுவி அதில் மேல் இந்த தமிழ் இடைமுகத்தை நிறுவலாம்.

தற்போது பயர்பொக்ஸ் 3.5 தமிழ் இடைமுகத்துடன் கிடைக்கின்றது, ஆனால் இது Release candidate பதிப்பாகும். ஆகவே இதன் ஸ்திரத்தன்மை குறைவாகவே இருக்கும்.

இப்போது தமிழ் உட்பட முக்கியமான்ன இந்திய மொழிகளுக்கு கூகிள் தமது உலாவியை வெளியிட்டுள்ளனர்.

கூகிள் குரோமின் முக்கியமான உதவி பக்கங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். ஆனாலும் இவர்கள் தமிங்கல வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். கூகிளின் மொழிபெயர்ப்பிற்கு எதிராக அடிக்கடி எழுப்பபடும் புகார் இது.

நீங்களும் உங்களின் தமிழ் கூகிள் குரோம் உலாவியை குரோம் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

7 thoughts on “கூகிள் குரோம் இப்போது தமிழில் கிடைக்கின்றது”

 1. கூகிள் தமது குரோம் உலாவியை தமிழ் இடைமுகத்துடன் வெளியிட்டுள்ளனர்.
  கூகிள் தமது உலாவியை வெளியிட்டுள்ளனர்.

  மேலே உள்ள இரண்டு வாக்கியங்களும் ‘வெளியிட்டுள்ளது’ என்று இருக்க வேண்டும். பெரிய நிறுவனங்களையும் உயர்திணையாகப் பாவிக்கும் பழக்கம் தமிழனின் அடிமைப்புத்திக்கு ஒரு சான்று.

 2. @தர்மராஜ்
  😉

  @பாலா
  நான் நினைக்கின்றேன் அது மற்றவருக்கு மரியாதை கொடுக்கும் தமிழனின் பழக்கம். 🙂

 3. @மயூரேசன்

  ஆங்கில கூகிள் குரோம் நிறுவியிருந்தாலும் அதை தமிழ் இடைமுகப்புக்கு மாற்றி பாவிக்க தேவையான படிகளை பின்வரும் பக்கத்தில் காணலாம் :

  http://www.google.com/support/chrome/bin/answer.py?hl=en&answer=95415

  தற்போதைய பயர்பொக்ஸ் 3.5 க்கு இரு தமிழ் இடைமுகப்புகள் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்:

  1) மொரட்டுவ பல்கலைகழக குழுமம் (சர்வேஸ்…) ஏற்படுத்திய ta_LK கிளை.

  2) தமிழா.காம் (முகுந்தராஜ், ஃபெலிக்ஸ்…) ஏற்படுத்திய ta கிளை

  ~சேது

 4. @சேது
  ஆமாம் ஆங்கிலத்திற்கு பிருத்தானியா, அமெரிக்கா என்று பிரிவுகள் இருப்பது போல தமிழிற்கும் இப்போது இரண்டு பிரிவுகளை ஆரம்பித்துள்ளனர்.

  தமிழ் இலங்கை (சர்வேஷ்) மொழிபெயர்ப்பு, மைக்ரோசாப்ட் மொழிபெயர்ப்பில் இருந்து வேறுபட்டு இருக்கின்றது. தமிழ் (முகுந்த்) பதிப்பைப் பாவித்துப் பார்க்கவில்லை.

 5. @மயூரேசன்

  “மைக்ரோசாப்ட் மொழிபெயர்ப்பு” ? எதைப்பற்றி சொல்கிறீர்கள்?

  எனது உபுண்டு லினக்சில் பழைய 3.0 அத்துடன் அதற்கான ta_LK xpi, புதிய 3.5-ta, மற்றும் 3.5-ta_LK எல்லாம் நிறுவியுள்ளேன். வெவ்வேறு வெளியீடுகள் மற்றும் ஒரே வெளியீட்டின் வெவ்வேறு செருகல்களுடன் என எல்லாவற்றையும் சமகாலத்தில் இயக்கத் தேவையான வழிமுறைகளைப்பற்றி ஒரு வலைப்பதிவு இடவுள்ளேன்.

  ~சேது

 6. @சேது
  அருமை அந்தப் பதிவை இடுங்கள் 😉 எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  மைக்ரோசாப்டின் கலைச்சொல் களஞ்சியம் இங்கே உள்ளது. இந்த சொற்களை ta-LK பயர்பாக்ஸ் பதிப்பில் பயன்படுத்தவில்லை.

  இந்த பயர்பக்ஸ் வழு அறிக்கையை வாசியுங்கள்

Leave a Reply