இலங்கை பதிவர் சந்திப்பு – 2009

பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.

Blogger Birthdayஇந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.

பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே பயன்படுத்துவது அவர்கள் பேசும்போது தெரிந்த்து. இது என்போன்ற வேர்ட்பிரஸ் வலைப்பதிவருக்கு வருத்தமளிப்பதாக இருந்தாலும் பிளாக்கர்.காம் போல வேர்ட்பிரஸ்.காம் பல இலவச சேவைகளை தரவில்லை என்பது கவலையான உண்மையே!!! ஒரே தீர்வு தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவுவதுதான்.

நிகழ்வு தொடங்கியதில் இருந்து முடியும் வரை புல்லட்டு வைத்த மொக்கைகள் தாங்காது. தொடங்கியதில் இருந்து வடை சாப்பிட வந்தவர்கள் முதல் உண்டியல் பெட்டி திறந்தமை வரை ஒரே சரவெடி. 😉

நிகழ்வில் நேரம் போதாமல் போனது கண்கூடு. நான்கூட சில கருத்துக்களைச் சொல்ல விழைந்தாலும் நேரம் இடம் கொடுக்கவில்லை. என்றாலும் அனைத்து சக வலைப்பதிவுலக உள்ளங்களை சந்தித்தமை பெரும் சந்தோஷமே.

தட்டச்சு முறைகள் பற்றி காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது மயூரன் சொன்னார், நயந்தாராவா நமீதாவா போன்ற தலைப்புகளுக்கு சமனாக பாமினியா, தமிழ் 99 ஆ என்ற தலைப்பும் பட்டை கிளப்பும் என்று. நான் பாமினியில் இருந்து தமிழ் 99க்கு மாறிய போது எழுதிய கட்டுரையை வாசியுங்கள் உண்மைபுரியும்.

இதைவிட யாழ்தேவி திரட்டி பற்றியும் காரசாரமாக வலைப்பதிவர்கள் முட்டி மோதிக்கொண்டார்கள். யாழ்தேவி என்ற பதம் ஒரு பிரதேசத்தை வட்டமிட்டுக் காட்டுவதாக பல வலைப்பதிவர்கள் முறைப்பட்டுக் கொண்டார்கள்.

இதைவிட வலைப்பதிவு எழுதி பொலீஸ் தன்னைப் பிடித்தது எனும் பகீர் தகவலையும் ஒரு நண்பர் வெளியிட்டு அடிவயிற்றில் புளியைக் கரைத்தார்.

இன்னுமொரு விடையம் ஆண்டு 6 கற்கும் ஒரு இளைய பதிவர் வந்து கலக்கினார். தந்தையைப் பின்பற்றி சிறுவர் வலைப்பதிவை ஆரம்பித்தாலும் இப்போது தந்தைக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்யுமளவிற்கு உயர்ந்துவிட்டாராம். பெயர் ஞாபகம் இல்லை. இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

முக்கியமான இன்னுமொரு விடையம் ஊடக கல்லூரி மாணவர்கள் சிலர் வந்திருந்தனர். அனைவரும் வேர்ட்பிரஸ்.காம் தளத்தை வைத்திருந்தமை மனதிற்கு நிம்மதி. இணையத்தில் கட்டுரைகளை சுட்டுவிட்டு நன்றி இணையம் என்று மட்டும் போடும் பத்திரிகைகளையும் சாடி பேசிய மயூரன் இப்படி செய்யவேண்டாம் என்று ஊடக கல்லூரி மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

அடுத்த முறை வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் போது லோஷன் சொன்னமாதிரி குளு குளு அறையில் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சந்திப்பாக இருக்கட்டும். இதன் மூலம் வலைப்பதிய புதிதாக வரும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கான என் பங்களிப்புகள் அடுத்த முறையிருக்கும்.

பி.கு: கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தை தமிழ் சங்கம் மண்டபத்திற்கு இலவசமாக காரில் கூட்டிச்சென்ற சேது அவர்களுக்கு மிக்க நன்றி.

10 thoughts on “இலங்கை பதிவர் சந்திப்பு – 2009”

 1. அருமை! நேரடியாகப் பங்குபற்றாவிட்டாலும் உங்களைப் போன்றவர்களின் உதவிகளுக்கு நன்றிகள்!

 2. மயூரேசன்,

  உங்களை பார்த்தது மகிழ்ச்சி, 80 பதிவர்களையும் நினைவில் வைக்க முடியவில்லை. அடுத்த சந்திப்பில் மீண்டும் ஆரோக்கியமான கருத்துக்களுடன் இணைவோம்.

  blog என்றாலே blogger என்று கதைத்தது சிறிது உறுத்தியதுதான்..

  பிரியமுடன்,
  கௌபாய்மது

 3. மயூரன் கும்பல்கள் ஒரேயடியாக கூடியிருந்தமை இந்த நிகழ்வுக்கு இன்னமும் சிறப்பு சேர்த்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்…!

 4. மயூ உங்கள் பதிவிற்க்கும் வசந்தனில் வலையில் நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்க்கும் பின்னர் கொஞ்சம் விரிவான விளக்கம் தருகின்றேன்.

 5. முதல் சந்திப்பே அசத்தல், எதிர் பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதொடு நல்ல பல விடயங்களும் பேசப்பட்டு இருக்கின்றன, ஏற்பாடு செய்த நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

 6. மு.மயூரன், வந்தி மயூரன், சீ.கே மயூரன், மயூரேசன், மயூரநாதன்… இவ்வாறு மயூப் பதிவர்கள் சந்திப்பு என்று கூட ஒழுங்கு பண்ணலாம் போல கிடக்குது.. 🙂

 7. டுத்த முறை வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் போது லோஷன் சொன்னமாதிரி குளு குளு அறையில் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சந்திப்பாக இருக்கட்டும்.//

  அப்படி நடத்த முயற்சிப்போம்

 8. @தங்க முருகன்
  வரவிற்கும் கருத்திற்கு நன்றி நண்பரே.

  @கௌபாய் மது
  நன்றி. உங்களையும் பல புதிய வலைப்பதிவர்களையும் கண்டதில் பேரானந்தம். மீண்டும் அடுத்த முறை சந்திப்போம்.

  @நிமல்
  ஆமாம் நிமல்.. உங்கட பேரில யாருமே இல்லை அதனால இந்த வயித்தெரிச்சலோ?? இதுவும் புனைபெயர் வைக்க இன்னுமொரு காரணமாக்கும்.

  @வந்தி
  நன்றி. பரவாயில்லை. 😉 ஆறுதலாக எழுதுங்கள் அவசரமில்லை.

  @ஷந்துரு
  ஆமாம் நிச்சயமாக. அருமையாக நடந்து முடிந்த்து. நடத்திய சிங்கங்களுக்கு நன்றிகள்.

  @யோ
  ஹி..ஹி.. நம்புவோம் 😉

 9. கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் ஒருங்கிணைத்தோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 🙂

 10. உங்கள் வருகையும் மேலும் சந்திப்பை இனிதாக்கியது..

  சுருக்கமாக உங்கள் பதிவு முக்கிய விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ளது..
  நீங்கள் முக்கியமான விஷயம் ஏதாவது சந்திப்பில் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்..

  போகிற போக்கில் wordpress பதிவர்கள் சந்திப்பொன்றை நடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா? 😉

  Blogger பயன்படுத்துவோரை சிறப்பு விருந்தினராக அழையுங்கள்.. 🙂

Leave a Reply