எனக்கு வெட்கம்

நாலரை மணி வகுப்பு
மூன்று மணிக்கே வகுப்பில்
காதலுக்காக
ஒரு மணி நேரம்
செலவழித்தால் என்ன?

நாலரை மணி
நத்தையாய் வருகின்றது
நாலரை வருடம்
கடந்துவிட்டதாய் உணர்வு
என்னவள் வரவில்லை

காத்திருக்கின்றேன்
காதலியே
காலமெல்லாம் காத்திருபராம்
காதலர்கள்
ஒரு மணிநேரம் காக்க
மாட்டேனே என்னவளே!

நாலரை மணிக்கு
நாதஸ்வர இசைபோல
நகர்ந்து வருகின்றாள்

வைத்த கண்ணை
எடுக்க முடியவி்ல்லை
என்னதான்
நவ நாகரீகப் பெண்கள்
புரட்சி படைத்தாலும்
இவளின்
பாவாடைத் தாவணியின்
பரம இரசிகன் நான்

ஒரு பார்வை வீசி
அப்பால் நகர்கின்றாள்
அது
அன்பா? பரிவா?
இல்லை
நக்கலா?
நிச்சயம் புரியவில்லை

உயிரியல் கற்பிற்கின்றார்
ஆசிரியர்
உயிர்தாண்டி வலிக்கின்றது
அவள் நினைவு

கவனமெல்லாம் அவள்மேல்
பாடம் பப்படம் ஆகின்றது
கனவில் படம்
அவள் என்னருகில்
என் கை அவள் தோள் மேல்
கை கோர்த்து நடக்கின்றோம்
பாபிலோன் தோட்டத்தில்
என் மார்பில் முகம் பதித்து
பல கதை பேசுகின்றாள்
விழிகளில் ஏக்கத்துடன்
நோக்குகி்ன்றாள்

கண்விழித்து எழுகின்றேன்
ஒலிக்கின்றது
ஆசிரியரின் திட்டல்
அதனாலும் ஒரு நன்மை
இப்போது அவள் பார்வை
நூறு வீதம் என்மேல்

ம்ஹூம்
துணிவில்லை
நேருக்கு நேர்
அவள் கண்ணைப் பார்க்க

ஓரக் கண்ணால்
ஓரமாய்ப் பார்க்கின்றேன்
அவளும்
ஒய்யாரமாய் உட்கார்ந்து
ஓரமாய்ப் பார்க்கின்றாள்

எப்போதும் பார்க்கின்றாள்
பேச மட்டும்
மறுக்கின்றாள்
ஒரு புன்னகையாவது
உதிரக் கூடாதா??
ஒரு நேர்ப் பார்வை
வீசக் கூடாதா??
நான் என்ன படுபாதகனா?
இல்லை கொலைகாரனா?

ஆசை அவளுக்குமோ?
மனம் படபடக்கின்றது
கைகள் வியர்க்கின்றது
இதயம் சில்லிடுகின்றது
இரத்தம் பாய்கின்றது
புதுவீச்சுடன்

இன்று எப்படியும்
பேசுவது
உள்மனது வீரியம் கொள்கின்றது
அருகில் நகர்கின்றேன்
தொண்டை குழியல்
அனைத்தும் வற்றிவிடுகின்றது

கண்ணாடி முன்னாடி நின்றபோது
பேசியவை
கண்ணடித்து விட்டு மறந்துவிட்டன
மீண்டும் அவ்விடம் விட்டு நகர்கின்றேன்

ஆனால் அவளிடம்
சென்று பேச மட்டும்
என்னால் முடியாது
மனதில் இருப்பதை
அவளிடம் சொல்ல முடியாது
ஏனெனில்
எனக்கு வெட்கம்
ஆனால் நண்பர்கள் பார்வையில்
எனக்கு ஈகோ!

சுமார் இரண்டு வருடங்களுக்கும் முன்பு எழுதியது. கவிதை போல இருந்தாலும் கவிதைதான் என்று உறுதி தரவேண்டியது உங்கள் பொறுப்பு. இப்போதெல்லாம் இப்படியான கவிதைகள் வருவதில்லை. வயதாகிவிட்டது போலும்.

12 thoughts on “எனக்கு வெட்கம்”

 1. //ஆனால் அவளிடம்
  சென்று பேச மட்டும்
  என்னால் முடியாது
  மனதில் இருப்பதை
  அவளிடம் சொல்ல முடியாது
  ஏனெனில்
  எனக்கு வெட்கம்
  ஆனால் நண்பர்கள் பார்வையில்
  எனக்கு ஈகோ!//

  சரியான வரிகள் நண்பரே உலகத்திலை எந்த விடயத்தையும் பயமின்றிச் செய்யமுடியும் ஆனால் இதுமட்டும் தான் பயம் வெட்கம் எனத் தடுமாறும் அனுபவமோ, கவிதை நல்லாயிருக்கு.

 2. ரசித்தேன்!

  //கண்ணாடி முன்னாடி நின்றபோது
  பேசியவை
  கண்ணடித்து விட்டு மறந்துவிட்டன
  மீண்டும் அவ்விடம் விட்டு நகர்கின்றேன்//

  🙂

 3. பத்தரை மணி திறப்பு
  ஒன்பது மணிக்கே வாசலில்
  போதைக்காக
  ஒரு மணி நேரம்
  செலவழித்தால் என்ன?

 4. பத்தரை மணி
  நத்தையாய் வருகின்றது
  பத்தரை வருடம்
  கடந்துவிட்டதாய் உணர்வு
  டாஸ்மாக் மேலாளர் வரவில்லை(இன்னும்)

 5. காத்திருக்கின்றேன்
  திறப்பவரே
  காலமெல்லாம் போதையிலிருக்கும்
  குடிமக்கள்
  ஒரு மணிநேரம் காக்க
  மாட்டேனே போதைக்காக

 6. வைத்த கண்ணை
  எடுக்க முடியவி்ல்லை
  என்னதான்
  நவ நாகரீகப் சரக்கு
  புரட்சி படைத்தாலும்
  மானிட்டரின்
  வாசத்தின்
  பரம இரசிகன் நான்

 7. //நாலரை மணி வகுப்பு
  மூன்று மணிக்கே வகுப்பில்
  காதலுக்காக
  ஒரு மணி நேரம்
  செலவழித்தால் என்ன? //

  நல்ல கேள்வி…
  இப்போதே பழகிக் கொண்டால் தான் திருமணத்தின் பின் மனைவி அலங்காரம் செய்து முடிக்கும் வரை காத்திருக்கும் பழக்கம் வரும்.

Leave a Reply