உபுண்டுவில் µTorrent

நேற்று முன்தினம் நீண்டநாள் ஆசை ஒன்று நிறைவேறியது. அதாவது எனது ஹெச்பி பவிலியன் 9000 டிவி ல் உபுண்டு 8.10 நிறுவினேன்.

முதலில் கணனியை எப்படி பாட்டிசன் செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன். சாதாரண இயங்குதள குறுவட்டு இருந்தால் இலகுவாக இந்த வேலையைச்செய்துவிடலாம் ஆனால் பிராண்ட் கணனிகளில் இயங்குதளம் தனியே தராமல், மீளமைக்கும் வட்டுடன் தருவதனால் பிரைச்சனை.

இது பற்றிய குளப்பத்தில் இருக்கும் போது, இலங்கையின் வலைப்பதிவர் ஒருவர் உபுண்டுவில் வன் தட்டு பிரிக்கும் செயலி இருக்கின்றது. அதை இயக்கி இயங்கு தளத்தை நிறுவுக என்று கூறினார். அவர் கூற்றுப்படியே இனிதே உபுண்டு எனது கணனியில் ஏறிக்கொண்டது.

விண்டோசில் இருந்து வந்தாலும் சில மென்பொருட்களை விட்டுவருவது மிக கடினம் தானே? அப்படியான ஒரு மென்பொருள்தான் µTorrent. டொரன்ட் மூலம் பல விடையங்களை இறக்கும் எனக்கு உபுண்டுவில் உள்ளமைந்திருந்த டொரன்ட் மென்பொருள் பிடிக்கவில்லை.

இணையத்தைத் துளாவியதில் வைன் எனும் ஒரு செயலி பற்றி அறிந்து கொண்டேன். வைன் வின்டோஸ் செயலிகளை லினக்சில் இயக்க பயன்படுகின்றது.

டர்மினல் வின்டோவை திறந்து கொள்க. அதில் பின்வரும் கட்டளையை இயக்கி வைன்னை நிறுவிக்கொள்க (Application → Accessories → Terminal).

sudo apt-get install wine

இந்த கட்டளை வைனை நிறுவும். இதன் பின்னர் யுடொரண்டை நிறுவ பின்வரும் கட்டளையை டர்மினலில் இயக்குக

wget http://download.utorrent.com/1.8.1/utorrent.exe

இங்கே இருக்கும் முகவரியானது, யுடொரன்ட் தளத்தில் இருக்கும் இறுதி வெளியீட்டுக்கான பதிவிறக்க முகவரி.

உபுண்டில் யுடொரன்ட் செயலி

அம்புட்டுதேன். இப்போது டெஸ்க்-டாப்பில் யுடொரன்ட் ஐகானை காணலாம் அதை இயக்கி செயலியை லினக்சில் இயக்கிக்கொள்ளலாம்.

அல்லது பின்வரும் முறையிலும் டொரன்ட் செயலியை இயக்கலாம் Applications → Wine → utorrent

6 thoughts on “உபுண்டுவில் µTorrent”

  1. நான் Kubuntu’வை உபயோகிக்கின்றேன் – Ubuntu + KDE. அதில் KTorrent என்று ஒன்று உண்டு. எனது Bittorrent தேவைகளிற்கு அது அந்தமாதிரி வேலைசெய்கின்றது. அது KDE’யுடன் இணைந்த (native) மென்பொருள் என்பதால், Wine’ற்குள்ளால் போகவேண்டிய தேவையற்ற செயற்பாடு (overhead) இல்லை.

  2. சிலர் மியூரொடண் தான் வேணும் என்று நிற்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

    உபுண்டுவில் ஊட ஒருங்கிணைந்த ஒரு பிட்டொரண்ட் செயலி உள்ளது.

  3. மியூரொரண்ட்தான் வேணும் எண்டு நிக்கிறதுக்கு காரணம் இருக்குது. நான் சொல்லவந்தது என்னவெண்டால், நான் பயன்படுத்திற கேரொரண்ட்டும் கிட்டத்தட்ட அவ்வளவு வசதிகளைக் (features) கொண்டிருக்கிறது என்பதுதான்… 😉

Leave a Reply